Argentine woman swaps 11 year old daughter for a freezer அர்ஜெண்டினாவில் ஒரு ஃப்ரீஸருக்காக பெற்ற மகளை தாயே விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் பாப்லா செசரினா. இவருக்கு வயது 30. நான்கு குழந்தைகளின் தாயான இவரின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். விசாரணையின் போது அச்சிறுமி, ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் தாய் என்னை ஒருவரிடம் விற்றுவிட்டார். அவர்கள் என்னை தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பினர். நான் இங்கு பாலியல் தொந்தரவு, மன உளைச்சல் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளேன் எனத்தெரிவித்து போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனையடுத்து,…
Read MoreAuthor: NR Sharavanan
காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்
Woman accused hides $5,000 in a body part அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் அவரது காதலனிடமிருந்து திருடிய பணத்தை ஏடாகூடமான இடத்தில் வைத்து அவதிப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் . 43 வயதான இவர் அவரது காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்து வைத்துள்ளார். பிறகு அந்த பணத்தை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதலரிடமிருந்து கிறிஸ்டி 5000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம்) திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக அவருக்கு ரத்தப்போக்கு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே…
Read Moreஜப்பான் மற்றும் கனடாவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின
Earthquake in Japan and Canada ஜப்பான் மற்றும் கனடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 400 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை. கனடாவில் வான்குவர் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் 6.2 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 6 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில டுக்கம் காரணமாக…
Read Moreஇளைஞர்களை அடிமையாக்கும் இ-சிகரெட்: உலக சுகாதார நிறுவனம்
e cigarettes new generation addicts இந்தியாவில் இ- சிகரெட்டுக்கு தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை. பார்க், பீச், ரயில், பஸ், திரையரங்கு… எனப் பொது இடங்களில் எங்குவேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை, சாம்பல் இல்லை, அதிக அளவில் புகை இல்லை. சிகரெட் பிடித்து முடித்ததும் சட்டைப் பையில் போட்டு எடுத்தும் செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்குப் பாதகம் ஏற்படுத்தாத சிகரெட்!’ – இ-சிகரெட் நிறுவனங்களின் ஈர்ப்பு அழைப்பு இது. அது என்ன இ-சிகரெட்? ‘புகை பிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாக, புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வர கண்டுபிடிக்கப்பட்டதுதான் எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்’ என்கிறார்கள். இந்நிலையில் இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர். எவ்வித பரிசோதனையிலும்…
Read More5 வயது சிறுவன் இளம் விமானம் ஓட்டி கின்னஸ் சாதனை
5 Year old Chinese Boy becomes youngest pilot, breaking Guinness world record சீனாவைச் சேர்ந்த 5 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் உலகின் மிக இளம் வயதில் விமான ஓட்டுநராக விமானத்தைச் செலுத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். ஆகஸ்ட் 31 ஆம் திகதி டுவோடுவோ என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் ஹே யிடே எனும் இச்சிறுவன் பீஜிங் உயிரியல் பூங்காவிற்கு மேலாக 35 நிமிடம் அல்ட்ராலைட் விமானம் ஒன்றை ஓட்டி கின்னஸ் சாதனை புரிந்ததாக செவ்வாய்க்கிழமை சீன மீடியா அறிவித்துள்ளது. டுவோடுவோ விமானம் ஓட்டுவதைக் கற்றுக் கொண்ட ஏவியேஷன் கிளப்பின் இயக்குனரான ஷாங்க் யொங்குயி இது பற்றிக் கூறுகையில் இச்சிறுவன் 30 Km தூரத்துக்கு விமானத்தை ஓட்டியிருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு இச்சிறுவனின் தந்தையான ஹே லியெஷெங் பேட்டியளிக்கையில் தனது மகன்…
Read Moreதமிழக பட்டதாரி மாணவருக்கு பேஸ்புக்கின் 8 லட்சம் பரிசு
Facebook rewards salem engineering graduate Rs. 8 lacs for finding bug பேஸ்புக் உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு சமூக வலைதளம். இன்றைய இளைஞர்களின் ஆட்டி படைக்கும் ஒரு மந்திரச்சொல் பேஸ்புக். சமீபகாலமாக சில செக்கியூரிட்டி குறைபாடுகள் பேஸ்புக்கில் உள்ளன இந்த குறைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பேஸ்புக் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது. சென்னையில் வேலை தேடி வரும் 21 வயது இன்ஞ்னீயரிங் பட்டதாரியான அருள் குமாருக்கு பேஸ்புக்கின் இந்த அறிவிப்பு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அவர் பின்பு பேஸ்புக் பயணீட்டாளர்கள் யார் வேண்டுமானாலும் மற்றவர்கள் அக்கவுன்டில் இருக்கும் படத்தை அழிக்க முடியும் என்ற குறைபாட்டை கண்டுபிடித்தார். இந்த குறைபாட்டை கண்டுபிடித்ததற்காக பேஸ்புக் நிறுவனம் இவருக்கு 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை வழங்க உள்ளது. அருள் குமார் இதை பற்றி பேசுகையில், நிறைய ஹாக்கர்கள் இந்தியாவில் இது போன்ற குறைபாடுகளை கண்டுபிடித்து பரிசு…
Read Moreதேமுதிக எம்.எல்.ஏ. மீது திருட்டு வழக்கு
Cops look out for DMDK legislator in theft case செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் மீது திருட்டு வழக்கை பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் அனகை முருகேசன். அவருக்கும் தேமுதிக குரோம்பேட்டை நகரச் செயலாளர் கே.எம்.ஜெ. அசோக்கிற்கும் இடையே கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் ஆகாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது முருகேசனுக்கும், அசோக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததில் அசோக் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அசோக் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்று கூறப்படுகிறது. காயமடைந்த அசோக்…
Read Moreஆந்திராவில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு
Acid attack on female college student to withdraw complaint ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் முதுகுப்பா நகரைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணா. இவரது மகள் வாணி. இவர் தனது தாய் மாமா வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். தாய் மாமா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் ராகவேந்திரா அடிக்கடி மாணவி வாணியை சந்தித்து பேசி பழகி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தனது அக்காள் மகன் பிறந்த நாள் விழாவுக்கு வரும்படி வாணியை அழைத்தார். வாணியும் ராகவேந்திராவுடன் அவனது அக்காள் வீட்டுக்கு சென்றார். பயண களைப்பு தீர குளிக்க முடிவு செய்தார். அக்காள் வீட்டு குளியல் அறையில் ஆடைகளை களைந்து குளித்தார். அவர் குளிப்பதை ராகவேந்திரா ரகசியமாக தனது காமிராவில் படம் எடுத்தார். பின்னர் அதனை வாணியிடம் காட்டி…
Read Moreஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!
G V Prakash has signed his 1st Hollywood movie ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் கால்பதித்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி வந்தார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். G V Prakash has…
Read Moreபிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு
Axis Bank Squash champion Dipika Pallikal sues Axis Bank பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு தொடர்துள்ளார். சென்னையை சார்ந்த தீபிகா பில்லிகால் உலக தரவ்ரிசையில் 13வது இடத்தில் உள்ள பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையாவார். அர்ஜுனா விருது பெற்ற தீபிகா 2011ம் ஆண்டு ஹாலந்து நாட்டில் நடந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஒன்றில் பங்கேற்றார். ரோட்டார்டாமில் தான் தங்கி இருந்த அறைக்கான வாடகை பணம் 30 ஆயிரம் ரூபாயை செலுத்த தனது ஆக்ஸிஸ் வங்கியின் டெபிட் கார்டை தீபிகா கொடுத்தார். 2 இலட்சம் பணம் அவரது வங்கி கணக்கில் இருந்த போதும் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பணம் பட்டுவாடா செய்ய இயலா நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து வேறு ஒரு வங்கியின் டெபிட் கார்டு…
Read More