கர்நாடகா : குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, பிரிவு 12 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அது சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்) மாஜிஸ்திரேட் முடிவு எடுக்க வேண்டும், என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராஜம்மா. எச் அவர்கள் குற்றவியல் மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த விண்ணப்ப மனுவை ஏற்ற, பெங்களூரு பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு, ஜீவனாம்சம் கோரிய குற்றவியல் விண்ணப்பத்திற்கு , இரண்டு வார காலத்திற்குள் மனுதாரர் தாக்கல் செய்த மனுவை முடித்துவைக்குமாறு நீதிபதி எம்.நாகபிரசன்னாவின் தனி நீதிபதி அமர்வு, உத்தரவிட்டது.மனுதாரர் தனக்கு ஆதரவாக ஜீவனாம்சம் கோரி இடைக்கால மனுவை 12-11-2021 அன்று தாக்கல் செய்தார். 20-12-2021 அன்று வழக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டது, அதன் பிறகு, பராமரிப்பு கோரிய அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை.இதனால் சட்டத்தின் கீழ் தாக்கல்…
Read MoreAuthor: chennai legal firm
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் புதிய குற்றச்சாட்டை விசாரணையின் போது சேர்க்கலாம் : உயர் நீதிமன்றம்
பெங்களூரு : இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ், மைனர் பெண்ணைக் கையகப்படுத்துதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போக்சோவின் பிரிவு 7 இன் கீழ் கூடுதல் குற்றச்சாட்டாக மாற்ற, கோலார் II கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அனுமதித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டை குற்றவியல் விசாரணையில் சேர்க்கலாம் என்று தீர்ப்பளித்து, “சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை” என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 216 இன் கீழ், POCSO இன் கீழ் குற்றத்தைச் சேர்க்க குற்றச்சாட்டை மாற்றுமாறு அரசுத் தரப்பு கோரியது சரியானது…
Read Moreதலைமைச் செயலாளர் மற்றும் ஜிசிசி – யின் அவமதிப்பு நடவடிக்கையை எச்சரித்தது : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை : பிராட்வே வியாபாரிகளை ஜூன் 23க்குள், இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமைச் செயலாளர் (சிஎஸ்), கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் (ஜிசிசி) உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியதற்க்காக மறைந்த ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என் மாலா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு சமீபத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது.இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, இந்த நீதிமன்றம் கடைசி விசாரணைத் தேதி, 5-4-2022 அன்று எதிர்மனுதாரர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அனுமதித்து, வியாபாரிகள் அல்லாத பகுதியில் இருந்து வியாபாரிகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் வியாபாரிகள்…
Read Moreதனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்தங்கிய EWS இடங்களை அடுத்த 5 ஆண்டுகளில் நிரப்ப வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம்
தில்லி : தில்லி உயர் நீதிமன்றம்,தனியார் மற்றும் அரசு நிலங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள EWS (Economically Weaker Section ) இடங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 20% காலியிடங்கள், கட்டாய வருடாந்திர கூடுதலாக 25% .ஆரம்ப நிலையில் முன்பள்ளி, நர்சரி, ப்ரீ-பிரைமரி, கேஜி மற்றும் ஒன்று ஆகிய வகுப்புகள் இதில் அடங்கும்.பொதுப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உண்மையான எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல்.பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் (EWS) ஆரம்ப நிலையில் அறிவிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட 25% மாணவர்கள் நிரப்பப்படுவதை உறுதி செய்யுமாறு தில்லி அரசுக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வஜிரி மற்றும் நீதிபதி விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. நகரத்தில் உள்ள…
Read More“மூத்த குடிமக்கள் சட்டத்தில்”, மோசமாக செயல்பட்ட டெல்லி அரசு, டிஎம், எஸ்டிஎம்களுக்கு தாமாக முன் வந்து நோட்டீஸ் அனுப்பியது : டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி : பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ஐ மோசமாக செயல்படுத்தியதற்காக டெல்லி உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது . வழக்கறிஞர் நேஹா ராய், தனது கடிதத்தில் நீதிமன்றம் இப்பொது நல வழக்கில் மேற்படி சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலைமையை முன்னிலைப்படுத்தி கூறியிருந்தார்.தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “டெல்லி அரசு, மாவட்ட சட்ட சேவை அதிகாரிகள், மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) மற்றும் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுகளுக்கும் (எஸ்டிஎம்)”நோட்டீஸ் அனுப்பியது.நோட்டீஸில்,மூத்த குடிமக்களுக்கான 2007 சட்டத்தை விரைவாக செயல்படுத்துவதில் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் ஆகிய நீதித்துறை அதிகாரிகள் தவறிவிட்டதாகவும், மூத்த குடிமக்களின் முறையீடுகளை கவனத்தில் கொள்ளத் தவறியதன் மூலம் அவர்களுக்கு…
Read Moreவைகையில் “மணல் அள்ளுவது” தொடர்பான மனு மீது அரசு பதிலளிக்க உத்தரவு : சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை: வைகை ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகள் (பிஐஎல்) மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை : சிவகங்கை மானாமதுரையில் உள்ள கிட்டத்தட்ட 25 கிராமங்களுக்கு வைகை ஆறு மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது, இது சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலத்தின் பாசனத்திற்கு உதவுகிறது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல், மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் உள்ள மணல் குவாரிக்கு சிவகங்கை கலெக்டர் அனுமதி அளித்தார் என சிவகங்கை, மானாமதுரை தாலுக்காவில் உள்ள கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான பி. மாயாசாகு, குற்றம் சாட்டினார். ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் குறைந்து கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனுமதியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதேபோன்ற…
Read Moreவிபச்சாரம் என்பது ஒரு தொழில், அனைவருக்கும் முழு சட்டப் பாதுகாப்பு உள்ளது : சுப்ரீம் கோர்ட்
இந்த உத்தரவுகள் பாலியல் தொழிலாளர்களுக்கான பிரச்சினைகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பானவை மட்டுமே என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியதுஉச்சநீதிமன்றம் சமூக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஒரு திருப்புமுனையாக விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.மற்றவர்களுக்குக் கிடைக்கும்”சுயமரியாதை மற்றும் கண்ணியம்” பாலியல் தொழிலாளிக்கும்,அவர்களது குழந்தைகளுக்கும் கிடைக்க உரிமை உண்டு என்றும் அவர்கள் வாழ்வதற்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராவ் ,பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகிய மூவர் அடங்கிய அமர்வு கூறியது.பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட உத்தரவுகள்,காவல்துறையை மையமாகக் கொண்டவை என்றும்,பாலியல் தொழிலாளர்களிடம் “மிருகத்தனமாக” மற்றும் “வன்முறையாக” நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்களை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது,வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும், அவர்களை வன்முறைக்கு உட்படுத்தக்கூடாது அல்லது எந்தவொரு பாலியல் செயலிலும் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது…
Read Moreவிஸ்மயா வழக்கு : வரதட்சணை மரணம் மற்றும் தற்கொலைக்கு தூண்டிய கணவரை குற்றவாளி என கேரள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு .
கொல்லம் : பரபரப்பான விஸ்மயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர் எஸ்.கிரண் குமார் குற்றவாளி என கொல்லம் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பளித்தார். நான்கு மாத கால விசாரணைக்கு பிறகு விஸ்மயாவின் கணவர் கிரண் குற்றவாளி என நீதிபதி சுஜித் கேஎன், தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றார். எம்விடி அமலாக்கப் பிரிவில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்தவர் கிரண்குமார்,ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை மாணவி விஸ்மயா.தன் கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்ததை அடுத்து, ஜூன் 21,2021 அன்று தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குற்றவாளியின் தந்தை சதாசிவன் பிள்ளை, தாய் பிந்து குமாரி, சகோதரி கீர்த்தி மற்றும் அவரது கணவர் முகேஷ் உட்பட 42 சாட்சிகள்,102 ஆவணங்கள் மற்றும்…
Read Moreஞான்வாபி மசூதி வழக்கு ; வாரணாசி நீதிமன்றம் மனுக்கள் மீது விசாரணை செய்து நாளை முடிவெடுக்கும்.
நிலுவையில் உள்ள வாரணாசி வழக்கை உச்ச நீதிமன்றம் ”விசாரணை மற்றும் அனைத்து இடைநிலை மற்றும் துணை நடவடிக்கைகளை ” மாவட்ட நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது .ஞான்வாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோயில் வளாக தகராறு தொடர்பான சிவில் வழக்கை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதியின் ஆணையர் கணக்கெடுப்பு அறிக்கைக்கு ஆட்சேபனை அழைப்பதா அல்லது உத்தரவு 7 இல் விசாரணை நடத்துவது மஸ்ஜித் கமிட்டியின் விதி 11 விண்ணப்பம் முதலில் ஏற்பது குறித்து நாளை உத்தரவு வெளியாகும் என்றார். இந்துக்கள் ஆட்சேபனைகளைக் கேட்க வேண்டும் என்றும் , முஸ்லிம்கள் O7R11 முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் விரும்புவதாக இந்த அமர்வு தெரிவித்துள்ளது.இந்நிலையில், வாரணாசியில் உள்ள ஞான்வாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை என்றும், வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத்…
Read Moreதெருநாய்களுக்கு உணவளிக்கும் உரிமையுண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு – விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
தெருநாய்களுக்கு உணவளிக்கும் உரிமை, குடிமக்களுக்கு உண்டு என்று 2021 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்த தனது முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.‘மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான மனிதாபிமான அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மனு மீது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை இந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி, உச்ச நீதிமன்றநீதிபதிகள் உதய் உமேஷ் லலித், எஸ் ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்காலத்தடை விதித்தனர். இந்த விவகாரம் சர்ச்சைகளைக் கையாள்வதால் இரண்டு தனியார் தரப்பினருக்கு இடையே எழும் SLP தாக்கல் செய்ய அனுமதி கோருவதற்கு விண்ணப்பதாரருக்கு இடம் [நிலை] இல்லை. மேலும் இந்த வழக்கில் NGO (மக்கள் மற்றும் விலங்குகளுக்கான மனித அறக்கட்டளை) ஒரு தரப்பினராக இல்லாததால் நாங்கள், மனுவைத்…
Read More