Onion price go high in India இந்தியாவில் வரலாறு காணாத வகையில் வெங்காயத்தின் விலை உயர்ந்ததையடுத்து ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத அளவில் கிலோ ஒன்றுக்கு ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.56 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.60 ஆகவும், சென்னையில் ரூ.75ஆகவும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அடுத்த 15 நாட்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், நுகர்பொருள் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து கே.வி.தாமஸ் கூறுகையில், வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் டன்னுக்கு 650 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சமாளித்து வெங்காய வரத்து அதிகரிக்க செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தனியார்…
Read More நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை!!!Category: செய்தி சிறகுகள்
பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும்: பிரதமர் மன்மோகன் சிங்
Prime Minister Manmohan Singh has said that globalization is not going to abandon the policy. டில்லியில் ரிசர்வ் வங்கி தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் , இந்திய பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் கொள்கை திரும்ப பெறப்பட மாட்டாது என்று கூறினர் . 1991-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி யாக இருப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் அந்நிய செலவாணி விகிதம் ஒரே நிலையாக இருந்தது, தற்போது இது சந்தைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுவதால் அந்த சூழல் எழாது. ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்திவிட்டாலே இது சரியாகிவிடும் என்று பிரதமர் தெரிவித்தார் . 1991ல் ஏற்பட்ட நெருக்கடியின்போது நம்மிடம் 15 நாட்களுக்கு மட்டுமே அன்னியச் செலாவணி கையிருப்பு இருந்ததாகக் கூறிய பிரதமர்,…
Read More பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும்: பிரதமர் மன்மோகன் சிங்வீராணம் ஏரி நாளை திறப்பு
Viranam Lake opening tomorrow சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935 மில்லியன் கன அடி நீர் உள்ளதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து நாளைமுதல் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Viranam Lake opening tomorrow இதையும் படியுங்கள் பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும்: பிரதமர் மன்மோகன் சிங் நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை!!! அவதூறாக…
Read More வீராணம் ஏரி நாளை திறப்புஅவதூறாக செய்தி ஒளிபரப்பிய கேப்டன் டிவி ஊழியர்கள் மீது வழக்கு
முதல்வர் குறித்து அவதூறாக செய்தி ஒளிபரப்பியது தொடர்பாக கேப்டன் டிவி ஆசிரியர் உள்பட மூன்று பேர் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேப்டன் டிவியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் குறித்து செய்தி ஒளிபரப்பானது. அதில், முதல்வர் குறித்தும், மக்கள் பணம் ரூ. 7.25 கோடியை தேவை இல்லாமல் செலவழிப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி ஆதாரம் இல்லாமலும், உறுதிப்படுத்தாமலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது, முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது என்று கூறி முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் எம்.கே.அசோகன் ஆகிய இருவரும் கேப்டன் டிவி செய்தி வாசிப்பாளர் மைதிலி கண்ணன், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த…
Read More அவதூறாக செய்தி ஒளிபரப்பிய கேப்டன் டிவி ஊழியர்கள் மீது வழக்குநேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா? நரேந்திரமோடி சவால்
இந்திய திருநாட்டின் பண மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின் தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என்றும், தற்போதைய வெளியுறவு கொள்கை சரியில்லை என்றும், இந்தியாவில் சாதித்தது என்ன , வளர்ச்சிப்பணிகள் நடந்தது என்ன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என குஜராத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து மாநில முதல்வரும் , பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவருமான மோடி பேசுகையில் குறிப்பிட்டார். பிரதமரின் சுதந்திர தின உரை திருப்தியாக இல்லை. இவரது பேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை மறந்தது ஏன் ? அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் கடும் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இவரது பேச்சு ஒரு குறிப்பிட்ட குடும்ப நலனில்…
Read More நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா? நரேந்திரமோடி சவால்விமானத்தை விட வேகமாக செல்லும் வாகனம் விரைவில் அமெரிக்க அறிமுகம்
போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார். மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃபிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி…
Read More விமானத்தை விட வேகமாக செல்லும் வாகனம் விரைவில் அமெரிக்க அறிமுகம்நாமக்கலில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை
Dowry harassment in Namakkal -The young girl committed suicide நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெருமாள்கோயில் மேட்டைச் சேர்ந்த மாதேஸின் மகன் சோமசுந்தரம் (32) சேலம் வருமானவரித்துறை அலுவலக தாற்காலிக கார் ஓட்டுநர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சிற்றுந்து ஓட்டுநராக பணியாற்றிய போது ராசிபுரம் அருகே ஓ.சௌதாபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகள் அகிலா(20) என்பருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் நாமக்கல் அருகே முருகன்கோயில் பகுதி என்ஜிஜிஓ காலனியிலுள்ள வனஅலுவலர் வரதராஜன் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தனர். இவர்களுக்கு ஒன்னரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளில் வரதட்சணை கேட்டு மனைவியை, சோமசுந்தரம் கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அகிலா கொடுத்த புகார்படி போலீஸார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி…
Read More நாமக்கலில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை67-வது சுதந்திர தின கொண்டாடம்
67 INDEPENDENCE DAY CELEBRATION 67-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மன் மோகன் சிங் செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். காலை 7.30 மணி அளவில் செங்கோட்டைக்கு வந்த பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வரவேற்றார். இதனையடுத்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார். 21 குண்டகள் முழங்க பிரதமர் மூவர்ணக் கொடியேற்றினார். இதனையடுத்து பிரதமர் மன் மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திவருகிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…
Read More 67-வது சுதந்திர தின கொண்டாடம்நடிகர் விஜய் தொலைக்காட்சில் நேரடியாக உணர்வுகள் பகிர்வு
Actor vijay in television தலைவா படம் நாளுக்கு நாள் பல பிரச்சனையில் சிக்கி வரும் நிலையில் இன்று நடிகர் விஜய் தொலைக்காட்சி வாயிலாக நேயர்களுடன் தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் அவர் கூறுகையில் தலைவா படம் தமிழ்நாட்டை தவிர இந்தியாவில் அனைத்து இடத்திலும்(கேரளா, கர்நாடக, ஆந்திரா, வடஇந்தியா)வெளிவந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் திருட்டு டிவிடி மூலம் படம் தமிழ் நாட்டில் பரவி வருகிறது இது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது, மிகந்த சிரமத்திலும் பெரிய பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட திரைப்படம் ரசிகர்களாகிய நீங்கள் தமிழ் நாட்டில் வெளியாகும் வரை தயவு செய்து பொறுமை காக்கவேண்டும் தமிழ் நாட்டில் இந்த படத்தை வெளியிட முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு உள்ளோம் அது கிடைத்து இப்படம் இங்கு விரைவில் வெளியிடப்படும் அது வரை யாரும் திருட்டு…
Read More நடிகர் விஜய் தொலைக்காட்சில் நேரடியாக உணர்வுகள் பகிர்வுநுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு
High voltage electricity to consumers using electrosection Time Reduction தமிழகத்தில் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் இன்று முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரம் தவிர மற்ற நேரங்களில் இன்று முதல் மின்வெட்டு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை தற்போதுள்ள 90 சதவிகித மின்வெட்டு 40 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதி வரை இது அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு மின்இருப்பைக் கருத்தில் கொண்டு மின்வெட்டு நேரம் தீர்மானிக்கப்படும் என்றும்…
Read More நுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு