International Women’s Day March 8 இன்று சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க படுகிறது.பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் 1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்டகாரர்களை சமாதான படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான். அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள்…
Read More மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மாதர் தினம்Category: உலகம் சிறகுகள்
ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ள கூடாது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
People should cut their sugar intake to just six teaspoons a day ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது என்றும், அதில் அபாயகரமான அளவில் சர்க்கரை இருப்பதாகவும் அது கூறியுள்ளது. 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொண்டால், அது உ டல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று விடுமாம். புகையிலை எந்த அளவுக்கு உடலுக்கு தீங்கானதோ அதே போல சர்க்கரையும் அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி காரணமாக பல சிசுக்கள் பிறப்பதற்கு முன்பே இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. லண்டனைச் சேர்ந்த இதயவியல்…
Read More ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ள கூடாது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கைஅமெரிக்காவில் தொடர்ந்து காணாமல் போகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள்
Indian-origin student reported missing in US அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து காணாமல் போவது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளோரிடாவில் உள்ள கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்ற 21 வயது மாணவர் ரெனி ஜோசை கடந்த திங்கள்கிழமை முதல் காணவில்லை. நண்பர்களிடம் கடற்கரையில் நடந்துவிட்டு வருவதாக சொன்ன ஜோஸின் உடைகள், மொபைல் போன் மற்றும் உடைமைகள் ஒரு குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து ஜாஸ்மின் ஜோசப் என்னும் 22 வயது இளம்பெண் மாயமாகியுள்ளார். இவரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மற்றொரு இந்திய வம்சாவளி மாணவரான பிரவீன் வர்கீஸ் காணாமல் போய் இலினியாஸில் உள்ள காட்டு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Indian-origin student reported missing in US A 22-year-old…
Read More அமெரிக்காவில் தொடர்ந்து காணாமல் போகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள்அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் மருந்து கண்டுபிடிப்பு
2nd HIV baby seemingly cured of virus in Los Angeles சென்ற வருடம் அமெரிக்காவின் மிஸிசிபி மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் கொண்ட தாயாருக்குப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அது பிறந்த 30 மணி நேரத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போது அது பூரண நலமுடன் இருப்பதாகவும் இந்தக் குழந்தைகள் நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டால் ஆண்டுதோறும் இதே நோயுடன் பிறக்கும் 3,00,000 குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் தொடங்கக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் லாங் பீச் என்ற இடத்தில் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைக்கு அதே முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒன்பது மாதங்கள் நிறைந்துள்ள இந்தப் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இன்னமும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வரும்போதிலும் அந்தக் குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் நோய்…
Read More அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் மருந்து கண்டுபிடிப்புசீனாவில் அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டது
The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese News Agency reported on Wednesday. பீஜிங்: அமெரிக்க தனியார் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் சீனாவில் உள்ள சோங்கிங் எனும் நகரில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்ளூர் வர்த்தகர்களால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகள் மற்றும் வருமானம் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் வால்மார்ட் நிறுவனம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்தநவம்பர் டிசம்பரில் மட்டும் 10 கடைகளை மேற்கண்ட நிறுவனம் இழுத்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese News Agency reported on Wednesday. இதையும் படியுங்கள் அமெரிக்காவில் எய்ட்ஸ்…
Read More சீனாவில் அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டதுதுணிச்சலுக்கான சர்வதேச விருது அமிலம் வீச்சில் பாதிக்கபட்ட இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது
Indian woman receives International Women of Courage Award துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமியின் பெயரை இந்த விருதுக்காக அமெரிக்கா தேர்வு செய்துள்ளது. 2007ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே. லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விருதை அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு…
Read More துணிச்சலுக்கான சர்வதேச விருது அமிலம் வீச்சில் பாதிக்கபட்ட இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறதுநைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் மூட நம்பிக்கையால் தன் குழந்தையின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்தே கொன்றற்
Nigerian dad ‘Locked Son’s Mouth With Padlock Because he Wouldn’t Stop Screaming Then Beat him to Death’ நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவரது மகனை பேய் பிடித்துவிட்டதாக கருதி மூட நம்பிக்கையால் குழந்தையின் வாயை பூட்டி அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்தவர் க்றிஸ் எல்விஸ். இவருக்கு வயது 30. சமீபத்தில் இவருக்கு குடும்பத்தில் சில துயர சம்பவங்கள் நடைபெற்றது. இதற்கு தனது குழந்தைக்கு பேய் பிடித்தது தான் காரணமென எண்ணிய எல்விஸ் குழந்தையின் வாயை பூட்டி, அடிக்க துவங்கினார். மேலும், குழந்தையின் உடல் முழுவதும் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்து ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு பூட்டி வைத்துள்ளார். வெளியே சென்ற சிறுவனின் தாய் வீடு திரும்பிய போது சிறுவனை காணாததால் பதற்றம் அடைந்து, எல்விசிடம்…
Read More நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் மூட நம்பிக்கையால் தன் குழந்தையின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்தே கொன்றற்பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினம்
Today is International Mother Language Day உலகில் பேசப்படும் மொழிகள் பொது மொழி தாய்மொழி என வகைப்படுத்தப்படுகிறது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. இந்நிலையில் உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர்.…
Read More பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினம்இறந்து போன சிசுவை 44 ஆண்டுகளாக கருப்பையில் சுமந்து கொண்டிருக்கும் 84 வயது மூதாட்டி
Doctors find 44 year old fetus inside 84 year old woman பிரேசில் நாட்டை சேர்ந்த 84 வயது பெண்ணுக்கு பல ஆண்டாக வயிற்று வலி ஏற்பட்டு தொல்லை கொடுத்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டார். இந்த வலியானது அவரது 40-வது வயது பிரசவ காலத்தில் இருந்தே தொடர்கதையாக இருந்தது. சமீபத்தில் மருத்துவமனையில் அவருக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்த போது கருப்பைக்கு வெளியே சிசு உருவாகி உயிரற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிசுவுக்கு 20-28 வாரம் இருக்கலாம். கை-கால், முதுகெலும்பு, விலா எலும்பு ஆகியவை உருவாகி இருக்கிறது. இதுபற்றி டாக்டர் கூறுகையில், ‘இதுபோல சில பெண்களுக்கு கருப்பைக்கு வெளியே சிசு உண்டாவதுண்டு. இந்த மூதாட்டியின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு சுமார் 44 ஆண்டுக்கு முன்பு உருவானது. அது இறந்து விட்டதால் அதை…
Read More இறந்து போன சிசுவை 44 ஆண்டுகளாக கருப்பையில் சுமந்து கொண்டிருக்கும் 84 வயது மூதாட்டிஇங்கிலாந்தில் தாடி மீசை வளர்கும் 23 வயது பெண்
Teaching Assistant who Suffered Taunts Because of her Excessive Hair Decides to Stop Trimming it After Being Baptised a Sikh இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மீசை, தாடி அதிக அளவில் வளர்ந்து வருவதால், அவர் இனி மீசை, தாடியுடனேயே வாழ்வது என்று முடிவெடுத்துள்ளார். இங்கிலாந்தில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு போன்ற பகுதிகளில் முடி வளர்ந்து, அவருடைய உண்மையான அடையத்தை மாற்றியுள்ளது. ஹர்னாம் கவுர் என்னும் இந்தப் பெண்ணுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்ற நோய் அவருடைய 11 வயதில் தாக்கி முகத்தில் முடி வளர ஆரம்பித்துள்ளது. அதனால் இவர் பள்ளியில் சக மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளானார். இதனால் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால்,…
Read More இங்கிலாந்தில் தாடி மீசை வளர்கும் 23 வயது பெண்