3 1/2 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்ட ஜெர்மனியை சேர்ந்த 63 வயதுபெண்

Woman Tears up the Cash Into Pieces and Flushed it Down the Toilet

Woman Tears up the Cash Into Pieces and Flushed it Down the Toilet

ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் லாட்டரி டிக்கெட் மூலம் 3 1/2 கோடி ரூபாய் வரை வெற்றிபெற்றார். ஆனால், இவர் வெற்றிபெற்ற பணத்தை கிழித்து கழிவறையில் வீசியதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் எஸ்ஸென் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண்மணி ஏஞ்சலா மேயர். இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 3 1/2 கோடி) பரிசு விழுந்தது. ஆனால் இவர் குடிபோதையில் அந்த பணத்தை துண்டு துண்டாக கிழித்து கழிப்பறையில் போட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஞசலாவின் கணவர் சில மாதங்களுக்கு முன் எஸ்ஸென் அருகிலுள்ள ஒரு பாராமரிப்பு இல்லத்தில் நோய் வாய்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி திடீரென இறந்து விட்டார். பரிசு விழுந்த சில நாட்களுக்குப் பிறகு தகவலறிந்த பராமரிப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள் கணவரின் சிகிச்சைக்காக அவர் தர வேண்டிய மருத்துவ கட்டண தொகையை பெற ரசீதை ஏஞ்சலாவிற்கு தபாலில் அனுப்பினர்.  குடிபோதையில் இருந்த ஏஞ்சலா, தபாலை பிரித்து பார்த்தபோது அதில் கட்டண ரசீது இருப்பதை பார்த்தவுடன் கோபமடைந்தார். அதிர்ஷ்டமாக கிடைத்த பரிசு பணத்தின் ஒரு பகுதியை மருத்துவ கட்டத்திற்காக செலுத்துவதைவிட கிழித்து விடலாம் என நினைத்து துண்டு துண்டாக அந்த பணத்தை கிழித்து கழிவறையில் போட்டு விட்டதாக தெரிகிறது. 

கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதற்காக ஏஞ்சலா நாடகமாடியிருக்கிறார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், ஏஞ்சலா இந்த வழக்கை முடிக்க 3 ஆயிரத்து 300 பவுண்டுகள் இழப்பீடாக கொடுப்பதாக ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Woman Tears up the Cash Into Pieces and Flushed it Down the Toilet

A 63-year-old German woman who won the local lottery decided to tear up the cash into pieces and flushed it down the toilet.  Angela Maier, from Essen in Germany, won the German national lottery recently. But her win prompted the care home where her husband died to send her a bill towards his medical expenses.  She opened the letter after downing five bottles of champagne a few days after she won the lottery and according to court details, she became angry with the bill and destroyed the cash rather than have some of it taken from her, the report said.  Maier may have made up the story to avoid paying the bills but it would be difficult to prove, the court heard. She has agreed to pay 3,300 pounds in compensation to settle the case.

Related posts