Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs சச்சினின் முழு உருவ கேக் , பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேக் உலகிலேயே இது வரை மிகப்பெரிய கேக் எனும் பெருமையை தட்டிச்செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான ராமச்சந்திரன் என்பவர்தான் சச்சினின் முழு உருவ கேக்கினை செய்தவர்.ஒரு கையில் பேட்டையும் மற்றொரு கையில் ஹெல்மெட்டையும் பிடித்தவாறு சச்சின் நிற்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட கேக்கை காண பலர் வருகைபுரிந்துள்ளனர்.கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் கேக் கண்காட்சிக்காக இது அமைக்கப்பட்டுள்ளது. சச்சினின் முழு உருவ கேக்கை செய்ய 5 நாட்களானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலி
South African Indian Origin newly wedded couple killed in road accident enroute to honeymoon தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலியாகினர். தென்னாப்ரிக்காவில் கடந்த ஞாயிறன்று ஆஷ்லே ரெட்டி (வயது 30) இவர் மருத்துவ தொழில்நுட்ப நிபுணர் – தீபிகா (வயது 29) ஆகிய தம்பதிகள் இந்து முறைப்படி உறவினர்கள் படை சூழ, வாழ்த்தொலி முழங்க திருமணம் செய்து கொண்டார்கள். திங்களன்று திருமணம் முடிந்து தங்களது தேனிலவைக் கொண்டாடுவதற்கு வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி இருவரும் தலை நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்கள். இந்த கோர விபத்தில் மற்றும் ஓர் இளைஞர் உடல் நசுங்கி பலியானார். ஞாயிறு கிழமையன்று மிக்க மகிழ்ச்சியோடும், வாழ்த்துக்களோடும்…
Read Moreதூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Madras High Court of Madurai Branch today denied bail to 35 crew member தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நவீன ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் கப்பலில் வந்த 35 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பாக ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. English Summary : The Madras…
Read Moreஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சென்னை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
உலகில் பிறக்கும் 2 லட்சம் குழந்தைகளில் ஒன்று என்ற விகிதத்தில்தான் உடற்பாகங்கள் ஒட்டிய நிலையில் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆண்களில் இத்தகைய இரட்டையர்கள் காணப்படுவது மிகவும் அரிது. இதுவரை உலக அளவில் இடுப்புக்குக் கீழ் ஒட்டிப் பிறந்த நிலையில் 30 ஜோடி குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாக சம்பந்தப்பட்ட சென்னை டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த வகை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. தான்ஸானியா நாட்டை சேர்ந்த 9 மாதமே ஆன எரிகா மற்றும் எல்யூடி என்ற இடுப்புக்கு கீழே ஒட்டிப் பிறந்த ஆண் குழந்தைகள் சிகிச்சைக்காக கடந்த ஜூன் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.…
Read Moreபாகிஸ்தாநில் 13வயது சிறுவனுக்கு 50 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
13-Year-Old Pakistani boy Gets 50 Years in Jail for Murder பாகிஸ்தானில் தனது தந்தையை கொல்ல முயன்ற நபரை நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டு கொன்ற 13 வயது சிறுவனுக்கு 50 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குர்ஜன்வாலா பகுதியை சேர்ந்த ஒரு நபரை ஹபிஸ் கியாஸ் என்பவர் கொல்ல முயற்சித்தார். ஹபிஸ் தாக்கியதில் அந்த நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஹபிஸ் கொலை செய்ய முயற்சித்ததற்காக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஹபிஸ் தாக்கிய நபரின் 13 வயது மகன் கையில் துப்பாக்கியுடன் அங்கு வந்து, ஹபிசை சுட்டு கொன்றார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை குர்ஜன்வாலா மாவட்டத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு…
Read Moreஅறுவை சிகிச்சை இல்லாமல் சூப்பர் பேஸ்மேக்கர்
World’s smallest pacemaker implanted without surgery இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி உள்ளார்கள். அதாவது இது பழைய பேஸ்மேக்கரை விட பத்து மடங்கு சிறிது நீளம் வெறும் 24 மில்லி மீட்ட்ர் – அகலம் 0.75 கியூபிக் சென்டி மீட்டர் மட்டுமே கொண்டது இதில் இன்னொரு மகிழ்ச்சி விஷயம் இதை இம்ப்ளான்ட்…
Read Moreமருத்துவ கழிவு பொருட்களால் வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள்…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர், மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படும். பயன்படுத்தப்பட்ட ஊசிகள், செயற்கை சுவாசக் குழாய்கள், சிரிஞ்சுகள், கத்தி, ரத்தக்குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை மருத்துவக்கழிவுகள் ஆகும் . சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப்…
Read Moreநேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து
Fire accident at Mumbai multistorey building மும்பை : நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 9 நபர்கள் கருகி பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. மும்பை நகரில் உள்ள கென்ஸ் கார்னரில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்து, அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் பரவி, அங்கு எரிந்துகொண்டிருந்த வீடுகளில் இருக்கும் சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர 5 மணிநேரம் ஆனதாகவும், தீயை அணைக்க 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் போராடியதில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. வீடுகளில் பற்றிய தீயினால் 6 பேர் அந்த சம்பவ…
Read Moreபாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு :திரு.சவுரவ் கங்குலி நிராகரிப்பு
புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு.சவுரவ் கங்குலிக்கு பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும், தேர்தலில் வெற்றியடைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்தால் திரு.சவுரவ் கங்குலிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது. எனினும், தான் தேர்தலில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் பா.ஜ.க வின் அழைப்பை நிராகரிப்பதாகவும் திரு.சவுரவ் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Read Moreஇந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடை
National Green Tribunal bans burning of plastic, rubber across the country இந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத முறையில் திறந்தவெளியில் ரப்பர்பொருட்களின் கழிவுகளை எரிக்க நேற்று தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தடை முறைப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கழிவுகளின் கையாளுதலும், அகற்றுதலும் தடை செய்து மறு சீரமைப்பு சூழலில் இயற்கையின் பாதுகாப்பிற்குத்தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் வழி வகுப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு விதிகளுக்கு உட்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள், பழைய பொருட்கள் விற்பனையாளர்கள், மறுசுழற்சியாளர்கள் மற்றும் பி.வி.சி / பாலிஸ்டர்/ பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் என என்.ஜி.டி தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் கூறியுள்ளார்.…
Read More