டெல்லி: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் ப்ரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் , கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.தடைகளையும், கட்டுப்பாடுகளையும் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. இரண்டு வாரங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டும்,இல்லையென்றால் உச்சநீதிமன்றம் தலையிடும் நிலைமை ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
இதையும் படியுங்கள்
- மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது
- கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு- சென்னை உயர்நீதிமன்றம்
- ஊதிய உயர்வு கோரிய துப்புரவுப் பணியாளர்கள் வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: ஊதிய உயர்வு கோரிய துப்புரவுப் பணியாளர்கள் வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
அடுத்த செய்தி →: மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது

