நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
ஜெசி ரைடர் சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் பார் ஒன்றின் அருகில் மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
படுகாயமடைந்த இவர் மருத்துவமனையி அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மருத்துவமனியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான வெலிங்டனுக்கு விமானம் மூலம் சென்றார்.
கோமாவிலிருந்து மீண்ட நிலையில், சில நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ள ரைடருக்கு மற்ற விடயங்கள் நினைவில் உள்ளபோதும், அவர் மீது நடந்த தாக்குதல் சம்பவம் மட்டும் நினைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.