டெல்லி: அயோத்தி நிலச் சர்ச்சை வழக்கு அலகாபாத் உயநீதிமன்றத்தில் நடைபெற்றது.அந்த வழக்கில் சர்ச்சைக்குறிய நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ளும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்காக 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது. வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு பற்றி கேட்டனர்.மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு தொடர்பாக தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். மத்தியஸ்த குழுவுக்கு ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.
Read MoreYear: 2019
மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பொறியியல் படித்து வந்தார்.அவர் படிக்கும் போது வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த வந்தார் .இவர் 2015ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுதாக்கல் செய்தார் .அந்த மனுவில் வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவு விட குறிப்பிட்டுள்ளது.அதுமட்டும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி விட்டதாகவும், நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த மனுவை விசாரித்த…
Read Moreமுன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சசிகலா புஷ்பா மற்றும் அவரின் முதல் கணவர் லிங்கேஸ்வர திலகன் மற்றும் மகன் ஆகியோர் மீது தூத்துக்குடியை சேர்ந்த பணிப்பெண் பாலியல் புகார்களை தெரிவித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.விசாரணைக்கு தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.மேலும் சசிகலா புஷ்பாவை பணிப்பெண்களின் வழக்கறிஞர் சுகந்தி வீட்டை தாக்கியதாக கூறிய வழக்கில் இருந்தும் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்திவிட்டது.சசிகலா புஷ்பாவை நீதிமன்ற விசாரணை முடியும் வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Read Moreசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை
டெல்லி : கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 3 அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். மூன்று எம்எல்ஏக்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மூன்று அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்தது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
Read Moreவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணை:உச்சநீதிமன்றம்
டெல்லி :நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது.இந்திய தேர்தல் ஆணையம் இந்த தடவை (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL) என்ற இயந்திரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் நடைமுறைப்படுத்தியது. காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் , 50% ஒப்புகைச் சிட்டையும் எண்ண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது . இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதில் வாக்கு எண்ணிக்கையுடன் , ஒப்புகைச்சீட்டையும் எண்ணினால் வாக்கு இறுதி முடிவுகள் தாமதம் ஆகும். எனவே ஒப்புகை சீட்டை எண்ணுவது கடினம் என தேர்தல் ஆணையம்…
Read Moreகிரன் பேடி புதுவை அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிடக் கூடாது:சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை:புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி,புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக கேட்டுப் பெறும் வகையில் மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுனர் கிரன் பேடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த உத்தரவை எதிர்த்து புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை பெஞ்சில் வழக்கு தொடர்ந்தார்.எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜர் ஆனார்.இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.இதனால் புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி அறிக்கை பெற…
Read Moreஜோதிமணி,செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை:கரூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜியுடன் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது இரவு 12 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாக புகார் அளித்தார் .அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி கைது செய்யப்படாமல் இருக்க வழக்கறிஞர் செந்தில்குமார் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ,வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன் ஜாமீன் வழக்கினார்.
Read Moreஉச்சநீதிமன்றம்:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை
புதுடெல்லி:முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்காக அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பிறகு அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
Read Moreதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கு: மனுதாரர் தரப்பில் முக்கிய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் செய்தார்.போலியான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு 1.5 கோடி வரை பணம் தருவதாக கூறியதை வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் தெரிவித்தார்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி வலைபின்னுபவர்கள் மிகுந்த சக்தி படைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்சுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவரது…
Read Moreசாலை விபத்துகளைக் குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முறையாகப் பயன்படுத்த உயர்நீதிமன்றத்தில் மனு
மதுரை:மதுரை மாவட்டம் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்படுகிறது. விதிப்படி முக்கிய இணைப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு வேண்டும் .அதே போல் வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். சாலைகளின் நடுவில் செடிகள் நட வேண்டும். ஆனால் இதுபோன்ற பணிகள் நடப்பதில்லை.இதனால் விபத்துகள் தற்போது அதிக அளவில் நடக்கிறது. தமிழ்நாடு சாலைவிபத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துகிறார்கள்.இதனால் விபத்துகள் நடக்கிறது.வாகனங்களில் கட்சிக்கொடி மற்றும் தலைவர்களின் படங்களை தடைசெய்தாலே 50 சதவீதம் குற்றங்கள் குறைந்துவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த மனு சம்மந்தமாக உள்துறைச் செயலர், போக்குவரத்து முதன்மைச் செயலர் பதிலளிக்க நீதிபதிகள் உத்திரவிட்டனர்.இந்த…
Read More