Stainless steel and brass vessels Workshop Workers on Strike 5வது நாளாக திருப்பூரில் எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர பட்டறை தொழிலாளர்கள் ஸ்டிரைக். திருப்பூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் இரண்டு ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் . ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தையில் தோல்வி அடைந்ததால் தொழிலாளர்கள் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது . வேலை நிறுத்தம் காரணமாக பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, 28ம் தேதியிலிருந்து தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. இதைதொடர்ந்து கடந்த 4 நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இருதரப்பினரிடையே நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை…
Read MoreCategory: தமிழக சிறகுகள்
சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கான தகுதிதேர்வில் சாதனை
A cycle shop owner’s daughter from Nellai has excelled in English skill test and now going to London for higher studies. சாதாரண, கிராமத்து சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது கிராமமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள காருகுறிச்சியை சேர்ந்தவர் முப்பிடாதி. அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது இரண்டாவது மகள் சுப்புலட்சுமி, நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். இரண்டாமாண்டு படிக்கிறார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முழுவதையும் இலவசமாகப் படித்து தேர்வு எழுதுவதற்கான சிறப்பு தகுதி தேர்வு நடந்தது. அரசு கல்லுரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த…
Read Moreஇயற்கை வேளாண்மை விஞ்ஞானி கொ.நம்மாழ்வார் இயற்கை எய்தினார்
Organic farming scientist Nammalvar passes away முதுபெரும் இயற்கை விவசாய ஆர்வலர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்கோட்டை கிராமத்தில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு 75 வயது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றினார். ஆனால் அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுற்று வெளியேறி, பின்னர் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மாதிரிப் பண்ணை ‘இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இப்போதைய தேவை. கம்பு, எள், கேழ்வரகு (குரக்கன்), கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமை உணவுக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்’…
Read Moreகாவல்துறையினர் தாக்கியதில் வாலிபர் சாவு – மக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு
Tractor driver killed in police inquiry at Thiruthuraipoondi in a Police station at Thiruvarur district of Tamil Nadu திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளம் வாலிபர், காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். அதனால் காவல் துறையினரை கண்டித்து, 3000க்கு அதிகமான, பொதுமக்கள் ஒன்று கூடி சாலைமறியல் செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கீரைக்கழூர் பஞ்சாயத்தில் இருக்கும் நங்காளி கிராமத்தை சேர்ந்த முருகையநின் மகன் சுந்தர், வயது 34. உழவு வாகன ஓட்டுனராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு, ஆலிவலம் காவல்துறையினர் ஓர் வழக்கு விசாரணைக்காக, காவல் நிலையத்திற்கு சுந்தரை கூட்டிச் சென்றனர். அன்று இரவு சுந்தரை விசாரணையின் போது அடித்து, கொடூரமாக தாக்கி காவல்துறையினர் சித்ரவதை செய்ததாக…
Read Moreதமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
Tamilnadu Government Transferred 8 IAS officers on Tuesday ahead of general elections, The orders were released to the media after chief minister J.Jayalalithaa left for the Kodanad estate at Nilgiris district. தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடைய பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:– தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புள்ளியயல் துறை கமிஷனராக இருக்கும் டாக்டர் இறையன்பு அண்ணா நிர்வாக கழகம் இயக்குனர் மற்றும் முதன்மை செயலாளர் பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இயக்குனர் பொறுப்பை இதுவரை அனிதா பிரவீன் கூடுதல்…
Read Moreதூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Madras High Court of Madurai Branch today denied bail to 35 crew member தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நவீன ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் கப்பலில் வந்த 35 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பாக ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. English Summary : The Madras…
Read Moreமருத்துவ கழிவு பொருட்களால் வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள்…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர், மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படும். பயன்படுத்தப்பட்ட ஊசிகள், செயற்கை சுவாசக் குழாய்கள், சிரிஞ்சுகள், கத்தி, ரத்தக்குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை மருத்துவக்கழிவுகள் ஆகும் . சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப்…
Read Moreடிசம்பர்-11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 132ஆவது பிறந்தநாள்
Today Bharathiyar’s Birthday (11 December) தமிழ் வரலாற்றில் சிறந்த முதல் மூன்று கவிகளுள் பாரதியும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. தனது எழுத்துகளில் பல பரிணாமங்களை கொண்ட ஒரே கவி பாரதியே! இன்றைய வரலாற்று நாளில், இவர் புகழ் கூற நினைவுகொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞன். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே சொன்னவர் பாரதியார். அந்த மகாகவி பிறந்த தினம் டிசம்பர் 11. தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்தியா முழுவதற்கும் உரிமையான கவிஞன்தான் பாரதி. இன்று 132-வது பிறந்த நாள் விழா காணும் எமது மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றிய சில குறிப்புகள். பெயர்: சுப்பிரமணிய…
Read Moreஅ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல்
சேலம்: அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல் இன்று காலை ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதன்படி அ.தி.மு.க,. 35 ஆயிரத்து ஆயிரத்து 609 ஓட்டுக்கள் பெற்று 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 6 வது சுற்று தவகலின்படி முன்னிலையில் உள்ளது. 17 ஆயிரத்து 880 ஓட்டுக்கள் தி.மு.க பெற்றுள்ளது. 1,276 பேர் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என பதிவு செய்துள்ளனர். தே.மு.தி.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 வது சுற்று நடந்த போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுதப்பட்டது,பின்னர் அரை மணி நேரம் கழித்து…
Read Moreதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நிர்வாக மாற்றம்.
10 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிர்வாக மாற்றம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி வெளியிட்டார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ஹெச்.வசந்தகுமார் உள்பட 17 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக கோவை தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ப. சிதம்பரம், சுதர்சன நாச்சிப்பன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அடங்கிய செயற்குழுவில் மொத்தம் 43 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.எஸ். ஞானதேசிகன் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை அகில…
Read More