நாய்கள் பயன் படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வாஷிங் மெஷின்

Woof To Wash: The Wonderful Dog-Operated Washing Machine நாய்கள் பயன் படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வாஷிங் மெஷின் : பிறர் உதவி தேவைபடுபவர்கள் உதவும் விதமாக அவர்கள் நாய் குரைக்கும் போது செயல்படும் ஒரு வாஷிங் மிஷின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டானியாவைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாஷிங் மெஷின் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும் வகையில் விசேஷ கைப் பிடியையும் கொண்டுள்ளது.அத்துடன் ‘ஊப் டு வாஷ்’ என்ற இந்த வாஷிங் மெஷின் நாய்களின் குரைப்புக்கு தகுந்தாற்போல் செயல்படும்திறன் உள்ள கருவியொன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இயல்பாக செயல்பட முடியாத விசேஷ தேவையுள்ளவர்களுக்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய் இந்த சலவை இயந்திரத்தின் கதவைத் திறந்து சலவை செய்ய வேண்டிய துணிகளை உள்ளே தள்ளி, அதன் கதவை மூடி குரைத்ததும் இயந்திரம் செயல்பட ஆரம்பிக்கிறது.அத்துடன்…

Read More நாய்கள் பயன் படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வாஷிங் மெஷின்

துளசி செடியை சந்திரனில் வளர்க்க திட்டம் : நாசா

NASA Project Looks To Grow Turnips And Basil On The Moon அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் ஒன்றில் ஈடுபட உள்ளது. வருகிற 2015–ம் ஆண்டு அதற்கான ஆய்வை தொடங்கி ஆயத்த பணியை இப்போதே ஆரம்பித்து விட்டது. முன்னதாக சந்திரனில் எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது.இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. தாவரங்களை…

Read More துளசி செடியை சந்திரனில் வளர்க்க திட்டம் : நாசா

டிசம்பர்-1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம்

December 1st is world AIDS Days உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி  கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்  ஓர் கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதனுடைய பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் தினம்  பற்றிய சிந்தனை முதன் முதலில் 1988-ம் ஆண்டு நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார மாநாட்டில் உருவானது. December 1st is world AIDS Days இதையும் படியுங்கள் திருமணம் நடக்க இருக்கும் மணமகன் திருமண மண்டபம் முன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பலி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 திருடர்கள் காவல் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிஒட்டம் துளசி செடியை சந்திரனில் வளர்க்க திட்டம் : நாசா

Read More டிசம்பர்-1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம்

சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !

CAMBRIDGE UNIVERSITY INVENTED A NEW FOR INTERNET WITHOUT URL AND WWW இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது. இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து ஆக்ஸஸ் செய்யும்படி வடிவமைக்கபட்டிருப்பதால் இதனை அழிக்கவும் உலகம் முழுவதும் எங்கிருந்து வேன்டுமாணாலும் செயல்பட முடியும். இதனால் சர்வர் ஹேக் அல்லது சர்வரை கிராஷும் செய்ய முடியும். இதை கவனத்தில் கொண்டு இப்போது WWW…

Read More சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !

உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் ரூ.87 கோடிக்கு ஏலம்

World’s most expensive book sells for $14 million கடந்த 1640ம் ஆண்டு மசாசூட்ஸ் மாகாணத்தில் அச்சடிக்கப்பட்ட ‘தி பே சாம் புக்’ என்ற இந்த புத்தகம் இன்று நியூயார்க்கில், ஏலம் விடப்பட்டது. அப்போது 14 மில்லியன் டாலர் அளவிற்கு இந்த புத்தகம் ஏலம் போனது. இதையடுத்து, உலகின் மிகவும் காஸ்ட்லியான புத்தகம் என்ற பெருமையை இந்த புத்தகம் அடைந்துள்ளது. அமெரிக்க நியூயார்க் சோத்பி ஏலமையத்திற்கு அமெரிக்காவிலேயே முதல் முதலாவதாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் ஒன்று நேற்று ஏலத்திற்கு வந்தது. ஏலம் தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே இந்த புத்தகம் 14 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு 87 கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும். இதுவே உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் என்று கூறப்படுகிறது. நிதி நிறுவன அதிபரும் மனிதநேயவாதியுமான…

Read More உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் ரூ.87 கோடிக்கு ஏலம்

விக்கிபிடியா நடத்திய புகைப்பட போட்டியில் முதல் பரிசு வென்ற தஞ்சை கோவில் புகைப்படம்

Wiki Loves Monuments: India edition of world’s largest photo contest announces winners உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார். கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது. பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப்…

Read More விக்கிபிடியா நடத்திய புகைப்பட போட்டியில் முதல் பரிசு வென்ற தஞ்சை கோவில் புகைப்படம்

நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

Violence Against Women : November 25th International Day for the Elimination of Violence Against Women நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் இப்படியான தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அத்துடன் இன்றைய…

Read More நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

More than 11000 Children killed in Syria Civil War சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரையில் 11,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுபோரில் 11,420 குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் குண்டு வெடிப்புகளில் சிக்கிகொண்டு கொல்லப்பட்டதாகவும், ஏனையோர்  துப்பாக்கியால் சூட்டு கொல்லப்பட்டதாகவும் லண்டன் நகரத்தை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போரின் ஆரம்பத்திலிருந்து சுமார் 6,500க்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லபட்டிருக்கலாம் என ஐக்கிய .நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜூலை முடிவில் ஐ.நா. சபை வெளியிட்ட தகவலின் படி அங்கே போரின் காரணமாக சுமார் 1 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபட்டிருந்தது.  இந்நிலையில் தற்போது குழந்தைகள் பலியாவது மிக அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை…

Read More சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

சத்தம் ஏதும் இல்லாமல் ஹெலிகாப்டர்கள்-ஜெர்மன் நிறுவனம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் பறக்கும் ஹெலிகாப்டரை ஜெர்மன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பொதுவாக ஹெலிகாப்டர்கள் புறப்படும் போதும், பறக்கும் போதும் கடுமையான அதிர்வுகளையும், சத்தத்தையும் எழுப்புகின்றன. இதனால் பறக்கும் தூசு, சத்தம் போன்றவற்றால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றது. சத்தம் ஏதும் இல்லாமல், அதிர்வுகள் இன்றி பறக்கும் ஹெலிகாப்டரை ஜேர்மனியின் இ-வாலோ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் என்ஜினில் வாலோகாப்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு உலக நாடுகளிடம் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் இந்த ஹெலிகாப்டரை விமானத்தை போன்று செங்குத்தாக விண்ணில் பாய்ந்து, அதே போன்று தரையிறங்கும் தன்மை கொண்டது. இதன் முதல் சோதனை பயணம் கடந்த 17ம் தேதி ஜேர்மனியில் உள்ள கரிஷ்ருக் பகுதியில் வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. German Company Continues Development Of Personal Electric Helicopter Proof-Of-Concept Aircraft Won…

Read More சத்தம் ஏதும் இல்லாமல் ஹெலிகாப்டர்கள்-ஜெர்மன் நிறுவனம்

நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..

Now, flying robot to save humans from drowning முன்பு ஒவ்வொரு நாளும் என்பது இப்பொழுது மணிதுளிக்கு மணித்துளி  மனிதன் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது. அது இன்று இன்றியமையாததாக இருக்கிறது. தண்ணீரில்  மூழ்கி, உயிருக்கு போராடுபவர்களை மின்னல் வேகத்தில் பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்த்தால் இயங்கும் ஓர்  ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில்…

Read More நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..