சென்னை: தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வின் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்த்தன. இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.தமிழ் மற்றும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதால் பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. பிறகு மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.மனு விசாரணைக்கு வந்தபோது தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணம் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
இதையும் படியுங்கள்
- கொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில்
- ஒரு மாதத்துக்குள் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: கொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில்

