2002 குஜராத் கலவரம்: 10 பேருக்கு தூக்கு விதிக்க கோரும் மோடி அரசு..

அகமதாபாத், ஏப்ரல் 17-2013 – 2002ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பா.ஜ.க. முன்னாள் அமைச்சரும் மோடியின் ஆதரவாளருமான மாயா கோட்னானி உள்ளிட்ட 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய நரேந்திர மோடி அரசு திடீர் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட மறுநாள் 2002 ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதியன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி…

Read More

பெங்களூர் பா.ஜ. அலுவலகம் வெளியே குண்டு வெடிப்பு, 4 பேர் காயம்

பெங்களூர் புதன் 17 ஏப்ரல் 2013: பிஜேபி மல்லேஸ்வரம் அலுவலகம் அருகே நிறுத்திவைக்க பட்ட கார் திடீரென வெடித்தது. புகையுடன் கூடிய பயங்கர சத்தத்துடன் வெடித்தால் பொதுமக்கள் பீதி அடைத்தனர் பிஜேபி அலுவலகம் அருகே குண்டு வெடிப்புக்கு சரியான கரணம் என்ன என்று அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும் இது கார் காஸ் cylinder விபத்தாக இருக்ககூடும் எனவும் சில தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன… bangalore bomb blast bjp

Read More

வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம்

புதுதில்லி: 16 ஏப்ரல் 2013 இந்தியாவில் நிலநடுக்கம் – இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மாலை 4.18மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று இந்தியா நேரப்படி மாலை 4.18 மணி அளவில் இந்த லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜஸ்தான், தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லியைச் சுற்றிலுமுள்ள சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுமார் 20 விநாடிகள் நீடித்து என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்தது. இந்த நிலநடுக்கத்தின் இழப்புகள் மற்றும் பாதிப்புகள்  பற்றி உடனடித் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Read More

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டி

தில்லி: 16Apr2013: “தில்லி சட்டப்பேரவை தேர்தலில் “ஆம் ஆத்மி’ கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டி. அவர் தொகுதியில் போட்டியிடுவார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என்று அக்கட்சி அறிவித்துள்ளது. “கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் விருப்ப மனுக்களைஆம் ஆத்மி’ கட்சி அலுவலகத்தில் அளிக்கலாம்’ என்றும் அக்கட்சி கூறியுள்ளது.  

Read More

பிரதமர் வேட்பாளரை பாஜக ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆட்சி மன்றக்குழு முடிவு: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும். இது விஷயத்தில் முடிவெடுக்க அக்குழுவுக்குதான் முழு அதிகாரம் உள்ளது. அங்கு எடுக்கப்படும் முடிவு கூட்டணியில் பிரச்னை ஏற்படும் வகையில் இருக்காது. இதனை நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மோடி…

Read More

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) முதல்வர்கள் மாநாடு

உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறை சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மாநில முதல்வர்களின் மாநாடு தில்லியில் திங்கள்கிழமை (2013ஏப்ரல் 15) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதையடுத்து, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த ஆலோசனையை திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் சார்பில்… இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மாநில சட்ட அமைச்சர் கே.பி. முனுசாமி, உள்துறைச் செயலர் ஆர். ராஜகோபால்,…

Read More