வெளிநாட்டவர்கள் தேடி அலையும் முகப்பொலிவு தரும் சோற்று கற்றாழை

sothu kathalai aloe vera

இந்தியர்கள் அயல்நாட்டிற்கு தாரை வார்த்த பல மூலிகை மருத்துவ செடிகளில் இதுவும் ஒன்று, நமது கிராமங்களில் வீட்டிற்கு பின் புறம் தேவை இல்லாமல் வளரும் செடியாக ஒரு நேரத்தில் கற்றாழை இருந்து வந்தது அதே நேரம் சிலர் அதனை வீட்டிற்கு முன்னால் திருஷ்டிக்காக தொங்க விடுவர் அதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை தெரிந்து இருந்த தமிழர்கள் அதனை மறந்து விட்டனர். வெளிநாட்டவர்கள் இன்று அதனை தேடி அலையும் வேளையில் நமது நாட்டு கற்றாழை இன்று இங்கும் இல்லை. அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் அலோவேராவும் (கற்றாழை) ஒன்று. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல் பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாழை மூலிகையாக பயன்படுகிறது. கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாழை.

கற்றாழையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாழையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாழையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல செயல்பாட்டு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதை அழகுக்கு பயன்படுத்தும் க்ரீமாகவும், முகம் கழுவும் போது உபயோகிக்கும் பேஸ் வாஸாகவும் பயன்படுத்தலாம்.

இது தோலுக்கு ஈரப்பதம் ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்துகின்றனர். கற்றாழை ஜெல்லில் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ளதால் சருமத்தை இளமையாக்கி, உங்களின் சருமத்தை எந்த நேரங்களில் பார்த்தாலும் புதியதாக தோற்றமளிக்கும் தனமையை கொண்டுள்ளது. கற்றாழையில் எதிர்ப்பு நுண்ணுயிர் பண்புகளை கொண்டுள்ளதால் முகத்தில் தோன்றும் ஆக்னோ, பருக்கள் வராமல் தடுக்கும். இதில் இயற்கையாக நிகழ்வதற்கெதிராக எதிர்ப்பு ஆக்சிஜனேற்றத்தை கொண்டுள்ளதால் வயது மூப்பிலிருந்து சருமத்தை தக்கவைத்துக்கொள்கிறது. கற்றாழை உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஏற்படக்கூடிய வலிகளையும், வீக்கங்களையும் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. இது மருத்துவரீதியாக எரிகாயங்கள், பூச்சி கடி, எக்ஸிமா, வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது. வீட்டிலேயே கற்றாழை பயன்படுத்தி ஜெல் தயாரித்து ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து முகத்திறக்கு அவ்வப்போது பயன்படுத்தலாம்.

Aloe-Vera-Usage-Benifits-111250233066269

Aloe leaves with two flasks with oil as closeup on white background

aloe-vera-benefits1

alovera-FP-110617

news sothu kathalai aloe vera

aloe vera sothu kathalai  are broadly used as medicine, cosmetics, for it’s excellent properties of   soothing, healing, and rejuvenating.

Related posts