தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…

Read More தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

தமிழ்நாடு காவல் துறைக்கு புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குனர் : திரு.அசோக் குமார் நியமனம்.. Tamilnadu new DGP Mr.Ashok Kumar.

Tamilnadu new DGP – Mr.Ashok Kumar. தமிழ் நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குநராக உளவுத்துறை டி.ஜி.பி.யாக இருந்த திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையினுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கே.ராமானுஜம் நவம்பர் மாதம் 4-ம் தேதியோடு பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி, அந்தப் பணிக்கு தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றிய திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் திரு.மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்துள்ளார். இதனிடையே மேலும், ஓய்வு பெறும் டி.ஜி.பி. திரு.ராமானுஜத்தை தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமித்து உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். புதிய டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.அசோக் குமார், ஹரியாணா…

Read More தமிழ்நாடு காவல் துறைக்கு புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குனர் : திரு.அசோக் குமார் நியமனம்.. Tamilnadu new DGP Mr.Ashok Kumar.

வறுமையின் காரணத்தால் தனது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

‘கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்பம் வறுமையில் வாடி அழுத குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாததால் அடித்து கொன்றேன்‘ என குழந்தை கொலையில் கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை கோயில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (28). இவரது மனைவி ஜோதிமணி (25). இவர்களுக்கு ஸ்ரீதேவி என்ற மகளும், ஒன்றரை வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். சத்யராஜுக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் ஜோதிமணி அழும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, குழந்தை திவ்யதர்ஷினி உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது, கணவர் சத்யராஜ், குழந்தையை அரிவாளால் தாக்கி கொன்று தீவைத்து கொளுத்திவிட்டு சென்று விட்டார்…

Read More வறுமையின் காரணத்தால் தனது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் 4 ஆண்டுகள் சிறை

Jayalalithaa Sentenced to Four Years in Jail in Corruption Case by Bangalore Court வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம்…

Read More சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் 4 ஆண்டுகள் சிறை

தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக மருத்துவ சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சித் தகவல்

30 thousand fake doctors indian medical association balasubramanian தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். கவுன்சில் கூட்டம் இந்திய மருத்துவ சங்கத்தின் 280-வது கவுன்சில் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் (தேர்வு) சுரேந்திரன், செயலாளர் ராஜா, பொருளாளர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய மருத்துவ சங்கம் கடந்த 1928-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்திய அளவில் தமிழகம் அதிக உறுப்பினர்களை கொண்ட கிளையில் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் இச்சங்கத்தில் 30 ஆயிரம் டாக்டர்கள்…

Read More தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக மருத்துவ சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சித் தகவல்

மதுரையில் பட்டப்பகலில் 3 பேர் வெட்டிக் கொலை

Gang hacks three youths to death in broad daylight மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர், மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் குண்டுமலை. இவரது மகன்கள் கருப்புராஜ் (வயது 23), பாம்பு நாகராஜ் (18). இவர்கள் இருவரும் கோவையில் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். இவர்களது வீட்டிற்கு நாகராஜின் நண்பர் கார்த்திக் (22) என்பவரும் வந்திருந்தார். நேற்று மதியம் 3 பேரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் 3 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொலையாளிகள் நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தை சேர்ந்த…

Read More மதுரையில் பட்டப்பகலில் 3 பேர் வெட்டிக் கொலை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்

Newborn girl stolen from medical college hospital நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி சரோஜா. இவர் இரண்டாவது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சரோஜா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரவசத்திற்காக கடந்த 8ம் தேதி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 9ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பிரவச வார்டு மாடியில் உள்ள குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை பிரிவில் இருந்தனர். சரோஜாவுடன் அவரது உறவினர் என்ற பெயரில் ஜெயலட்சுமி என்பவர் தங்கியுள்ளார். சரோஜாவுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார். இந்நிலையில்,…

Read More திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்

இன்று எழுத்தாளர் கல்கியின் பிறந்தநாள்

வரலாற்றுப் புதினத்தின் தந்தை எனஅழைக்கப்பட்ட கல்கி அவர்களின் பிறந்தநாள் இன்று. தம் படைப்புகளால் சமகால சமூகநிலையைப் பிரதிபலித்ததோடு, வரலாற்றையும் திரும்பிப்பார்க்கவைத்தவர் கல்கி ஆவார். கல்கி (செப்டம்பர் 9, 1899 – டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில்…

Read More இன்று எழுத்தாளர் கல்கியின் பிறந்தநாள்

தமிழக சிறைகளில் இருந்து ஒரே நாளில் 3000 விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

A total of 3,000 undertrials were released at the annual prison adalats held in Tamilnadu prisons. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, தமிழக சிறைகளில் நீண்ட காலம் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் சுமார் 3 ஆயிரம் பேர் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய சிறைகளில் உள்ள 4 லட்சம் சிறைக் கைதிகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் நீண்ட கால விசாரணையின் காரணமாக பல ஆண்டுகள் தண்டணை வழங்கப்படாமலேயே விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு கிடைக்கும் தண்டனையில் பாதி காலத்தை, அவரது தண்டனை நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதியாகவே கழித்துவிட்டால், அவரை விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, தண்டனைக் காலத்தில் பாதி…

Read More தமிழக சிறைகளில் இருந்து ஒரே நாளில் 3000 விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

திருமணமான அன்றே புதுமாபிள்ளை தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே மணமான அன்றே மணமகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா (29) என்ற ஆட்டோ டிரைவர். நேற்று காலை இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண கொண்டாட்டத்தால் ஜீவாவின் வீடு களை கட்டியிருந்தது. இந்நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவைக் காணவில்லை என புதுப்பெண் அவரது வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜீவாவை உறவினர்கள் வீடு முழுக்க தேடியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் ஜீவா தூக்கில் தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீசார் விரைந்து சென்று ஜீவாவிடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான அன்றே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது ஏன்?…

Read More திருமணமான அன்றே புதுமாபிள்ளை தூக்கிட்டு தற்கொலை