Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital here today after he complained of uneasiness. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாச்சலம் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறைக்கு அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சென்றிருந்தார். திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital in coimbatore
Read MoreCategory: தமிழக சிறகுகள்
தமிழகத்தில் வாக்களிக்க வசதியாக தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை
Polling day: Holiday must for all on Thursday, says Tamil Nadu Government தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்கவேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது தமிழக அரசு. அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951-ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் பிரிவு 135 பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள்,…
Read Moreநரேந்திர மோடி ஏன் ஈழத் தமிழர்கள் பற்றி பேசாமல் இருக்கிறார்? : – உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி
pazha nedumaran upset over modi not speaking about ezham tamils ஈழத் தமிழர் பிரச்சனை சம்பந்தமாக பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் ஓர் பிரபல பத்திரிக்கைக்கு நெடுமாறன் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், பா.ஜ.க தங்களது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றியும், இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் இந்திய தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது போன்ற பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க தலைமை இந்த பிரச்னைகளை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. மேலும், பிரசாரத்திற்கு தமிழகம் வந்த நரேந்திரமோடியும் மேற்கூறிய பிரச்சனைகள் பற்றி எந்த ஒரு கருத்தும் நேரடியாக தெரிவிக்கவில்லை. இது நரேந்திர…
Read Moreமக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக களம் இறங்கிய ஒரு திருநங்கை
நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு திருநங்கை விண்ணப்பித்து இருக்கிறார். இதன் மூலம் மதுரை தொகுதியில் போட்டியிடும் பாரதி கண்ணம்மா அரசியல் கட்சிகளின், மக்களின் கவனத்தை கவர்ந்து இருக்கிறார். அனேகமாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் இவர் இந்தியாவின் முதல் திருநங்கையாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன என்று கேட்டோம் அவரிடம். “பல பெரிய கட்சிகள் போட்டியிடும் தேர்தல் களத்தில் நான் வெற்றி பெற்று எம்.பி.யாவேன் என்பதெல்லாம் இப்போது உடனே இயலாத காரியம் என்பதை நான் அறிவேன். எனினும் இதர பாலினத்தவர்களில் ஒருவர் போட்டியிடுவது என்பது தேர்தல் அரசியலில் நாங்களும் பங்கேற்கிறோம் என்பதை அறிவிக்கவும் ஓரளவுக்கு வாக்குகள் பெற்றாலும்கூட நாங்கள் இன்னும் வலுவாக எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலுமே களம் இறங்கி இருக்கிறேன்…
Read Moreஅருஞ்சுனை காத்த அய்யனார் – கழுகாசலமூர்த்தி கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர், குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார், கழுகுமலை கழுகாசலமூர்த்தி சுவாமி, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலப்புதுக்குடி தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் இரவு…
Read Moreபறக்கும் படையினர் முதல்வர் ஜெயலலிதா பயணித்த ஹெலிகாப்டரை அதிரடியாக சோதனையிட்டனர்
Election officials have searched the helicopter used by CM Jayalalithaa after she landed in Coimbatore on tuesday. பொள்ளாச்சி பொதுக்கூட்டத்துக்கு வந்த முதல்வரின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடியாக நேற்று சோதனையிட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதி வேட்பாளரான மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்ய, பொள்ளாச்சி உடுமலை ரோடு சின்னாம்பாளையத்தில் உள்ள பல ஏக்கர் மைதானத்தில் பிரசார பொதுக்கூட்ட மேடையும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வந்தார். பின்பு விழா மேடைக்கு காரில் சென்றார். தொடர்ந்து, பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ், தேர்தல் பறக்கும்படை அதிகாரி பார்த்திபன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், முதல்வர் வந்த ஹெலிகாப்டரை அதிரடியாக…
Read Moreதமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார்
Tamil nadu State police department under election commission control தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார் சென்னை: சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் பிரவீண் குமார் இன்று கூறுகையில், தமிழ்நாட்டில் டி.ஜி.பி., முதல் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தினுடைய ஆணைப்படி அதன் கட்டுப்பாட்டில் செயல்பட உள்துறை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளை தவிர்த்து ஏனைய கட்சிகள் எதுவும் சமூக இணையதளங்களில் பிரசாரம் செய்ய முன் அனுமதி கேட்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை, ருபாய் 13 கோடியே 16 லட்சம் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. சுமார் ருபாய் 6 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணியில் சுமார் 35 ஆயிரம் மாணவ மாணவிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்…
Read Moreஅதிமுக எம்.பி தம்பிதுரையை ஓட்டு கேட்க ஊருக்குள் நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர்
ADMK’s Candidate M. Thambidurai is fighting voters he finished his campaign last night கரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற அதிமுக எம்.பியும் தற்போதைய அதிமுக வேட்பாளருமான தம்பித்துரையை ஊருக்கு நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பித்துரை பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை எம்.பி. பிரச்சாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை செவலிப்பட்டி என்ற இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா, அட்மா சேர்மன் பழனியாண்டி, துணை சேர்மன் திருமூர்த்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் சென்றனர். இரவு 7.30 மணியளவில் வானதிரையான்பட்டி கிராமத்தில் தம்பிதுரை பிரச்சாரம் செய்ய சென்ற போது கிராம மக்கள் ‘கடந்த 5 வருடத்தில்…
Read Moreராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Seven Rajiv Gandhi killers, including Nalini Sriharan, to be freed, decides Tamil Nadu government சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில்தான் இம்மூவரையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இன்று தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர்…
Read Moreநெய்வேலி அருகே குளிர்பானம் அருந்திய 9 வயது சிருமி மரணம்
child dies after drinking soft drink near neyveli நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மூன்றுபேர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் குடித்த 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெய்வேலியை அடுத்த தெற்கு சேப்பளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர், தனது குழந்தைகளுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பிலான குளிர்பானத்தை வாங்கி கொடுத்துள்ளார். அதனை குடித்த அவரது நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகளை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு…
Read More