சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று…
Read More நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கைCategory: இந்தியா – சிறகுகள்
கோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்
புதுச்சேரி: செப்டம்பர் 22, 2018 புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32), இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு கோயிலுக்கு செல்வதாக வெளியே சென்ற கிருஷ்ணவேணி, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள காளிகோயிலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியது என்னவென்றால்: பெண்ணின் கணவர் அசோக்ராஜூம், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கோவிந்தராஜூம் நண்பர்கள். சாமியார் அவ்வப்போது அசோக்ராஜூவின் வீட்டுக்கு சென்றுள்ளார் நண்பர் என்ற முறையில் . அப்போது சீக்கிரமே கோடீஸ்வரராக விரும்புவதாக சாமியாரிடம் அசோக்ராஜூ தனது ஆசையை தெரிவித்துள்ளார். உடனே சாமியார்…
Read More கோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்உ.பி.,யில் வேகமாக பரவி வருகிறது மர்ம காய்ச்சல்
லக்னோ : செப்டம்பர் 21, 2018 உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் வேகமாக பரவி வருகின்ற மர்ம காய்ச்சலுக்கு கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 79 பேர் பலியாகி உள்ளனர் . இதனால் மருத்துவக்குழு மிக கவனமான நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் . வீண் வதந்திகள் பரவுவதையும் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளனர் . இதுவரை அதிகபட்சமாக பெரிலியில் மட்டும் 24 பேர் பலியாகி உள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வேகமாக பரவி வருகின்ற இந்த மர்ம காய்ச்சல் பற்றி கண்டறிவதற்காக மூன்று டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Read More உ.பி.,யில் வேகமாக பரவி வருகிறது மர்ம காய்ச்சல்கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த சச்சின் டெண்டுல்கர்
கோல்கட்டா : செப்டம்பர் 21, 2018 மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட இருந்த கவுரவ டாக்டர் பட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்க மறுத்துவிட்டார். மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக 63ம் ஆண்டு பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியில் நடக்கவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது . இதை பற்றி சச்சினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க சச்சின் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது . சச்சின் டெண்டுல்கர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது தார்மீக ரீதியில் தனக்கு சரியாக படவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனக்கு…
Read More கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த சச்சின் டெண்டுல்கர்சீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்கு அடிமையாகி வார்டனை கொன்ற சிறுவர்கள்
பாட்னா: செப்டம்பர் 20, 2018 பீகாரின் புர்னியே பகுதியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்காக தொடர்ந்து இருமல் மருந்துகளை சாப்பிட்டு வந்த ஐந்து சிறுவர்களையும் விடுதி வார்டன் கண்டித்துள்ளார் . அதுமட்டுமில்லாமல் அவர்களை வேறு காப்பகத்திற்கு மாற்ற வார்டன் பிஜேந்திர குமார் முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த சிறுவர்களில் ஒருவன் வார்டனை கதவை திறக்கச் சொல்லி மிரட்டி உள்ளான்.கதவை திறக்க வார்டன் மறுத்ததால் அவரை சுட்டுவிட்டு நான்கு சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். ஒரு சிறுவனை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர், மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.சிறுவர்களுக்கு துப்பாக்கி மற்றும் இருமல் மருந்து எங்கிருந்து கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.தப்பிச் சென்ற சிறுவர்களில் ஒருவன் மீது 12 க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன என்றும் ,மற்றொரு சிறுவன் உள்ளூர் ஐக்கிய ஜனதா…
Read More சீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்கு அடிமையாகி வார்டனை கொன்ற சிறுவர்கள்கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்
குருகிராம்:செப்டம்பர் 14, 2018 அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் 19 வயது மாணவி . நல்லா படிக்கக்கூடிய அந்த பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர். அந்த பெண் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் காரில் இருந்த 3 நபர்கள் கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இவர்களுடன் சிலரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது .பிறகு பெண் சுயநினைவை இழக்க அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர்.பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பல போலீஸ் நிலையங்களுக்குச் சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க மறுத்த பிறகு காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாக கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது.
Read More கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது – மறுக்கும் ஆணையம்
ஆதாரை ஹேக்கிங் செய்ய பயன்படும் சாஃப்ட்வேர் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சாஃப்ட்வேர் ஆய்வு செய்து ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் திருடலாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்க செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்களும், ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்கு தனி நபர் அடையாள ஆணையம்(UIDAI) தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில், ஆதார் என்ரோல்மெண்ட்டை ஹேக் செய்ததாக கூறப்படும் செய்திகள்…
Read More ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது – மறுக்கும் ஆணையம்தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார் போலி டாக்டர்!
கர்நாடக மாநிலம், பாகல்கோடு மாவட்டம், முத்ஹோல் என்ற பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடாக் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார். விகாஸ், பி.எஸ்சி., நர்சிங் படித்தவர். ஆனால், டாக்டர் விகாஸ் பாட்டீல் என்பவரின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி, தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் தான் அவரை பற்றிய உண்மை தெரிய வந்தது. மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார், விகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விகாஸ் கூறுகையில்,’ என்னால் மற்ற டாக்டர்களை போல மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நான் பி.எஸ்சி., நர்சிங் படித்து இருந்ததால் தாழ்வு மனப்பான்மை தோன்றியது. எனவே தான்…
Read More தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார் போலி டாக்டர்!கேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !
கேரளாவில் ஏ.டி.ஜி.பி யாக பணிபுரியும் சுதேஷ் குமாரின் மகள் அவரது இல்லத்தில் ஆர்டலியாக பணிபுரியும் கவாஸ்கரைத் தாக்கியதைத் தொடர்ந்து போலீஸ் பட்டாலிய பொறுப்பிலிருந்து ஏ.டி.ஜி.பி விடுவிக்கப்பட்டார்.
Read More கேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 6ஆம் தேதி வரை சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தன் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். ஓயாமல் சோதனைகள் நடத்தி கண்ணியத்தைக் கெடுப்பதாக கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரமும் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு வழக்கு விசாரணை பற்றி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விபரம் : 2007-08ஆம் ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு…
Read More ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்