Sachin Tendulkar in Parliament புது தில்லி: ஆகஸ்ட் 06 2013: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு எம்.பி சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவையில் நேற்று கலந்து கொண்டார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா, தொழிலதிபர் அனு அகா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதால், அதில் சச்சின் டெண்டுல்கர் நேற்று கலந்து கொண்டார். அவை கூடுவதற்கு முன்பாகவே வந்த சச்சின், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் இணைந்து அவைக்குள் நுழைந்தார். தனது இருக்கையில் அமருவதற்கு முன் சில எம்.பி.க்களுடன் கை குலுக்கினார். இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பாராட்டு தெரிவித்தபோது, டெண்டுல்கர் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். அமளி காரணமாக அவை 10 நிமிடங்கள்…
Read More மாநிலங்களவையில் சச்சின் டெண்டுல்கர்!Category: செய்தி சிறகுகள்
தொகுப்பாளர், இசையமைப்பாளாரான ஜேம்ஸ் வசந்தன் கைது
music director james vasanthan arrested நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். திரைப்பட இசையமைப்பாளாரான இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் உள்ள ராதா வேணுபிரசாத் (65) என்ற பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை தன்னை ஜேம்ஸ் வசந்தன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி ராதா வேணுபிரசாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஜேம்ஸ் வசந்தனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த போது அங்கு நீதிபதி இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர். இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் ஊடகத்தினரிடம் கூறுகையில், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது…
Read More தொகுப்பாளர், இசையமைப்பாளாரான ஜேம்ஸ் வசந்தன் கைதுஅமெரிக்க ராணுவ செக்ஸ் புகார்: 60 பயிற்சியாளார்கள் நீக்கம்
வாஷிங்டன், ஆக. 5 – அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர். சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் செக்ஸ் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண் வீரர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கப்படுவதாக பெண்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணயில் 60 பயிற்சியாளர்கள் செக்ஸ் குற்றதில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ அமைச்சர் ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார். அதன்படி, ராணுவப் பயிற்சியாளர்கள் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர்கள் ஐவரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருவதால் பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கூடலாம் என தெரிகிறது. இதையும் படியுங்கள் தொகுப்பாளர், இசையமைப்பாளாரான ஜேம்ஸ் வசந்தன்…
Read More அமெரிக்க ராணுவ செக்ஸ் புகார்: 60 பயிற்சியாளார்கள் நீக்கம்தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
modification in right to information act புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு: மந்தமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய, தொலை தொடர்புத் துறையில், 74 சதவீத அளவுக்கு உள்ள, அன்னிய நேரடி முதலீட்டை, 100 சதவீதமாக அதிகரிப்பது உட்பட, 12க்கும் மேற்பட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்க, ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. “தகவல் பெறும் உரிமைச் சட்டம், காங்கிரஸ் உட்பட, சில அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும். அதனால், பொதுமக்கள் கேட்கும் தகவல்களை, அந்தக் கட்சிகள் தர வேண்டும்’ என, சமீபத்தில், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இது, அரசியல் கட்சிகளுக்கு…
Read More தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்அசாமில் 8 ஆண்டுகளில் 59 பலாத்கார கொலை,12,000 கற்பழிப்பு
Nearly 12000 women raped in Assam in 8 years கவுகாத்தி : அசாமில், கடந்த எட்டு ஆண்டுகளில், 12,000க்கும், மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 59 பேர் பலாத்கார கொலை : நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், பெண்கள், அதிக அளவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 2005 முதல் 2013 மே வரையிலான, எட்டு ஆண்டுகளில், 12 ஆயிரத்து 857 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், 59 பேர் பலாத்காரத்திற்கு பின், கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், மாநில உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: பாலியல் பலாத்காரம் தொடர்பாக, 8,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 ஆயிரத்து 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பசி, படிப்பின்மை போன்ற காரணங்களாலும், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க,…
Read More அசாமில் 8 ஆண்டுகளில் 59 பலாத்கார கொலை,12,000 கற்பழிப்புபிரதமர் மன்மோகன்சிங் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்
Prime minster Manmohan singh arrived Trichy புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டியில் 57 ஏக்கரில் ரூ.600 கோடியில் பெல் பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங், இந்தியன் ஏர்போர்ஸ் ஒன் தனி விமானம் மூலம் காலை 11.05 மணிக்கு திருச்சி வந்தார். வரவேற்பு முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டரில் 11.10 மணிக்கு திருமயம் புறப்பட்டுச் சென்றார். Prime minster Manmohan singh arrived Trichy இதையும் படியுங்கள் அசாமில் 8 ஆண்டுகளில் 59 பலாத்கார கொலை,12,000 கற்பழிப்பு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கெஜ்ரிவால் கட்சிக்குத் துடைப்பம் சின்னம்!
Read More பிரதமர் மன்மோகன்சிங் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்கெஜ்ரிவால் கட்சிக்குத் துடைப்பம் சின்னம்!
‘Broom’ is Aam Aadmi Party’s election symbol வியாழன், 2 ஆகஸ்ட் 2013: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் கமிஷன் துடைப்பம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடிய அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடி பின் பிரிந்த அரவிந்த கெஜ்ரிவால் ஆம் ஆத்மி எனும் கட்சியை தொடங்கினார். சென்ற டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட அக்கட்சிக்கு தேர்தல் கமிஷனும் மார்ச் மாதம் அங்கீகாரம் வழங்கியது. இச்சூழலில் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் கமிஷனிடம் சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க துடைப்பம் சின்னத்தை அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலில் நிறைந்துள்ள குப்பையை தம் கட்சியால் மட்டுமே துடைக்க முடியும் என்பதாலேயே…
Read More கெஜ்ரிவால் கட்சிக்குத் துடைப்பம் சின்னம்!சேது சமுத்திர திட்டத்தால் தூத்துக்குடி வளர்ச்சி அடையாது: வை.கோ
No improvements can be made in Tuticorin implementing sethu canal: Vaiko தூத்துக்குடி : “”மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம்,” என, வைகோ தெரிவித்தார். தூத்துக்குடியில், ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர் கூறியதாவது: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, நான் முன்னிலையில் இருந்து செயல்பட்டேன். அப்போதைய சூழ்நிலைகள் வேறு. தற்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். கடல்வளத்தை நம்பி வாழும் மீனவர்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இத்திட்டத்தில் சர்வதேச அளவிலான, பெரிய கப்பல்கள் வந்து செல்ல முடியாது. இத்திட்டத்தால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம். ஈழத்தமிழர் படுகொலையை திசை திருப்புவதற்காக, இப்பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. இலங்கையில் “காமன்வெல்த்’ மாநாடு நடத்தக் கூடாது.…
Read More சேது சமுத்திர திட்டத்தால் தூத்துக்குடி வளர்ச்சி அடையாது: வை.கோதேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதிஆலோசனை
Election Commission calls all-party meet on August 12 for framing guidelines on ‘freebies’ புதுடெல்லி, ஆக.2-2013: தமிழ்நாடு அரசு அறிவித்த இலவசங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடும் இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. அதன்படி, இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக, வருகிற 12-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் கமிஷன் கூட்டி உள்ளது. அதில், இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது பற்றி அனைத்து கட்சிகளின் கருத்தையும் தேர்தல் கமிஷன் கேட்கும். மேலும், ‘இலவசம்’ என்பதற்கான அர்த்தத்தை வரையறுப்பது பற்றியும் கட்சிகளின் கருத்தை கேட்கும். அதன் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும். Election Commission calls all-party…
Read More தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதிஆலோசனை65 தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்
65 indian fishermen arrested by srilankan Navy நாகை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கைக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுல சூர்யா புதன்கிழமை காலை தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் மேற்கொண்ட விசாரணையில், நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த செ. இளமுருகனுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற சிலம்பரசன், விஜயபாலன், வீரைய்யன், கதிரவன், சக்திவேல், சிவராஜ் ஆகிய 6 பேர், அக்கரைப்பேட்டை கு. மதி என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற கு. மதி, கு. இளங்கோவன், இ. மதன், என். சிங்காரவேலு, வ. ஆறுமுகம், சி. இறைவன்,…
Read More 65 தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்