லக்னோ : செப்டம்பர் 21, 2018 உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் வேகமாக பரவி வருகின்ற மர்ம காய்ச்சலுக்கு கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 79 பேர் பலியாகி உள்ளனர் . இதனால் மருத்துவக்குழு மிக கவனமான நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் . வீண் வதந்திகள் பரவுவதையும் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளனர் . இதுவரை அதிகபட்சமாக பெரிலியில் மட்டும் 24 பேர் பலியாகி உள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வேகமாக பரவி வருகின்ற இந்த மர்ம காய்ச்சல் பற்றி கண்டறிவதற்காக மூன்று டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Read MoreDay: September 21, 2018
கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த சச்சின் டெண்டுல்கர்
கோல்கட்டா : செப்டம்பர் 21, 2018 மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட இருந்த கவுரவ டாக்டர் பட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்க மறுத்துவிட்டார். மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக 63ம் ஆண்டு பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியில் நடக்கவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது . இதை பற்றி சச்சினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க சச்சின் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது . சச்சின் டெண்டுல்கர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது தார்மீக ரீதியில் தனக்கு சரியாக படவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனக்கு…
Read More