பெண்களுக்கான உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அணி வெற்றி

India won Womens Kabaddi World Cup 2013 உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது.இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.   விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ…

Read More

அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்

Deputy Consul general of india in New York Devyani Khobragade handcuffed in public  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணியில் இருப்பவர் திருமதி.தேவயானி கோப்ரகடே. தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு அவர் விசா வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் முறைகேடான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் பகுதியின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, துணை தூதர் தேவயானி தனது மகளை பள்ளியில் அழத்து வந்து விட்டுச்செல்ல காரில் சென்ற போது பொதுமக்கள் முன் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுதலை செய்தார்கள். அமெரிக்க அரசினுடைய இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் இந்தியாவுக்கான…

Read More

சீனாவில் மனவளர்ச்சி குன்றிய மகனை 40 ஆண்டுகளக கூண்டில் அடைத்து வைத்து வளர்த்த தாய்

Chinese boy kept in cage for 40 years மனவளர்ச்சி குன்றிய தனது 48 வயது மகனை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளார் சீனத் தாய் ஒருவர். தற்போது தனது மரணத்திற்குப் பின் தனது மகனுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை என கருதி மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்ததன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐந்தறிவு படைத்த விலங்குகளையே கூண்டில் அடைத்து வளர்ப்பது தவறு என மிருகவதைத் தடுப்பு ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தனது 48 வயது மகணை கூண்டில் அடைத்து தாயே வளர்த்து வந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. சீனாவின், மத்திய ஹெனான் பகுதியில் உள்ள ஷென்சோ பகுதியைச் சேர்ந்தவர் பென்ங் வீகிங் என்ற 48 வயது மனிதர். மனவளர்ச்சி குன்றிய இவர் தனது வாழ்க்கையின்…

Read More

செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு லட்சம் பேர் நிரந்தரமாக குடியேற விருப்பம்

Over 20,000 Indians apply for one-way trip to Mars செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார்…

Read More

ஐஃபொன், ஸ்மார்ட்ஃபொன் மூலம் அல்ட்ரா சவுண்ட் அமெரிக்க மருத்துவகல்லூரி மாணவர்கள் சாதனை

Ultrasound now possible in your smart phone. மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம். பெரும்பாலான நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை…

Read More

டிசம்பர்-11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 132ஆவது பிறந்தநாள்

Today Bharathiyar’s Birthday (11 December) தமிழ் வரலாற்றில் சிறந்த முதல் மூன்று கவிகளுள் பாரதியும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. தனது எழுத்துகளில் பல பரிணாமங்களை கொண்ட ஒரே கவி பாரதியே! இன்றைய வரலாற்று நாளில், இவர் புகழ் கூற நினைவுகொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞன். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே சொன்னவர் பாரதியார். அந்த மகாகவி பிறந்த தினம் டிசம்பர் 11. தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்தியா முழுவதற்கும் உரிமையான கவிஞன்தான் பாரதி. இன்று 132-வது பிறந்த நாள் விழா காணும் எமது மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றிய சில குறிப்புகள். பெயர்: சுப்பிரமணிய…

Read More

பெண்ணிடம் சில்மிஷம் : ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு

FIR against AAP party Seemapuri MLA Dharmendra Koli on molestation charge புதுடெல்லி : – பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமாபுரி தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.எல்,ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தர்மேந்தர் கோலி. இவர் மீது இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீர்சிங்கின் மனைவி  போலீஸில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆம் ஆத்மி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது தர்மேந்தர் கோலி என் வீட்டுக்குள் வந்தார். என்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டார். அந்த கட்சியினர் பலர் மது பாட்டில்களை வைத்திருந்தனர்.எங்கள் பகுதியில் உள்ள வால்மீகி கோவிலுக்குள் அவர்கள் மது பாட்டிலை வீசினர் என்று அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.…

Read More

மனநலம் குன்றிய 18 வயது மகனை கருணை கொலை செய்யக்கொரி பெற்ற தாயே மனு அளித்த அவலம்

A mother of 18 years old mentally affected so given petition to the police for mercy killing மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கருணை கொலை செய்யக்கோரி பெற்ற தாயே மனு கொடுத்துள்ள வேதனை தரும் சம்பவம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் 13-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 40). இவரது மகன் ரோகித்(18). கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை பாக்கியலட்சுமி ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மகன் ரோகித் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்தேன். ஆனால் அவனது மூர்க்கத்தனமான செயல்பாடு காரணமாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். கடந்த 6 மாதங்களாக நான் தான் அவனை பாதுகாத்து வருகிறேன்.அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள்,…

Read More

கைபேசியில் வலைத்தளம் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்த ஏற்பாடு

After Facebook, now access Twitter on mobiles without Internet உலகளவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் அவற்றின் வழி இன்டர்நெட் பயன்பாடும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலக அளவில், 260 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 170 கோடி பேர் மொபைல் போன்களின் வழியே இணையம் செல்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதனால் டுவிட்டரின் பயன்பாடு குறைவாக இருப்பதாக கருதி மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு…

Read More

சென்னையில் இந்த ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 57,962 பேர் மீது வழக்குப் பதிவு

Three-fold Jump in Drink-driving Cases அண்மையில் நாடு முழுவதும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,ஆந்திரா உட்பட 16 மாநிலங்களில் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) மற்றும் மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 27 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டுவதாகவும், 29 சதவீதம் பேர் தூக்கமி்ன்மை, 12 சதவீதம் பேர் மன அழுத்தம் 4 சதவீதம் பேருக்கு நிறக்குருடு இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் தமிழகத் தலைநகரில் கடந்த ஆண்டு குடித்து விட்டு போதையுடன் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் வெறும் 16,881 பேர் மட்டுமே சிக்கியிருந்தனர். ஆனால் இந்தாண்டு இந்த எண்ணிக்கை 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.அதாவது இந்தாண்டு நவம்பர் மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 57,962 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாதனை(!) படைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல்…

Read More