வீராணம் ஏரி நாளை திறப்பு

 Viranam Lake opening tomorrow

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து  நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935 மில்லியன் கன அடி நீர் உள்ளதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து  நாளைமுதல் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Viranam Lake opening tomorrow

 

Related posts