New photos of Chennai bomb blasts victim Swathi show bullet wound on her chest. சென்னை குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதியின் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது போன்ற காயம் உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்ததில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி பலியானார், மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடம் மற்றும் பலியான ஸ்வாதியின் புகைப்படங்கள் அன்றே வெளியிடப்பட்டன. அதில் காயம் அடைந்த ஸ்வாதியின் முகம் மட்டும் தான் காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்வாதியின் புதிய படங்கள் மற்றும் சம்பவ இடத்தின் படங்கள் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய படங்களில் பலியான ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
இந்தியாவில் தயாரிக்கபட்ட அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி
First successful Astra test gives boost to air missile technology போர் விமானத்திலிருந்து ஆகாயத்திலுள்ள கண்ணுக்கு தெரியாத இலக்குகளை கூட தாக்கவல்ல அஸ்த்ரா ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பாலைவனத்தில், சுகோய்- 30 ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட அஸ்த்ரா ரக ஏவுகணை மிக துல்லியமாக இலக்கினை சென்று தாக்கியது. இதன் மூலம் இந்த ரக ஏவுகணைகளை வைத்திருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. தேஜாஸ், மிராஜ் 2000 , சுகோய் ரக போர் விமானங்களில் இருந்து இந்த ஏவுகணையை இலக்கினை நோக்கி ஏவ முடியும். அஸ்த்ரா ஏவுகணைகள் தரையில் இருந்து ஏவும் வகையிலும் வடிவைமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3.8 மீட்டர் நீளமுள்ள அஸ்த்ரா ஏவுகணை இருவகைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்…
Read Moreமகராஷ்டிராவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து 18 பேர் பலி, பலர் காயம்; மீட்பு பணி தீவிரம்
18 killed, over 145 injured as train derails in Maharashtra மகராஷ்டிராவில் திவா-சவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயில்தடம்புரண்டுவிபத்துக்குள்ளானதில் 18 பேர்பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் நிதி கிராமத்தில் திவா-சவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்ஜீன் மற்றும் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்தவர்களை கிராம மக்களின் உதவியோடு மீட்டனர். இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுமென தெரிவித்த ரயில்வே அமைச்சர் மலிகார்ஜுன் கார்கே விபத்தில் பலியானவர்களுக்கு ரூ. 2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ. 10,000 நிவாரண நிதி அளிக்கப்படுமென தெரிவித்துள்ளார். 18 killed, over…
Read Moreகின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் 116 வயது மூதாட்டி
116-year-old Peruvian stakes claim to title of world’s oldest woman உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழ்க் கிரீடம் விரைவில் வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், ஊடகங்களின் ஒளிமழை தன் மீது பாயப்போகும் அந்த பொன்னான நன்நாளுக்காக பெரு நாட்டை சேர்ந்த 116 வயதாகும் மூதாட்டியான ஃபிலோமெனா ட்டைபே மெண்டோசா ஆவலுடன் காத்திருக்கிறார். இந்த பட்டத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டிருக்கும் கின்னஸ் சாதனையாளரான ஜப்பான் நாட்டின் மிசாவொ வொக்காவா-வை விட வெறும் 3 மாதங்கள் மட்டுமே இளையவரான இவர், 20-12-1897 பிறந்துள்ளார். ’நான் போன நூற்றாண்டை சேர்ந்தவள் இல்லையப்பா… பேராண்டி, அதுக்கு முந்தைய நூற்றாண்டுக்காரி’ என்று பெருமிதம் பொங்க கூறும் இவர், தனது ஆரோக்கியத்தின் ரகசியமாக இயற்கை உணவுகளை குறிப்பிடுகிறார். உருளைக்கிழங்கு, ஆட்டுக்கறி, செம்மறியாட்டுப் பால் போன்றவை தனக்கு விருப்பமான…
Read Moreசிதம்பரத்தில் பெரும் பதற்றம் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் படுகாயம்
Crude bomb explodes in Chidambaram, 4 injured சிதம்பரத்தில் வீடு ஒன்றில் சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்ததில் திண்டுகல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி படுகாயமுற்றார். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன்பாக்ஸ் வெடிகுண்டு, துப்பாக்கி மற்றும் சீனா செல்போன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். வீட்டில் வெடித்த வெடிகுண்டு: சிதம்பரம் மாரியாப்பாநகரில் வீடு ஒன்றில் சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. சத்தத்தை கேட்டு அருகாமையில் குடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். வெடிகுண்டு வெடித்ததில் வீட்டிலிருந்து திண்டுக்கல்லை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி படுகாயமுற்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி படுகாயம்: சிதம்பரம் மாரியப்பாநகர்…
Read Moreஒரு வயது குழந்தைக்கு ஸ்டெம்செல் தானம் கொடுத்த பெங்களூரை சேர்ந்த பொறியாளர்
Bangalore stem cell donor saves thalassemic Delhi boy மருத்துவ உலகில் மனித உயிர் காக்கும் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளன. அவற்றுள் ஸ்டெம்செல் எனப்படும் குருத்தணு மாற்று சிகிச்சை முறையும் ஒன்றாகும். இந்த முறை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும் முன்பின் அறியாத ஒருவரைக் காப்பாற்ற முன்வரத் துணியும் மனிதர்கள் இன்னும் குறைவாகவே இருந்து வருகின்றனர். இந்த வகையான சிகிச்சைமுறையில் தலசீமியா என்ற மரபணு ஹீமோகுளோபின் நோய்க்குறைபாட்டால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த டெல்லியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பெங்களூரை சேர்ந்த கொடையாளி ஒருவரால் உயிர் பிழைத்துள்ளான். இந்த மருத்துவ முறையில் உறவினரல்லாத ஒருவரின் நன்கொடையால் இந்தியாவில் காப்பாற்றப்பட்ட முதல் நோயாளி என்ற தகவலைப் பதிவு செய்துள்ளது. சென்ற வருடம் டெல்லியைச் சேர்ந்த கர்விட் கோயல் என்ற ஒரு வயது சிறுவனுக்கு தலசீமியா நோய்த்தாக்கம் இருப்பது உறுதி செய்த…
Read Moreஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் பலி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியவில்லை
Afghanistan landslide buries village, 2,000 missing ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 350 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. 2 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து உருண்டது. இதில் மண், கல் என அருகில் இருந்த வீடுகளை மூடிக்கொண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 350 பேர் இறந்திருக்கலாம் என ஆப்கனில் முகாமிட்டுள்ள ஐ.நா., அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்ணில் புதைந்த நபர்கள் மற்றும் உயிருக்கு போராடி வருவோரை உள்ளூர் அலுவலர்கள் உதவியுடன் ஐ.நா.,…
Read Moreவயிற்றில் வளரும் சிசுவை காப்பாற்ற மாமியாரைக் கொன்ற இந்திய வம்சாவளிப் பெண்
Indian-American woman killed mother-in-law to save unborn daughter தன் கர்ப்பத்தில் இருந்த பெண் கருவை காப்பாற்ற மாமியாரைக் கொலை செய்ததாக கைது செய்யப் பட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணை விடுதலை செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண் பல்ஜிந்தர் கவுர்(39). ஏற்கனவே ஒரு பெண் குழந்தைக்கு தாயான பல்ஜிந்தர் இரண்டாவது முறையாக கருத்தரித்தார். அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பெண் தான் என்பதை அறிந்த அவரது 68 வயது மாமியார், அதை கலைத்து விடும் படி பல்ஜிந்தரை வற்புறுத்தியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பல்ஜிந்தர் அவரது மாமியாரைக் கொலை செய்து விட்டார். பல்ஜிந்தர் கடந்த 26-10-2012 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். அவரிடம்.போலீஸ் நடத்திய விசாரணையில், வயிற்றில் இருக்கும்…
Read Moreசென்னை குண்டுவெடிப்பின் எதிரொலி தமிழ்நாடு முழுதும் தீவிர பாதுகாப்பு
Tamil Nadu comes under security blanket சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தது. இதில் குண்டுவெடிப்பு நடந்த பெட்டியில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப் பட்டுள்ளது. சென்னைக் குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களைத் தொடர்ந்து பலதரப்பட்ட…
Read Moreஇங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களை விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை
Bang go the mangos as the EU bans 16million from India amid fears that they’re pest-ridden பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செயய் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கிட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இந்தி பூச்சிகளால் இங்கிலாந்து உருளைக் கிழங்கு மற்றும் வெள்ளரிச் செடிகளுக்கு ஆபத்து வரலாம் என்று ஐரோப்பிய யூனியன் சந்தேகிக்கிறதாம். இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 60 லட்சம் பவுண்டு வரையிலான மாம்பழங்களை இங்கிலாந்து இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை…
Read More