புதிய டைனொசோர் இனம் கண்டுபிடிப்பு: அமெரிக்கா ஆய்வாளர்கள்

அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புதிய டைனொசோர் (Dinosaur) இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

ட்ரைசெர்ராடாப்ஸ் (Triceratops) பிரிவைச் சேர்ந்த இந்த டைனொசோர் ஐந்து மீட்டர் நீளம் வளரக்கூடியதாகவும், இரண்டாயிரத்து ஐநூறு கிலோ பருமன் கொண்டதாகவும் இருந்துள்ளது. மிகப் பெரிய மூக்கும் அளவுக்கதிகமான நீளம் கொண்ட கொம்பும் இதற்கு இருந்துள்ளது. இந்த ராட்சத விலங்கினம் ஏழரை கோடி ஆண்டுகள் முன்பு பூமியில் வாழ்ந்திருந்தவை என யூட்டா பல்கலைகலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மிருகத்துக்கு நாசூட்டுசெர்ராடாப்ஸ் டைட்டுசை (Nasutoceratops titusi) என்று பெயரிடப்படுள்ளது. வித்தியாசமான உடல் வாகுடன் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு மிருகமாக இது இருந்துள்ளது என்றாலும் இது ஒரு தாவர-உண்ணி விலங்குதான்.

Related posts