Onion price go high in India இந்தியாவில் வரலாறு காணாத வகையில் வெங்காயத்தின் விலை உயர்ந்ததையடுத்து ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத அளவில் கிலோ ஒன்றுக்கு ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.56 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.60 ஆகவும், சென்னையில் ரூ.75ஆகவும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அடுத்த 15 நாட்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், நுகர்பொருள் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து கே.வி.தாமஸ் கூறுகையில், வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் டன்னுக்கு 650 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சமாளித்து வெங்காய வரத்து அதிகரிக்க செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தனியார்…
Read More நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை!!!Category: வர்த்தக சிறகுகள்
பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும்: பிரதமர் மன்மோகன் சிங்
Prime Minister Manmohan Singh has said that globalization is not going to abandon the policy. டில்லியில் ரிசர்வ் வங்கி தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் , இந்திய பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் கொள்கை திரும்ப பெறப்பட மாட்டாது என்று கூறினர் . 1991-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி யாக இருப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் அந்நிய செலவாணி விகிதம் ஒரே நிலையாக இருந்தது, தற்போது இது சந்தைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுவதால் அந்த சூழல் எழாது. ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்திவிட்டாலே இது சரியாகிவிடும் என்று பிரதமர் தெரிவித்தார் . 1991ல் ஏற்பட்ட நெருக்கடியின்போது நம்மிடம் 15 நாட்களுக்கு மட்டுமே அன்னியச் செலாவணி கையிருப்பு இருந்ததாகக் கூறிய பிரதமர்,…
Read More பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும்: பிரதமர் மன்மோகன் சிங்இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
rupee all time low of 61.80 against USD பெட்ரோல், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி அதிகரிப்பாலும் இறக்குமதியாளர்களின் டாலர் தேவையாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்று வர்த்தக முடிவில் டாலர் ஒன்றிற்கு ரூபாய் 60.88 ஆக இருந்தது. இன்று துவங்கியவுடன் 61.05 ஆக அதிகரித்தது. பின்னர் 61.51 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஜூலை 8ஆம் தேதி 61.21 ஆக இருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி தகுந்த நடவடிக்கை எடுத்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலே தவிர இறக்குமதிகளை குறைக்க வழியில்லை என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். English Summary: rupee all time low of 61.80 against USD After plunging to a record intra-day low of 61.80, the rupee rebounded sharply to…
Read More இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சிபணப்புழக்கத்தை இறுக்கியது ஆர்பிஐ!:வட்டி விகிதம் அதிகரிக்கும்?.
The Reserve Bank of India (RBI) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பை நிலைக்குக் கொண்டு வர மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய சில நடவடிக்கைகளை அறிவித்திருப்பதன் மூலம் லிக்விடிட்டியை மீண்டும் இறுக்கமாக்கியுள்ளது. ஆர்பிஐ, லிக்விடிட்டி அட்ஜஸ்ட்மெண்ட் வசதியின் (LAF) கீழ் வங்கிகளுக்கு வழங்கி வந்த பணத்தை, வங்கியில் இருக்கக்கூடிய டெபாசிட்களில் சுமார் 0.5 சதவீதம் என்ற விகிதத்தில் குறைத்துள்ளது. இது ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்குமான சுமார் 1% அல்லது 75,000 கோடிகளோடு ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “LAF உபயோகத்துக்கான ஒட்டுமொத்த வரையறை ஒவ்வொரு வங்கிக்கும், இரண்டாவதாக வரக்கூடிய இருவார காலக்கெடுவின் கடைசி வெள்ளிக்கிழமையில் இருக்கக்கூடிய அதன் சொந்த என்டிடிஎல் (NDTL) அவுட்ஸ்டாண்டிங்கில் சுமார் 0.5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 24, 2013 -இலிருந்து அமலாக்கம்…
Read More பணப்புழக்கத்தை இறுக்கியது ஆர்பிஐ!:வட்டி விகிதம் அதிகரிக்கும்?.சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம்
பொருளாதார ரீதியாக சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளருவது இந்தியப் பொருளாதாரம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மிளகனூரில் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக் கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. வங்கித் தலைவர் எஸ்.எல். பன்சால் தலைமை வகித்தார். மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வங்கிக் கிளை, ஏ.டி.எம். மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். தனது சொந்த தொகுதியான சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசியதாவது: அனைத்து நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை உள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சி என்பது சர்வதேச அளவில் மந்த நிலையில் உள்ளது. இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியாது. அதே…
Read More சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம்கடலூரில் விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாடு துவக்கம்..
கடலூர்: அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33வது அகில இந்திய மாநாடு, கடலூரில் நேற்று துவங்கியது. சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், மாநாட்டுக் கொடியை சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா ஏற்றி, பேசினார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகள் சுடரை விழாக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். 33வது மாநாட்டை குறிக்கும் வகையில் மண்டப வளாகத்தில் 33 மரக்கன்றுகள் நடப்பட்டன. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின், மாநாடு துவங்கியது. அகில இந்திய இணைச் செயலர் சுக்லா, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை தலைமை உரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலர் அதுல்குமார் அஞ்சான் வாழ்த்திப் பேசினார். துவக்க விழாவில் வரவேற்புக் குழு கவுரவத் தலைவர்…
Read More கடலூரில் விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாடு துவக்கம்..வால்மார்ட் போனால், மற்றோரு மார்ட் வரும்: காங்கிரஸ்
Walmart can’t meet norms, Congress says other ‘marts’ will come அமெரிக்கா விலும் ஐரோப்பாவிலும் சில்லரை வணிகம் பல்தேசிய வியாபார நிறுவவங்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகக் கொண்டுவரப்பட்ட காலம் 1970 களின் ஆரம்பகாலம். இதன் பின்னர் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நிறுவனங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டிலிருந்து மீள முடியாத நெருக்கடிக்குள் ஐரோப்பிய அமெரிக்கா நாடுகள் அமிழ்ந்துள்ளன. மக்கள் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளைப் போலன்றி வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை அழித்து மக்களை மேலும் வறுமைக்கு உட்படுத்தும் நோக்கில் வால்மார்ட் போன்ற அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனங்களை கையைப் பிடித்து அழைத்து வந்துள்ளன. சில்லரை வணிகத்தில் இலாபமடையும் அன்னிய நிறுவனங்களின் உள்ளூர்த் தரகர்களின் நலன்களுக்காகச் செயற்படும் இந்திய அரசு மக்களை மந்தைகளாகவே கருதுகின்றது, தொலைத்தொடர்பு, காப்பீடு, பாதுகாப்பு துறைகளில் அன்னிய…
Read More வால்மார்ட் போனால், மற்றோரு மார்ட் வரும்: காங்கிரஸ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி: பிரதமர் நடவடிக்கை?
Manmohan Singh assures industry of economic recovery புதுடில்லி:”நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலையை, சரி செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, தேவையான உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும்,” என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். சீர்திருத்த நடவடிக்கை:டில்லியில்,”அசோசெம்’ அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:நாட்டில் பொருளாதார மந்த நிலை, அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, திருப்திகரமாக இல்லை. இது கவலையளிக்கிறது. ஆனாலும், இதை சரி செய்தே தீருவது என்ற உறுதியுடன்,மத்திய அரசு செயலாற்றிக் கொண்டு வருகிறது. யாரும் பீதியடையத் தேவையில்லை என்ற வகையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில், அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நாள், வெகுதூரத்தில்…
Read More நாட்டின் பொருளாதார வளர்ச்சி: பிரதமர் நடவடிக்கை?அமெரிக்காவுடன் இணைந்து தொழில்வாய்ப்பு – ப.சிதம்பரம்
India US to work together : Chidambaram வாஷிங்டன்: அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தின் 38-வது தலைமை உச்சி மாநாடு வாஷிங்டனில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய போது, இந்தியா பொருளாதார சீர்திருத்ததை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து புதிய தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் ஏற்படுத்துவது பெரும் வாய்ப்பாக கருதுகிறேன். இதனால் பல இந்திய நிறுவனங்களின் அந்தஸ்து உயர்வதோடு அமெரிக்க இந்திய நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவும். அது பொருளாதார மேம்பாட்டிற்கான அடித்தளமாகவும் அமையும், என்று கூறினார். English Summary: India US to work together : Chidambaram Washington: Making a passionate plea to the US and Indian businesses to work together for a prosperous society, Finance Minister…
Read More அமெரிக்காவுடன் இணைந்து தொழில்வாய்ப்பு – ப.சிதம்பரம்தொழில் துவங்க முன் வருவோர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம்
புதுக்கோட்டை: “”புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் வரை மானியமும், வங்கிகள் மூலம் கடனுதவியும் பெற்றுத்தரப்படும்,” என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. புதுக்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் மனோகரன் பேசியதாவது:படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் கடந்த ஆண்டு(2012-13) முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிப்பதோடு, தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கான திட்ட மதிப்பீடு, அரசு மானியம் மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுக்கொடுக்கப்படும்.குறைந்தபட்சம் 5…
Read More தொழில் துவங்க முன் வருவோர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம்