ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு பஸ் நிலையத்தில் இரண்டு நாள் முன்பு குண்டு வீசியதில் இரண்டு பேர் பலியானார்கள் மற்றும் 32 பேர் காயம் அடைந்தனர். இது சம்மந்தமாக ஒருவனை போலீசார் கைது செய்தனர் .அவனை விசாரித்தபோது அவன் கூறியது “நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இந்த வெடிகுண்டை ஜம்மு பஸ் நிலையத்தில் வீசினால் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதால் நான் வீசினேன்”என்று கூறினான். இந்த சிறுவனிடம் வெடிகுண்டை வழங்கியது ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி முசாமில் என்பது தெரிந்தவுடன் அவனையும் போலீசார் கைது செய்தனர் . அவனை விசாரித்தபோது இவன் கூறுகையில் “குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பயாஸ் என்னிடம் வெடிகுண்டை கொடுத்து மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் எறியும்படி கூறினான். ஆனால் எனக்கு…
Read More ஜம்மு பஸ் நிலையத்தில் குண்டு வீசிய சிறுவன் கைதுCategory: இந்தியா – சிறகுகள்
கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் – மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி:ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆர்.சி. புத்தகத்தை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த கார்டுகளை பி.வி.சி. அல்லது பாலி கார்பனைட்டால் மாநில அரசுகள் தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்த கார்டுகளை தரமாக தயாரித்து கொள்ளும்படி மாநில அரசுக்கு கூறியுள்ளது.
Read More கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் – மத்திய அரசு அறிவிப்புதோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது
டெல்லி:டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என விசாரித்தனர் . எதையும் அளிக்காததால் அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.டெல்லி விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மொத்தம் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்றார். பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர் ஆவார் . அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்த்தவர். இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பையில் 10 தோட்டாக்கள் இருப்பதை விமான நிலைய சோதனையில் கண்டு பிடித்தனர் . அந்த தோட்டாக்கள் அனைத்தும் 3.15 போர் ரகம் என்று தெரியவந்தது . இதனால் அவர் விமானத்தில் பயணிப்பதை அதிகாரிகள் தடுத்தனர் . தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி ஆவணங்கள் இருக்கிறதா…
Read More தோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைதுகாஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம்…
Read More காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் 350 கிலோ வெடி மருந்து காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்து மீது மோதினான். இதில் ரிசர்வ் போலீஸ் படையினர் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது . ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர் .…
Read More காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலிஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி
லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரச்சாரம் செய்ய கொண்டு வந்துள்ளது பாஜக தலைமை. சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இடையே மோதலால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார். இருமுறை யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால் அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் இறங்கி அங்கேயிருந்து கார் மூலமாக புருலியா சென்று கூட்டத்தில் கலந்து…
Read More உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜிதிருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த உடன் தம்பதிக்குள் பிரச்சினை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர். திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே திருவிழாவாக காட்சி அளித்தது.காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், புகைப்படம் எடுப்பதில் தம்பதினர் ஓய்வில்லாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர். அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் அது அதிகமாக முற்றியது. இரு வீட்டாரும் சமாதானம் செய்யவில்லை .அவர்களும் உணவுக் கூடத்தில் சண்டையிட்டனர்.பிறகு காவல்துறையினர் வந்தும் பயனில்லை .பின்னர் புதுமணத் தம்பதினர் தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். பிறகு…
Read More திருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!குடி போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்..
ஜெய்ப்பூர்: ஆண் நர்ஸ் குடி போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை கொடூரமாக இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த திலோக்பதி , அவரின் மனைவி தீக்ஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை சேர்த்தார்.ஆனால் பணியில் டாக்டர் மற்றும பெண் நர்சுகளும் அங்கு இல்லாததால் கவலை அடைந்தார் . குடி போதையில் ஆண் நர்ஸ் அமிர்த்லால் மற்றும் உதவியாளரும் அங்கு இருந்தார். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இந்த பிரசவத்தில் தலைக்கு பதிலாக இந்த குழந்தையின் கால் முதலில் வந்தது .பிரசவத்தின் போது குழந்தையின் உடல் மட்டும் வந்துவிட்டது , ஆனால் தலை கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது. பிறகு மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின்…
Read More குடி போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்..உ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதி
டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் போது பாஜக ,காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணிக்கு முடிவு செய்துள்ளார்கள் . இருவரும் தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்த லோக்சபா தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளை பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது . சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை இந்த கூட்டணி நிறுத்த போவதில்லை என தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர்…
Read More உ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதிநடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..
பெங்களூர்:அக்டோபர் 27, 2018 ‘விஸ்மயா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் ‘மீடு’ ட்விட்டர் மூலமாக தெரிவித்தார். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை . பிறகு ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன். அதனால் ஸ்ருதி ஹரிஹரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு பதிவு…
Read More நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..