ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Seven Rajiv Gandhi killers, including Nalini Sriharan, to be freed, decides Tamil Nadu government

 Seven Rajiv Gandhi killers, including Nalini Sriharan, to be freed, decides Tamil Nadu government

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில்தான் இம்மூவரையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அப்போது அவ்ர்,” ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு; தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும்; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433என்-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

உச்ச நீ மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், இது குறித்து உடனடியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 19.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இருப்பினும், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று தெரிவித்தார்

Seven Rajiv Gandhi killers, including Nalini Sriharan, to be freed, decides Tamil Nadu government

The Tamil Nadu government has decided to release seven people convicted in the assassination of former prime minister Rajiv Gandhi, including Nalini Sriharan, in a politically loaded move that is likely to set off a battle for credit ahead of the national election, due by May.  Chief Minister Jayalalithaa’s cabinet met this morning and decided to free the convicts a day after the Supreme Court left it to the state to grant them remission. The state government, however, has to consider the Centre’s views.  The convicts have been in jail for 23 years.  Nalini Sriharan, the wife of convict Murugan, was granted mercy in 2000 on the intervention of Rajiv Gandhi’s widow, Congress president Sonia Gandhi.  The top court had yesterday spared Murugan, Santhan and Perarivalan from execution, citing the 11-year delay in a decision on their mercy plea. The court rejected the government’s view that the convicts did not deserve mercy as they had shown no remorse and there was “no agony, torture or dehumanizing effect due to the delay.”  The largely pro-Lankan Tamil sentiment in the state gave a political twist to the assassination case, which has been inextricably linked to Tamil Nadu’s electoral politics over the years. All parties have joined calls for the convicts’ release; even Congress politicians from the state have not opposed it.  “I am not unhappy,” union minister P Chidambaram, who is from Tamil Nandu. “Our grief at Rajiv Gandhi’s loss is irreparable. The court made it possible. I do not see this as cynical politics.” He sought to blame the previous BJP-led government at the Centre for sitting on their mercy petition for four years.  Jayalalithaa’s rival Karunanidhi of the DMK said, “It’s not a prompt decision by the state government. They ridiculed me when I proposed their release.” Santhan, Murugan, Perarivalan and the others were convicted in 1998 for Mr Gandhi’s assassination by a woman operative of the Lankan Tamil separatist outfit LTTE, who greeted the Congress leader with a sandalwood garland and a bomb strapped to her chest during a rally in 1991.  Their hanging was stayed in 2011 on the orders of the Madras High Court. That year, the Tamil Nadu assembly passed a resolution urging the President to grant mercy to the convicts and consider “Tamil sentiment.” 

Related posts