ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் முதல் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரசாரம் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளதால் காங்கிரஸ், பா.ஜ.கவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2087 பேர் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 733 பேர் களத்தில் உள்ளனர்.
இவர்களது வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் 346 பேர் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தலா 199 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன.
இதில் பா.ஜ.க.வின் 199 வேட்பாளர்களில் 150 பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை போல காங்கிரசின் 199 வேட்பாளர்களில் 139 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் 190 வேட்பாளர்களில் 35 பேர் கோடீசுவரர்களாக உள்ளனர்.
கோடீசுவரர் வேட்பாளர்களில் காங்கிரசை சேர்ந்த விஸ்வேந்திர சிங் ரூ.118 கோடி சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் பிரேம்சிங் ரூ.83 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
மொத்தம் உள்ள 2087 வேட்பாளர்களில் மிகவும் ஏழை வேட்பாளராக சஞ்சய் பன்ட்லே என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அவரது மொத்த சொத்து மதிப்பே ரூ.5 ஆயிரம் தான் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களில் 111 பேர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 66 பேர் பயங்கர கிரிமினல் குற்றவாளிகள் ஆவார்கள். பா.ஜ.க.வின் 199 வேட்பாளர்களில் 31 பேரும் காங்கிரசின் 199 வேட்பாளர்களில் 28 பேரும் பயங்கர கிரிமினல் குற்றவாளிகள் ஆவார்கள். பகுஜன்சமாஜ் வேட்பாளர்களில் 26 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 37 வேட்பாளர்களில் 15 பேர் பயங்கர கிரிமினல் குற்றம் செய்தவர்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
Rajasthan assembly elections: 111 candidates with criminal records to contest polls and 346 candidates well rich
இதையும் படியுங்கள்
- திருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!
- உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி
- திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம். தீவிர சிகச்சை பிரிவில் அனுமதி
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: சாமானியர்களை புறம் தள்ளும் சட்டமும் காவல் துறையும்-ஸ்ருதிக்கு நீதி ஜோதிக்கு எங்கே?
அடுத்த செய்தி →: வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதி

