Today is International Day for the Eradication of Poverty
வேகமாக வளரும் வறட்சி, நிலையில்லாத அரசியல், உணவு பொருட்களுடைய விலை எற்றம், மற்றும் பொருளாதார மந்தம் ஆகியவற்றினால் பசி பட்டினியினால் வாடுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிகொண்டே போகிறது. உணவுப் பொருட்களுடைய விலை ஏற்றம் காரணமாக, உலக அளவிலும், பட்டினி கொடுமையால் அவதிபடுவோர்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டு 80 கோடி பேராக இருந்தது. இந்த எண்ணிக்கை 2005-ம் ஆண்டு 85 கோடியாக ஆனது. அது தற்சமயம் 100 கோடி எண்ணிக்கையாக ஆகியிருக்கிறது. பசி பட்டினியால் வாடுபவர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் 1,800 கலோரிகளை விட குறைவான உணவு உட்கொள்கிறார்கள் என்று பொருள்.
இந்த நிலையில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் வறுமையினால் ஒரு நபர் பாதிப்படைந்தால் அந்த நபரின் மனித உரிமை அங்கு மீறப்படுகின்றது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி கூறுகிறார். சிறு வயது முதல் இவர் வறுமைக்கு எதிராக போராடியவர். உலக வறுமை ஒழிப்பு தினம் இவருடைய முயற்சியால் தான் 1987 அக்டோபர் 17-ம் தேதி உருவாக்கம் அடைந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த தினம் அங்கிகாரம் பெற்றது.
வறுமையை ஒழிக்கவும் இவ்வுலகில் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் கிடைத்திடவும் அதனை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. முக்கியமாக அதிலும் இந்த ஆண்டு “பாகுபாடின்றி வறுமை ஒழிப்பு” என்பது தான் இந்த தினத்தின் மையக்கருத்தாகும்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 37% வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அதாவது, மொத்த மக்கள்தொகையில் சுமார் 41 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் வறுமையில் உள்ளார்.
மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் எந்த அளவிற்கு ஊட்டச்சத்து உள்ளது என்ற கணக்கீட்டின்படியே ஒருவர் வறுமையில் வாடுகிறாரா என்பது முடிவு செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே ஒரிசாவில்தான் அதிக மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். இந்த மாநிலத்தில் 100 பேருக்கு 46 பேர் போதிய வசதி இல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ளனர். அடுத்து பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த மாநிலங்களில் இது முறையே 7.07% மற்றும் 8.41% என்ற அளவில் உள்ளது.
கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 41.8% உணவு, உடை, எரிபொருள், மின்சாரம், காலணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்காக மாதம் ஒன்றிற்கு ரூ.450 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் அத்தியாவசிய உணவு பொருள்களுக்காக மாதம் சுமார் ரூ.580. செலவிடுபவர்கள் எண்ணிக்கை 25.7% ஆக உள்ளது.
வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் தினசரி வருவாய் சுமார் ரூ.60 கீழாக உள்ளது. மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால், அண்மை ஆண்டுகளில், குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவதால் குடும்பங்களின் வருமானம் ஓரளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாக திட்டக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. இதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே எதிர்காலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறையும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
உலகில் 70% உற்பத்திப் பொருட்களை 20% பேருக்கும் குறைவானவர்களே அதிக அளவில் அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினவராகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள்.
எனவே, விவசாயத்தை பெருக்கி உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கூடவே விலைவாசி குறையும். ஏழைகள் வயிற்றுக்கு சாப்பிட முடியும்.
Today is International Day for the Eradication of Poverty
The International Day for the Eradication of Poverty is celebrated every year on October 17 throughout the world. It was officially recognized by the United Nations, but the first commemoration of the event took place in Paris, France, in 1987 when 100,000 people gathered on the Human Rights and Liberties Plaza at the Trocadéro to honor victims of poverty, hunger, violence and fear. This call was made by Joseph Wresinski (1917–1988) founder of the International Movement ATD Fourth World.
The text engraved in the stone reads as follows: “Wherever men and women are condemned to live in extreme poverty, human rights are violated. To come together to ensure that these rights be respected is our solemn duty.” The theme for 2013 is “Working together towards a world without discrimination: Building on the experience and knowledge of people in extreme poverty.” This year’s official commemoration on 17 October at UN Headquarters will be an occasion to recognize people living in poverty as critical partners for fighting the development challenges we face. “If we are to realize the future we want for all, we must hear and heed the calls of the marginalized… Together, we can build a sustainable world of prosperity and peace, justice and equity – a life of dignity for all,” UN Secretary-General Ban Ki-moon said in his message for the International Day for the Eradication of Poverty.