தெலங்கானாவில் பேருந்து மீது ரயில் மோதி விபத்து 25 குழந்தைகள் பலி

25 students among 26 killed as train hits school bus in Telangana தெலுங்கானாவில் பள்ளி வாகனம் மீது நான்தத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 25 குழந்தைகள், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் உள்ள தூப்ரானில் உள்ளது ககடியா பள்ளி. அந்த பள்ளி வாகனம் ஒன்று இன்று காலை 40 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றது. செல்லும் வழியில் மசைபேட்டை கிராமத்தில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை பள்ளி வாகனம் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த நான்தத் பயணிகள் ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளில் 20 பேர் பலியாகினர், டிரைவரும் பலியானார். இந்த விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 குழந்தைகள் சிகிச்சை…

Read More தெலங்கானாவில் பேருந்து மீது ரயில் மோதி விபத்து 25 குழந்தைகள் பலி

உலக அளவில் அதிகமாக குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறவது இடம் ஐ.நா சுட்டிக் காட்டிவுள்ளது

India Home to One in Every Three Child Brides in World: United Nations உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்ற அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது ஐநா அமைப்பு. கிட்டதட்ட 42 சதவீத குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில்தான் நடைபெறுகின்றது என்று தெரிவித்துள்ளது ஐநா சபையின் ஆய்வறிக்கை. அதில் முக்கியமாக குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் “டாப் 10” நாடுகளில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான “யூனிசெப்” எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட “குழந்தை திருமணம் ஒழிப்பு” என்ற ஆய்வறிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளாவிய அளவில் வாழும் சுமார் 70 கோடி பெண்கள் தங்களது 18 ஆம் வயதை அடைவதற்கு…

Read More உலக அளவில் அதிகமாக குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறவது இடம் ஐ.நா சுட்டிக் காட்டிவுள்ளது

ஆந்திர மாநிலத்தில் பார்வையற்ற மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது

Visually challenged students thrashed by teacher in Kakinada ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில், 3 பார்வையற்ற மாணவர்களை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. இதனை பார்த்து ஆத்திரம் அடைந்தவர்கள், சம்பந்தப்பட்டவர்களை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. 3 நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், ஆசிரியர் 3 பார்வையற்ற மாணவர்களை கதறக் கதற பிரம்பால் அடித்து நொறுக்குகிறார். வலி பொறுக்க முடியாமல் மாணவர்கள் துடிதுடித்து அலறுகிறார்கள். அவர்களில் ஒருவரை பிடித்து ஆசிரியர் தரையில் தூக்கி வீசுகிறார். இவ்வாறாக அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோ 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டாலும், நேற்றுதான் வெளியானது. இதனை பார்த்தவர்களின் பலர் கடும் ஆத்திரம் அடைந்ததால், ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டது.இது குறித்து காக்கிநாடா போலீசார் கூறுகையில், பார்வையற்ற மாணவர்களை…

Read More ஆந்திர மாநிலத்தில் பார்வையற்ற மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது

இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் உள்ள மாநிலம் ; தமிழகம் முதலிடம்

7 people commit suicide every day due failure examination இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார். அதில், 2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 16,112 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 3-வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 14,957 கடந்த ஆண்டு…

Read More இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் உள்ள மாநிலம் ; தமிழகம் முதலிடம்

நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது

Case regarding legalization of Mercy Killing in Supreme Court நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது குணப்படுத்தவே முடியாத நோயால் துண்புருவோரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பதைக் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் கூறுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், “காமன் காஸ்” தொண்டு நிறுவனம் ஒன்று, மருந்துகளால் காப்பாற்ற முடியாது என்ற நிலையிலுள்ள நோயாளிகளை அவர்கள் விருப்பினால், கருணைக் கொலை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு கொடுத்துள்ளது. இந்த மனு, அரசியல் சாசன அமர்விலுள்ள ஆர்.எம்.லோதா, ஏ.கே.சிக்ரி, சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் முன்பு வந்தது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனுதாரர் சார்பில் ஆஜரானார். அவர், “உச்ச நீதிமன்றத்தில் முன்பே இந்த…

Read More நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது

கங்கை நதியை மாசு படுத்தும் 48 தொழிற்சாலைகளை மத்திய அரசு மூட உத்தரவு.

Central Government announced to close 48 factories for discharging pollutants to Ganges River கங்கை நதியை மாசு படுத்தும் 48 தொழிற்சாலைகளை  மத்திய அரசு மூட உத்தரவு. மத்திய அரசு 48 தொழிற்சாலைகள் கங்கை நதியை நாசமாக்குவதால்மூட உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் நேற்று அறிவித்திருக்கிறது. மத்திய நீர்வளமும் கங்கை தூய்மைபடுத்துதல் திட்டத்துக்கான இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் இதைப் பற்றி மாநிலங்களவையில் எழுந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளதாவது, கங்கைக்கும் மற்றும் அதன் துணை நதிகளுக்கும் அருகிலுள்ள 764 தொழிற்சாலைகளிலிருந்து தினமும் 501 மில்லியன் லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது. மேலும் இதை 1978ஆம் ஆண்டின் மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டம் மற்றும் 1986ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 48…

Read More கங்கை நதியை மாசு படுத்தும் 48 தொழிற்சாலைகளை மத்திய அரசு மூட உத்தரவு.

ஏர் இந்தியா விமான இன்ஜின் பகுதியில் தீ பிடித்ததால் பரபரப்பு நியூஜெர்சி விமான நிலையத்தில் தரையிறக்கம்

Air India Flight returns to Newark Liberty’s Airport after engine catches fire நியூஜெர்சியிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் என்ஜினில் தீ பிடித்தால் உடனடியாக மீண்டும் நியுஜெர்சி விமான நிலையத்திற்கு திரும்பியது. இது குறித்து நியூஜெர்சி விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் எரிக்கா டுமாஸ் கூறியதாவது: 313 பயணிகளுடன் அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தில் இருந்து போயிங் 777 வகையை சேர்ந்த ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் அதன் விமானத்தில் இடது பக்கத்தில் தீ பிழம்புகள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் மீண்டும் நியூஜெர்சி விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கியது. விமானம் இறங்கும் இடத்திற்கு ஆம்புலண்ஸ் வருமாறு விமானி வேண்டுகோள் விடுத்தார். எனினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளை இந்தியா…

Read More ஏர் இந்தியா விமான இன்ஜின் பகுதியில் தீ பிடித்ததால் பரபரப்பு நியூஜெர்சி விமான நிலையத்தில் தரையிறக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் இறந்துபோன சாமியாரின் உடலை 6 மாதமாக அவர் உறங்குகிறார் என்று கூறி வைத்திருக்கும் சீடர்கள்

Millionaire guru’s body kept in freezer as followers argue over whether he’s dead or asleep இறந்த சாமியாரின் உடலை, தூங்குவதாகக் கூறி கடந்த 6 மாதமாக ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாக்கின்றனர் அவரது சீடர்கள். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் திவ்ய ஜோதி ஜக்ரதி சான்ஸ்தன் என்ற அமைப்பின் மூலம் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் 70 வயதுடைய ஸ்ரீ அஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள். இவருக்கு கோடிக்கணக்கான சொத்து உள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சீடர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். பரிசோதனையில் ஸ்ரீஅஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது சீடர்கள் அவர் இறக்கவில்லை அவர் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார் என கூறி, அவரது உடலை கடந்த 6…

Read More பஞ்சாப் மாநிலத்தில் இறந்துபோன சாமியாரின் உடலை 6 மாதமாக அவர் உறங்குகிறார் என்று கூறி வைத்திருக்கும் சீடர்கள்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்ட யானை விடுவிப்பு

Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India ஐம்பது ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்ட யானை பாகனிடமிருந்து விலங்குகள் அறக்கட்டளை ஊழியர்களால் மீட்கப்பட்டது. இதை தனது அறிவால் உணர்ந்த அந்த யானை கண்ணீர் வடித்து தனது நன்றியை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச தெருக்களில் பணம் வசூலிக்க பயன்படுத்தப்பட்ட யானைகள் பலவும் பழக்கப்படுத்தப்படுகின்றன. அதுபோன்ற ஒரு ஆண் யானைதான் 50 வயதான ராஜு. வெயில், மழை என்று பார்க்காமல் அந்த யானை யாசகம் கேட்க பயன்படுத்தப்பட்டது. அதன் கால்களில் இரும்பு சங்கிலி பிணைக்கப்பட்டிருந்தது, இதுகுறித்து அறிந்த லண்டனை தலைமையிடமாக கொண்ட பால்மர் கிரீன் என்ற விலங்குகள் அறக்கட்டளை அமைப்பினர் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த யானையை மீட்க கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ராஜுவை மீட்க விலங்கு…

Read More உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்ட யானை விடுவிப்பு

சென்னையில் இடிந்து விழுந்த11 மாடிகட்டிட உரிமையாளர் மனோகரன்அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயம்

Documents related to Manoharan, owner of collapsed 11 storey building in Moulivakkam was disappeared. சென்னையில் இடிந்து விழுந்த, ‘பிரைம் சிருஷ்டி’ நிறுவனத்தின்11 மாடி கட்டிட உரிமையாளர் மனோகரன் அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் தேடுகின்றானர். இரு நபர் குழு: 11 மாடி கட்டிடம் கடந்த மாதம், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், 61 பேர் பலியாயினர். இது தொடர்பாக, கட்டிட உரிமையாளர் மனோகரன் மற்றும்அவர் மகன் முத்து ஆகியோரை கைது செய்துள்ளனர். மனோகரன் மதுரையைச் சேர்ந்தவர் மற்றும் அவரது நிறுவனம் துவங்கியதும் மதுரையென்பதால், அவரின் விவரங்களை சேகரிக்கும் பணி மதுரை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் தலைமையில், இருவர்குழு நியமிக்கப்பட்டு, பிரைம் சிருஷ்டி நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை, ஆய்வு செய்தனர். அங்கு வீடு வாங்கியவர்கள்…

Read More சென்னையில் இடிந்து விழுந்த11 மாடிகட்டிட உரிமையாளர் மனோகரன்அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயம்