தங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சி!

gold price dips in tamilnadu வியாழக்கிழமை, 27 ஜூன் 2013: இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய…

Read More தங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சி!

தங்கம் வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்காதீர்கள் : வங்கிகளுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

banks to advise their customers not to buy gold but to invest in financial assets : PC Chidambaram 07 ஜூன் 013: மும்பை: வாடிக்கையாளர்களை தங்கம் வாங்க, ஊக்கபடுத்த வேண்டாம் என வங்கிகளுக்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு நேற்று முன்தினம் இரவு அதன் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக திடீரென்று உயர்த்தியது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்குடன், இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அன்னிய நாணய மதிப்புக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அன்னிய நாணய மதிப்புக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகும். இதனிடையே, தங்கம் மீதான சுங்க வரி உயர்வால் எந்த பயனும் இருக்காது, அதன் விலை உயர்வுக்கு தான் வழி வகுக்கும் என்றும், உலக தங்க கவுன்சில் (இந்தியா)…

Read More தங்கம் வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்காதீர்கள் : வங்கிகளுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

ரியல் எஸ்டேட் மசோதா. பில்டர் தவறு செய்தால் 3 ஆண்டு சிறை!!

Real estate Regulations in India நாடு முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்து பல ஆயிரம் கோடிரூபாய் புழங்கும் ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை படுத்த மசோதா ஒன்றை மக்களவையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முக்கியமாக பொதுமக்களை மோசடிகளில் இருந்து காப்பற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். இதில் அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களது கட்டுமான திட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே வீட்டு மனையோ, வீடுகளோ விற்கப்பட முடியும். ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் வீட்டை கட்டி தரவில்லை என்றால், அதன் மீது ஆணையம் அபராதம் விதிக்க முடியும். முக்கிய அம்சங்கள் வருமாறு: * ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பில்டர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். *  ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு…

Read More ரியல் எஸ்டேட் மசோதா. பில்டர் தவறு செய்தால் 3 ஆண்டு சிறை!!

சீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை

Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh. புதுடில்லி 19 மே 2013 : சீனப்பிரதமர், லீ கேக்கியங்,  மூன்று நாள் சுற்று பயணமாக, இன்று, இந்தியா வந்தடைந்தார். இருநாட்டு  நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், பதவி எற்ற பின் இது தான் அவரது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம். மதியம், டில்லி வந்த அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த முக்கிய சந்திப்பில்,  தண்ணீர் பிரச்னை, எல்லை விவகாரம்,உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார். அதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh. இதையும் படியுங்கள் ஹாரி பாட்டர் புத்தகம் 1…

Read More சீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை

தமிழ்நாட்டில் குட்கா-பான் மசாலாவிற்கு மீண்டும் தடை

Pan Masala and Gutka banned again in Tamilnadu சென்னை: 08 மே 2013: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் பான் மசாலா-குட்கா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் மீண்டும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முந்தைய 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த தடை கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசினுடைய உணவுப் பாதுகாப்பு &  தர நிர்ணயம் விதிகளின் படி பான் மசாலா மற்றும் குட்காவுக்கு மீண்டும் தடை விதிப்பதாக  முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். புகையிலையினால் உண்டாகும் பல்வேறு நோய்களை குறிப்பாக புற்று நோய்களைத் தடுக்கும் பொருட்டு குட்கா, பான் மசாலா போன்ற உட்கொள்ளும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து விநியோகிக்கவும், விற்கவும்  தடை விதிக்க பட்டுள்ளது. Pan Masala and Gutka banned again in Tamilnadu Property sale in Chennai  Pan Masala and Gutka banned இதையும்…

Read More தமிழ்நாட்டில் குட்கா-பான் மசாலாவிற்கு மீண்டும் தடை

தென் தமிழ்நாட்டில் ஒன்பது புதிய தொழில் பூங்காக்கள் : முதல்வர் அறிவிப்பு

New Industrial parks planned in southern districts of Tamil nadu: SIPCOT complex சென்னை 8 மே 2013: தென் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில்  ஒன்பது தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும், இது சுமார் 18,650 ஏக்கரில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று, சட்டசபையில் ‌‌110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பில் : சிவகங்கை – மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் கூடுதலாக  2,000 ஏக்கர் நிலப்பரப்பில், கிராபைட் மற்றும் பிற தொழிற்சாலைகள் அமைக்க வசதியாக புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும். ராமநாதபுரம்: ரசாயனம், பெட்ரோலிய சுத்திகரிப்பு, உரம் போன்ற உற்பத்தி  தொழிற்சாலைகளுக்காக சுமார் 2,000 ஏக்கர் பரப்பில்  தொழில் பூங்கா அமைக்கப்படும். புதுக்கோட்டை: உலோகத் தொழிற்சாலைகள், பொறியியல்,  மற்றும் உலர் தோல் போன்ற தொழில்களுக்கு தொழில் பூங்கா 2,000 ஏக்கரில் உருவாக்கப்படும். திண்டுக்கல்: பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில் பூங்கா,…

Read More தென் தமிழ்நாட்டில் ஒன்பது புதிய தொழில் பூங்காக்கள் : முதல்வர் அறிவிப்பு

இந்தியாவில் தங்கம் விலை இன்று மேலும் குறையும்?

சென்னை 16Apr2013:  தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை திங்கள்கிழமை சந்தை நேரம் முடிவடைந்த பிறகு பவுனுக்கு தங்கம் மேலும் ரூ.1,000 குறைந்தது. இந்த சரிவு செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) சந்தையில்  பதிப்பை உண்டாக்கும்.   இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தை தொடங்கியவுடன் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.1,000 குறைந்து பவுன் ரூ.19 ஆயிரத்து 72-ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்கள் Coming Soon – Under construction அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : பாஸ்டனில் 3 பேர் பலி : 141 காயம் தில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டி

Read More இந்தியாவில் தங்கம் விலை இன்று மேலும் குறையும்?