புதுடெல்லியில் திடீர் என்கவுண்டர்!! 3 ரவுடிகள் சுட்டுக்கொலை.

3 Rowdies killed in a police encounter at Delhi

புதுடெல்லி: டெல்லியில் 3 பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் அதனால் டெல்லி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

3 Rowdies killed in a police encounter at Delhi

டெல்லி நகரின் மிகப்பிரபலமான பெரிய கூலிப்படைத் தலைவனாக உள்ளவன் நீது தபோடியா. கொலை, கடத்தல், கொள்ளை மற்றும் கற்பழிப்பு என அவன் மீது டெல்லியில் சுமார் 50–க்கும் மேற்பட்ட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது.

அவனைப் பிடித்த்தால் மிகப்பெரும் ரவுடி கூட்டங்கள் பலவற்றை ஒடுக்கி விடமுடியும் என்ற கண்ணோட்டத்தோடு டெல்லி காவல்துறை ரவுடி நீது தபோடியா பற்றிய தகவல் கொடுப்பவருக்கு 7 லட்சம் ருபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவித்திருந்தனர். எனினும் அவன் காவல்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து தப்பி வந்தான்.

இந்நிலையில் அவன் டெல்லிக்குள் வந்து பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு டெல்லி காவல்துறை கமாண்டோக்கள் தெற்கு டெல்லியில் இருக்கும் வசந்த் கஞ்ச் எனும் பகுதியில் உள்ள ஓட்டல் கிரான்ட் ஹயாத் அருகில் பதுங்கியிருந்த ரவுடி நீது தபோடியாவை சுற்றி வளைத்தார்கள். அவனுடன் அப்போது மேலும் இரு ரவுடிகள் இருந்துள்ளனர்.

காவல்துறையினர் தன்னை சுற்றிவளைத்ததை தெரிந்து கொண்ட அவன் காரில் தன்னுடன் இருந்த 2 நண்பர்களுடன் தப்பிச் செல்ல முயற்சி செய்தான். அப்போது காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அவனிடம் உடனே சரண் அடைந்து விடும்படி எச்சரித்தார்கள். எனினும் ரவுடி நீது தபோடியா தனது காரை காவல்துறையினர் வாகனத்தின் மீது மோதி தள்ளி விட்டு தப்பி செல்ல முயன்றான்.

அப்போது காவ்துறையினருக்கும் அந்த இரவுடிகளுக்கும் இடையே மோதல் வெடித்து துப்பாக்கிச் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் ரவுடி நீது தபோடியாவும் அவனது இரண்டு கூட்டாளிகளும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். காயமடைந்த ரவுடிகளை காவல்துறையினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 3 ரவுடிகளுக்கும் உயிர் பிரிந்துவிட்டதாக கூறினார்கள். இந்தச்சம்பவம் டெல்லியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

3 Rowdies killed in a police encounter at Delhi

Related posts