Stalin supports actor vijay நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், கேள்வி: விஸ்வரூபம், தலைவா பட சிக்கல் குறித்த கருத்து பதில்: கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை. ஆனால் விஸ்வரூபம் எடுப்பவர்களையும், தலைவராகக் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும், தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட அஸ்திரம் அது. எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள், பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால், உனக்கு அது என்ன லாபமா? என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா, இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை!…
Read Moreஆப்கன் பார்லிமென்ட்டில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு
Afghanistan: Karzai passes legislation to reserve seats for Hindus and Sikhs in National Assembly ஆப்கானிஸ்தானில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மக்களுக்கும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபையில் சிறப்பு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படி தனியாக சிறப்பு இருக்கைகளை ஒதுக்க முடியாது என ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது 250 ஆக இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இனி ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் செயல்படாத வேளைகளில் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிடும்…
Read More10 ஆண்டுகளில் குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம்
793 deaths in ashram schools across Maharashtra in 10 years கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஐகோர்ட் நீதிபதிகள் பி.வி.ஹர்தாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது விளக்கம் அளிக்கவும், இது போன்ற மர்மமான முறையில் நடைபெறும் மரணங்களை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. விசாரணையின் போது…
Read More103 வயது தாத்தாவுக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை
103 year old man gets hip replaced 1910ம் ஆண்டில் சஹீராபாத்தில் பிறந்த மணிக்யம் என்பவர் கடேஸ்கர் என்ற இடத்தில் தனது மகனுடன் வசித்து வருகின்றார். 103 வயதான இவருக்கு 9 பிள்ளைகளும், 57 பேரப்பிள்ளைகளும், 20 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உண்டு. மூன்று வாரங்களுக்கு முன்னால், தெருநாய் ஒன்றை விரட்டியபோது கீழே விழுந்த இவருக்கு இடது பக்க இடுப்பெலும்பு மூட்டு உடைந்து வலியுடன் செகந்தராபாத்தில் உள்ள அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயது காரணமாக அவருக்கு மயக்க மருந்து கொடுப்பது என்பது கூட சவாலான விஷயமாக இருந்தது. ஆயினும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் டாக்டர் மிதின் அசியுடன் இணைந்த மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையினை நடத்தி முடித்தது. இந்தத் தகவலை நேற்று மருத்துவமனையில் நடந்த நிருபர்கள்…
Read Moreநோக்கியா நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
Microsoft buys Nokia உலகின் முன்னணி கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளது. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்கவிட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோக்கியாவின் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. அதாவது 7.17 பில்லியன் டொலர்களுக்கு நோக்கியாவை வாங்குகிறது. மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Microsoft and Nokia today announced that the “Boards of Directors for both companies have decided to enter…
Read Moreவெளிநாட்டவர்கள் தேடி அலையும் முகப்பொலிவு தரும் சோற்று கற்றாழை
sothu kathalai aloe vera இந்தியர்கள் அயல்நாட்டிற்கு தாரை வார்த்த பல மூலிகை மருத்துவ செடிகளில் இதுவும் ஒன்று, நமது கிராமங்களில் வீட்டிற்கு பின் புறம் தேவை இல்லாமல் வளரும் செடியாக ஒரு நேரத்தில் கற்றாழை இருந்து வந்தது அதே நேரம் சிலர் அதனை வீட்டிற்கு முன்னால் திருஷ்டிக்காக தொங்க விடுவர் அதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை தெரிந்து இருந்த தமிழர்கள் அதனை மறந்து விட்டனர். வெளிநாட்டவர்கள் இன்று அதனை தேடி அலையும் வேளையில் நமது நாட்டு கற்றாழை இன்று இங்கும் இல்லை. அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் அலோவேராவும் (கற்றாழை) ஒன்று. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல் பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாழை மூலிகையாக பயன்படுகிறது. கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாழை. கற்றாழையை தோல்,…
Read Moreபெங்களூர் சிறையில் இட்லி தோசைக்கு விலை போகும் அதிகாரிகள்
idli dosa as bribe for Police in Bangalore பெங்களூர் சிறையில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வார இறுதியில் வெளியே சென்று வரும் செய்தி அம்பலமாகியுள்ளது. கற்பழிப்பு குற்றவாளியான ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகமுள்ள பெங்களூர் அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தப்பியோடினான் . அவன் தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ உதவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறையில் நடக்கும் ரகசியங்கள் குறித்து தெரியவந்துள்ளது. தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் 2012ம் ஆண்டில் 83 நாட்கள் பெங்களூர் சிறையில் இருந்துள்ளார். அப்போது அவர் இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மறுநாள் அதிகாலையில் சிறைக்கு திரும்பிவிடுவாராம். சில நாட்கள் அந்த அரசியல்வாதியை சிறையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார்களாம். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வாராம். மறுநாளை காலை சிறைக்கு சென்றுவிடுவாராம். இதற்காக…
Read Moreசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்-அமரிக்க சோனியாவுக்கு சம்மன்
Sikh rights group filed a complaint against Congress President Sonia Gandhi in US Court. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, 1984ம் ஆண்டு நாடெங்கும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக சீக்கியர்களுக்கான நீதி என்ற மனித உரிமை அமைப்பினர் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘கலவரத்தை திட்டமிட்ட கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்டோரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார். எனவே இந்த கலவரத்தில் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்பு, மன உளைச்சல், பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியாவிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும்’ எனகூறப்பட்டுள்ளது. இதை நேற்று விசாரித்த நீதிபதி, சோனியாவுக்கு சம்மன் அனுப்பவும், 120 நாட்களுக்குள் அதை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். Sikh rights group filed a complaint against…
Read Moreகருப்பைபுற்றுநோய் பாதித்த பெண் இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பம்
Australian team creates IVF history with ovarian tissue transplant ஆஸ்திரேலியாவில் கருப்பை புற்றுநோய் பாதித்தால் தாயாக இயலாத நிலையில் இருந்த ஒரு பெண்ணிற்கு புதிய மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்ததால் அவர் தற்போது இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பமாக உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் புற்றுநோய் பாதித்தது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டதால் வலியால் எப்போதும் தாயாக முடியாத நிலை ஏற்பட்டது.. 26 வயதான அப்பெணிற்கு மருத்துவர்கள் உதவ முயன்றனர். அதன்படி, வலிக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை செய்தபோது வெட்டியெடுக்கப்பட்ட கருப்பையின் நோய் தாக்காத பகுதியின் திசுக்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் அவருக்கு கருமுட்டை வளருவதற்கு மருத்துவர்கள் முயற்சித்தனர். கருப்பை திசு மாற்று சிகிச்சைக்கு பிறகு சில வருடங்களின் தொடர் முயற்சிக்குப் பின், தற்போது வலி 26 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவர் இரட்டைக்…
Read Moreபாலியல் குற்றவாளி ஏரியல் காஸ்ட்ரோ சிறையில் தற்கொலை
Cleveland kidnapper Ariel Castro found hanging in prison cell மூன்று பெண்களைக் கடத்தி வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 1000 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ என்ற கைதி சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அமெரிக்கா, ஓஹையோ மாநிலத்தில் வாழ்ந்து வந்த ஏரியல் காஸ்ட்ரோ (53) என்ற ஆசாமி, கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கடத்திச் சென்று வீட்டுச்சிறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏரியலின் கட்டுப்பாட்டில் சிறை பட்டுக்கிடந்த அவர்களில் ஒரு பெண், கடந்த மே மாதம் அங்கிருந்து தப்பினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியல் கைது செய்யப்பட்டான். பின்னர், வீட்டில்…
Read More



