Pakistani man chops off girl’s nose for refusing to marry him பாகிஸ்தானில் தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை வாலிபர் ஒருவர் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான செயல் குறித்து போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். லாகூருக்கு அருகிலுள்ள பகவல்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் பஷீர் அஹமது. அதே கிராமத்தில் விவசாயம் செய்து வரும் நதீம் என்ற வாலிபர் பஷீரின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு பஷீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த நதீம், அவருடைய தந்தை மற்றும் கூட்டாளிகளுடன் பஷீரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகளை சித்ரவதை செய்துள்ளார். பின்பு…
Read More பாகிஸ்தானில் திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபனின் கொடூரம்Category: உலகம் சிறகுகள்
அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி ஒருவர் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து உள்ளார்
Shopping bags make a fine fuel: Indian-origin scientist இன்றைய சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கிடையில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து அமெரிக்க வாழ் இந்தியரான விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளனர்.இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும்…
Read More அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி ஒருவர் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து உள்ளார்பிப்ரவரி 13 உலக வானொலி தினம்
Today is World Radio Day நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. இந்நிலையில்தான் ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.வானொலி நம்மில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் இப்போதும் பலருண்டு.அது போல் வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை நம் செவிகளில் வந்து மோதும். முன்னரே…
Read More பிப்ரவரி 13 உலக வானொலி தினம்சீனாவில் அதிகம் சாப்பிட்டு மதுவும் அருந்திய பெண் ஒருவரின் வயிறு வெடித்த வினோதம்
Woman’s stomach explodes after eating too much சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்ட பெண் ஒருவர் அதிகம் சாப்பிட்டு, மதுவும் அருந்தியதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவருடைய வயிறு வெடித்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனத் தலைநகரான பீஜிங்கில் நடந்த வினோத சம்பவம் ஒன்றில் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது அவரது வயிறு வெடித்தது. 58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அதற்காக ஒரு மின்சார கத்தியை பயன்படுத்தினர் (electric surgical knife). அப்போது இக்கத்தி, அப்பெண்ணின் வயிற்றில் இருந்த எத்தில் அல்கஹால் மீது பட்டபோது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது. இதனால்…
Read More சீனாவில் அதிகம் சாப்பிட்டு மதுவும் அருந்திய பெண் ஒருவரின் வயிறு வெடித்த வினோதம்அமெரிக்க சில்லறை வணிக நிறுவனத்தில் சிகரெட், புகையிலை விற்பதில்லை என முடிவெடுத்து உள்ளனர்
CVS Vows to Quit Selling Tobacco Products அமெரிக்காவின் பார்மஸி சில்லரை வணிக நிறுவனமான சிவிஎஸ் கேர்மார்க், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதில்லை என முடிவு செய்துள்ளது. அக்டோபர் 1 ம் தேதி முதல், சிவிஎஸ் பார்மஸியின் 7600 கடைகளிலும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. 800 கடைகளில் மினி க்ளினிக்களும் செயல்பட்டு வருகின்றன. புகையிலை மற்றும் சிகரெட் பொருட்களை விற்பதை தடை செய்வதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தில் நாங்கள் முழுமையாக அக்கறை செலுத்தமுடியும். நோய்க்கு காரணமாக இருக்கும் சிகரெட், புகையிலையை ஒரு கையிலும், அதை குணமாக்குவதற்காக மருந்து மாத்திரைகளை இன்னொரு கையிலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுப்பது, முரண்பாடான செயலாக இருக்கிறது. அதனால், இந்த முடிவு எடுத்தோம். ஆண்டுக்கும் 2 பில்லியன் டாலர்கள் வருமானம் குறையும் என்றாலும் நீண்டகால மக்கள் நலன் கருதி…
Read More அமெரிக்க சில்லறை வணிக நிறுவனத்தில் சிகரெட், புகையிலை விற்பதில்லை என முடிவெடுத்து உள்ளனர்ஆற்றலை அதிகரிப்பதற்காக அருந்தும் பானங்களை பயன்படுத்தும் இளைஞர்களை போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்து
Energy drinks behind substance use among teens ஆற்றலை அதிகரிப்பதற்காக இன்றைக்கு ஏராளமான பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்கி குடிக்கும் பானங்கள் இளைஞர்களை எளிதில் போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தின் சமூக ஆராய்ச்சி அமைப்பு ஆராய்ச்சியாளர் ஒய்வான் எம். டெர்ரி மெக்எல்ராத் தலைமையிலான ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்தன. இளைய தலைமுறையினர், ஆற்றலை அதிகரிக்க குடித்துவிட்டு கடைசியில் ஆல்கஹாலுக்கு அடிமையாகி விடும் ஆபத்து அதிகம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். இன்றைக்கு குட்டிப்பாப்பா முதல் இளைஞர்கள் வரை ஏதாவது ஒரு ஆற்றல் பானங்களை குடித்து வருகின்றனர். இந்த ஆற்றல் அளிக்கும் பானங்கள் பயன்பாடு அமெரிக்காவின் இளைஞர்களிடம் 3ல்…
Read More ஆற்றலை அதிகரிப்பதற்காக அருந்தும் பானங்களை பயன்படுத்தும் இளைஞர்களை போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்துஉயிரற்றவரின் கண் செல்கள் மூலம் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு கண் பார்வை
Eyes of the Dead Can Make the Living Blind See கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை ரெடினல் ஸ்டெம் செல்களைக் கொண்டும், இருதய கோளாறுகளை போக்க இருதய ஸ்டெம் செல்களைக் கொண்டும், அல்ஷிமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றை குணப் படுத்த நரம்பு ஸ்டெம்செல்களும், தசை திசுக்களின் குறைபாடுகளை களைய மஸ்கோஸ்கெலிடல் ஸ்டெம் செல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சோதனைகளின் பல்வேறு நிலை களைக் கடந்து வெற்றிகரமாக மனிதர்களில் சிகிச்சை யளித்து வரும் நிலையில் தற்போது இறந்தவரின் கண் செல்கள் மூலம் பார்வையற்றோர்க்கு பார்க்கும் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அதிலும் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு உயிரற்றவரின் கண்களின் செல்கள் மூலம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் பொருட்களை அடையாளம் கண்டறியும் அளவுக்குத் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உயிரிழந்தோரின் கண்களின் பின் உள்ள…
Read More உயிரற்றவரின் கண் செல்கள் மூலம் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு கண் பார்வைஅமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்
This school teacher had a house full of 400 pythons, living and dead அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைபாம்புகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம் புச்மன் என்னும் ஆசிரியர் வசித்து வந்தார். இவருக்கு வயது 53. பாம்புகள் வளர்ப்பதில் அதீத ஆர்வமுடைய இவர், தனது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்துவந்தார். இவற்றிற்கு உணவாக அவர் அடிக்கடி வீட்டிற்கு அதிக அளவில் எலிகளை கொண்டுவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து அவரது வீட்டை காவல்துறையினர் சோதனையிடச் சென்றனர். அப்போது, ஐந்து அறைகள் கொண்ட புச்மனின் வீட்டை பார்த்த காவல்துறையினர்…
Read More அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்3 1/2 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்ட ஜெர்மனியை சேர்ந்த 63 வயதுபெண்
Woman Tears up the Cash Into Pieces and Flushed it Down the Toilet ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் லாட்டரி டிக்கெட் மூலம் 3 1/2 கோடி ரூபாய் வரை வெற்றிபெற்றார். ஆனால், இவர் வெற்றிபெற்ற பணத்தை கிழித்து கழிவறையில் வீசியதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் எஸ்ஸென் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண்மணி ஏஞ்சலா மேயர். இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 3 1/2 கோடி) பரிசு விழுந்தது. ஆனால் இவர் குடிபோதையில் அந்த பணத்தை துண்டு துண்டாக கிழித்து கழிப்பறையில் போட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஞசலாவின் கணவர் சில மாதங்களுக்கு முன் எஸ்ஸென் அருகிலுள்ள ஒரு பாராமரிப்பு இல்லத்தில் நோய் வாய்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.…
Read More 3 1/2 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்ட ஜெர்மனியை சேர்ந்த 63 வயதுபெண்படுத்த படுக்கையில் இருக்கும் 60 வயது மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிற 98 வயது தாய்
உலகத்தில் உள்ள அன்புகளில் ஈடு இணை இல்லாதது தாயன்பு மட்டும் தான். தள்ளாத வயதிலும், படுத்தப் படுக்கையாய் கிடக்கும் மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார் சீனாவை சேர்ந்த மூதாட்டி.கிழக்கு சீனாவின் அன்ஹீய் மாகாணத்தில் வசிப்பவர் 98 வயது மூதாட்டி ஸ்ழாங். இவரது 60 வயது மகன், கடந்த 20 ஆண்டுகளாக பெரலைஸிஸ் என்ற பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக உள்ளார். இத்தனை ஆண்டுகளாகவும் தாயன்பு என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ வைத்து வருகிறது. மகனுக்கு உணவு ஊட்டுவது, அவரது இயற்கை உபாதைகளைத் துடைத்து சுத்தம் செய்வது என இந்த தள்ளாத வயதிலும் பணிவிடை செய்து வரும் இந்த மூதாட்டியை ‘தாய்மையின் அடையாளம்’ என்று சீன மக்கள் புகழ்கின்றனர். இவரைப்பற்றி கேள்விப்பட்ட சில சமூக ஆர்வலர்கள், தாங்களாகவே முன்வந்து நிதி திரட்டி…
Read More படுத்த படுக்கையில் இருக்கும் 60 வயது மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிற 98 வயது தாய்