police arrested a 30 year old drunken man for stripping and assaulting his 28 year old wife after suspecting her at Bhiwandi in Maharashtra. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் குடிபோதை தலைக்கு ஏறி தனது மனைவியை தெருவுக்கு இழுத்து வந்து நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தினால் தாக்கிய குடிகார கணவன் காவல்துறையினரால் கைது செய்யபட்டான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் பிவான்டியைச் சேர்ந்த குடிகாரன் கமால் அன்சாரி(வயது 30). அவனுக்கு தனது 28 வயது மனைவியின் நடத்தை மேல் திடீரென சந்தேகம் உண்டானது. இந்த நிலையில் குடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அன்சாரி தனது மனைவியை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தான். பின்னர் தெருவிலே, அவரை நிர்வாணமாக்கி கூர்மையான ஓர் ஆயுதத்தை வைத்து அவருடைய உடலில் பல இடங்களில் குத்தி…
Read More மனைவியை தெருவில் தாக்கி நிர்வாணமாக்கிய குடிகார கணவன் கைதுCategory: தமிழ் சிறகுகள் By Saravvanan R
தவறான மருத்துவ சிகிச்சையினால் பெண் சாவு: ரூ. 6 கோடி நஷ்டஈடு
Rupees 6 crores compensation for Medical Negligence கடந்த 1998ம் ஆண்டு கோல்கட்டா தனியார் மருத்துவமனையில் தவறான மருத்துவ சிகிச்சையினால் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அந்த பெண்ணின் கணவருக்கு 5.96 கோடி ருபாய் நஷ்டஈடு வழங்க உச்ச நீதிமன்றம், மருத்துவம் அளித்த தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாதயா,வி.கோபால கவுடா ஆகியவர்கள் அடங்கிய அமர்வு, மருத்துவமனையினுடைய தவறான மருத்துவ சிகிச்சையால் அனுராதா உயிரிழந்ததற்காக, அவருடைய கணவர் குணால் சஹாவுக்கு 5.96 கோடி ருபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குமாறு உத்தரவு பிரபிக்கபட்டது. இந்த தொகையை எட்டு வாரங்களுக்குள், 6% வட்டியுடன் கொடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். இந்த நஷ்டஈட்டுத் தொகையில் மருத்துவர்கள் சுகுமார் முகர்ஜியும் பல்ராம் பிரசாத்தும் தலா 10 லட்சம் ருபாய் வழங்க வேண்டும்; மற்றொரு…
Read More தவறான மருத்துவ சிகிச்சையினால் பெண் சாவு: ரூ. 6 கோடி நஷ்டஈடுகல்விக்கடனுக்கு லஞ்சம் பெற்ற சென்ட்ரல் பாங்க் கிளை மேலாளர் கைது
Central bank of India Branch manager arrested by CBI for insisting Bribe for Educational Loan ஆண்டிப்பட்டியில் கல்விக்கடன் தர லஞ்சம் பெற்ற வாங்கிய சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் வங்கி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆண்டிப்பட்டி அருகில் இருக்கும் அம்மச்சியாபுரம் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் வங்கியின் மேலாளர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிடுக்கிறார். தனது மகளுடைய பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்காக கடன் தருவதற்கு லஞ்சம் தர வற்புறுத்தியதாக பாலுச்சாமி என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாலுச்சாமி புகாரின் பேரில் சென்னை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மதுரை சிறையில் அடைத்தனர். Central bank of India Branch manager arrested by CBI…
Read More கல்விக்கடனுக்கு லஞ்சம் பெற்ற சென்ட்ரல் பாங்க் கிளை மேலாளர் கைதுபுதுடெல்லியில் திடீர் என்கவுண்டர்!! 3 ரவுடிகள் சுட்டுக்கொலை.
3 Rowdies killed in a police encounter at Delhi புதுடெல்லி: டெல்லியில் 3 பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் அதனால் டெல்லி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. டெல்லி நகரின் மிகப்பிரபலமான பெரிய கூலிப்படைத் தலைவனாக உள்ளவன் நீது தபோடியா. கொலை, கடத்தல், கொள்ளை மற்றும் கற்பழிப்பு என அவன் மீது டெல்லியில் சுமார் 50–க்கும் மேற்பட்ட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. அவனைப் பிடித்த்தால் மிகப்பெரும் ரவுடி கூட்டங்கள் பலவற்றை ஒடுக்கி விடமுடியும் என்ற கண்ணோட்டத்தோடு டெல்லி காவல்துறை ரவுடி நீது தபோடியா பற்றிய தகவல் கொடுப்பவருக்கு 7 லட்சம் ருபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவித்திருந்தனர். எனினும் அவன் காவல்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து தப்பி வந்தான். இந்நிலையில் அவன் டெல்லிக்குள் வந்து பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ஒரு…
Read More புதுடெல்லியில் திடீர் என்கவுண்டர்!! 3 ரவுடிகள் சுட்டுக்கொலை.மாநாட்டை இந்தியா புறக்கணித்தால்!!! இலங்கை தூதர் எச்சரிக்கை
prime minister Manmohan singh may not participate in common wealth summit காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால்!!! இந்தியாவுக்கு இலங்கை தூதர் எச்சரிக்கை இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கையில் நடக்கபோகும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுகையில் தமிழக மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து பிரதமர் மன்மோகன் சிங் நல்ல ஒரு முடிவை எடுப்பார் என்று கூறினார். இதனிடையில் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தொலைக்காட்சி நிருபரின் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களுடைய தற்போதைய நிலை பற்றி எந்த ஒரு…
Read More மாநாட்டை இந்தியா புறக்கணித்தால்!!! இலங்கை தூதர் எச்சரிக்கைஓடும் ரயிலில் பிறந்து கழிவறை வழியே விழுந்த குழந்தை உயிரோடு மீட்பு
The Baby born in train toilet and fell down in Track saved by passengers ஓடும் இரயில் கழிவறையில் பிரசவிக்கப்பட்டு, கழிவறை துளை வழியே தண்டவாளத்தில் விழுந்த பச்சை குழந்தை எந்த ஒரு காயமும் இன்றி மீட்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகில் ஜூம்கா கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அப்ரோஜா பிபி, தன் நிறைமாத கர்ப்பிணி மகளான திருமதி.ரெஹானி பிபியை இரயிலில் அழைத்துக் கொண்டு போனார். அப்போது இரயில் நாடியா மாவட்டம் பலாஷி இரயில் நிலையத்தில் நின்றது. நிறை மாத கர்பிணியான திருமதி.ரெஹானி பிபி கழிவறைக்குச் போனார். அங்கே திடீர் என்று அவருக்கு பிரசவம் வேதனை வந்து குழந்தையை பிரசவித்தார். பிறந்த குழந்தை கழிவறையின் துளை வழியே தண்டவாளத்தில் விழுந்தது. குழந்தை கீழே விழுந்தவுடன் அவர் கதறினார். அவரது கதறல் சத்தம் கேட்டு…
Read More ஓடும் ரயிலில் பிறந்து கழிவறை வழியே விழுந்த குழந்தை உயிரோடு மீட்புதமிழ்நாட்டில் 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம்
district collectors and other IAS officers shuffled again in tamilnadu தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்கள். இது சம்பந்தமாக தமிழக அரசு வெள்யீடு செய்துள்ள செய்திக்குறிப்பினில் அறிவித்துள்ளதாவது:- மதுரை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் நந்தகோபால் தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியாளராக உள்ள எம். கருணாகரன் மாற்றப்பட்டு நெல்லை கலெக்டர் சி.சமயமூர்த்திக்கு பதில் அந்த மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். நீலகிரி மாவட்ட ஆட்சியாளராக உள்ள அர்ச்சனா பட்நாயக், கோவை ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். கோவை ஆட்சியாளராக இருந்த கருணாகரனுக்கு பதிலாக இவர் நியமிக்கபட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியாளராக மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த நந்தகோபால் நியமிக்கபட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியாளராக இருந்த டாக்டர். ஆர்.சங்கர் நீலகிரி மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். தஞ்சை…
Read More தமிழ்நாட்டில் 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம்காவல்துறை பாதுகாப்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகரிப்பு
Special police security provided to Kudankulam Nuclear Power Plant to over come the threat by local protesters and especially from Kerala based protesters கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு திட்டத்தை எதிர்பவர்களால் தினமும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதால், இந்த கூடுதல் அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்கள். மேலும் வலுவான எதிர்ப்பு கேரளா மாநிலத்தில் இருந்து தற்சமயம் வந்துகொண்டிருப்பதாகவும் அங்கிருந்தும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அணு உலை அருகே அமைந்துள்ள கடற்பகுதியில் காவல்துறையினர் 500க்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் படகு மூலமாக ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி கூறியிருக்கிறார்.எனினும் அனல் மின்நிலையத்தில்…
Read More காவல்துறை பாதுகாப்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகரிப்புபிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்
BJP leader and former deputy chief minister of Bihar, Sushil Kumar Modi, said FIR must be lodged against PM Manmohan Singh too in coal allocation case. பிரதமர் மன்மோகன் சிங் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று முன்னாள் நிலக்கரித் துறைசெயலர் பி.சி.பரேக் கூறியிருக்கிறார். சி.பி.ஐ தன் மீது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் தான் வெளிப்படையான அணுகுமுறையை இந்த சுரங்க ஒதுக்கீட்டில் கொண்டு வந்ததாக தெரிவித்தார். பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி இந்நிலையில் பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால்…
Read More பிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் திருட்டு
glass broken and stolen 4 lakh rupees and a laptop from car in t nagar சென்னையில் நேற்று மாலை கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருக்கிறது. ரியாஸ்அகமது (வயது 32) என்பவர் பாலவாக்கம் பல்கலைநகரைச் சேர்ந்தவர். இவர் தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் ஆடை வாங்குவதற்கு நேற்று மாலை (செவ்வாய்கிழமை) சென்றார். காரில் சென்றிருந்த அவர், கடையின் அருகில் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். உடுப்புகள் வாங்கிய பின் காரை எடுப்பதற்கு வந்த ரியாஸ் அதிர்ச்சியடைந்தார். அவரது காரின் கண்ணாடி உடைக்கபட்டிருந்தது. அதில் வைக்கபட்டிருந்த 4 லட்ச ரூபாயும், தனது லேப்டாப்பும் காணமல் போயிருந்தது. இது பற்றி ரியாஸ், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்…
Read More சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் திருட்டு