சென்னை:வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொழிலதிபர் மார்ட்டின் இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் மார்ட்டின் குழும காசாளர் பழனிச்சாமி மர்மமான முறையில் காரமடை அருகே உள்ள குட்டையில் கடந்த 3-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். காசாளர் பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த 5 ம் தேதி கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் ஆய்வுக் கூறு நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பழனிச்சாமியின் மகன் ரோஹின் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவை எட்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.நீதிபதி ராமதாஸ் நடத்திய விசாரணையில் உடல் கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இல்லாததால், மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
Read MoreYear: 2019
திமுக எம்.பி கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரனைக்கு தடை :சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :திமுக எம்.பி. கனிமொழி 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார்.இதனால் அக்டோபர் மாதம் முதலமைச்சர் சார்பில் திமுக எம்.பி. கனிமொழி மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராக கனிமொழிக்கு சம்மன் அனுப்பியது.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற சம்மனை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் விழுப்புரம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தும்,ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.இது குறித்து தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.
Read Moreவாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
டெல்லி: வாக்கு எண்ணிக்கையின் போது 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.தலா 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்தனர்.ஆனால் கடந்த மே 7 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதன் பிறகு சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொது நல மனுவாக தாக்கல் செய்தது.அந்த மனுவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் ,100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு இன்று விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது என கூறி மனுவை…
Read Moreகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
சென்னை :கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.இந்த கருத்தால் அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.இந்த பேச்சுக்கு எதிராக 76 இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது. இதனால் கைதாவதை தடுக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார்கள் . அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.
Read Moreபள்ளிப்பைகள், மதிய உணவுப்பைகள் வாங்க பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை:கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி உள்ளது.அந்த தனியார் பள்ளியில் சீருடை, ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருள்கள் கட்டாயமாக வாங்கவேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களுக்கு ரூபாய் 5000 கேட்பதாக புகார் எழுந்தது.இதை அடுத்து ஹேமலதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை கண்டிப்பாக வாங்க வற்புறுத்த கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read Moreமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்
மும்பை: மகாராஷ்டிராவில் மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்றது .வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் பெண் துறவி பிராக்யா சிங் தாகூர்,ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபத்யாய உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். ஜாமினில் வெளிவந்த பிராக்யா சிங் தாகூர் நடந்துவரும் மக்களவை தேர்தலில் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.இன்று மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விநோத் பதால்கர் முன் விசாரணைக்கு வந்தது.குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.…
Read Moreமார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை:பழனிசாமியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி அவரது மகன் ரோஹன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பழனிசாமியின் மரணம் தொடர்பான அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். மனுதாரரின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற மறுத்துவிட்டனர்.மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையில் திருப்தி இல்லையென்றால் பழனிசாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தனர். பதப்படுத்தப்பட்டுள்ள பழனிசாமி உடலை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read Moreகமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி:டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி :சர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசினார். அது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.கடந்த 12ம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் ,அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.இதனால் பாஜக தனது கண்டனத்தை தெரிவித்தது. பாஜக-வின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடை செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராததால் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தனது புகார் மனுவை விசாரித்த தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.…
Read Moreஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம்
டெல்லி:சுசன் எம் குப்தா அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேட்டில் இடைதரகராக செயல்பட்டார்.அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.மேலும் அவரை நீதிமன்ற காவலில் வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
Read Moreதனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு சீல்:சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :ஷெனாய் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது.அதில் பல நோயாளிகள் சிகிச்சை வருகின்றனர்.அரும்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அதில் ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விதிகளை மீறி அடுக்குமாடி கட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க உத்தவிட்டனர்.மேலும் கட்டடத்திற்கு சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பாதிப்பு வராமல் இருக்க வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Read More