திமுக தலைவர் கருணாநிதியின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்ட்ரியாவில் அவரது படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது 90ஆவது பிறந்தநாளை கடந்த மாதம் 3 ஆம் தேதி கொண்டாடினார். ஆஸ்ட்ரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்ட்ரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இந்நிலையில் டான் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர். அந்த தபால் தலையில் கருணாநிதியின் முகம், கட்சிகொடி மற்றும் 90 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தபால் தலையின் விலை ரூ.7,023 ஆகும். தனிப்பட்ட…
Read MoreCategory: செய்தி சிறகுகள்
விரைவில் செவ்வாய் கிரகத்தில் இந்திய செயற்கை கோள்: இஸ்ரோ
Indian satellite to orbit around Mars செவ்வாய்க்கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா விரைவில் செயற்கைகோளை அனுப்பவுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அதில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக மட்டுமல்ல. அதில் வியாபர நோக்கமே முன்னிற்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு தொடக்கம், நவம்பர் மாதம் வரை ஏதாவது ஒரு திகதியில் செவ்வாய்க்கிரகத்திற்கான ஆராய்ச்சி பயணம் தொடங்கும். பி.எஸ்.எல்.வி ராகெட் மூலம் செயற்கை கோள், செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும். நவம்பர் மாதம் இந்தப் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பூமியிலிருந்து செயற்கை கோள் ஏவப்பட்டதும் 10 மாதங்கள் தொடர்ந்து பயணித்து, 2014ம் ஆண்டு இந்த செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். இந்த செயற்கை கோளின் எடை, 15 கிலோவாக இருக்கும். ஐந்து முக்கிய கருவிகள்…
Read Moreபாகிஸ்தானில் இந்து கிறிஸ்தவ பெண்களிடம் பாலியல் பலாத்காரம்: அமெரிக்க அறிக்கை
Hindus in Pakistan are the worst victims of rape, says a report by an independent American group. வாஷிங்டன்: பாகிஸ்தானில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு இந்து பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் உலகளாவிய அளவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிக்கையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் நடைபெற்ற 203 இன மோதல் சம்பவங்களில் 717 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 635 பேர் ஷியா பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. பலியாகும் இந்துப் பெண்கள் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து கடந்த 18 மாதங்களில் 16 தாக்குதல் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் 3 இந்துக்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர். கடந்த…
Read Moreநாட்டின் பொருளாதார வளர்ச்சி: பிரதமர் நடவடிக்கை?
Manmohan Singh assures industry of economic recovery புதுடில்லி:”நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலையை, சரி செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, தேவையான உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும்,” என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். சீர்திருத்த நடவடிக்கை:டில்லியில்,”அசோசெம்’ அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:நாட்டில் பொருளாதார மந்த நிலை, அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, திருப்திகரமாக இல்லை. இது கவலையளிக்கிறது. ஆனாலும், இதை சரி செய்தே தீருவது என்ற உறுதியுடன்,மத்திய அரசு செயலாற்றிக் கொண்டு வருகிறது. யாரும் பீதியடையத் தேவையில்லை என்ற வகையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில், அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நாள், வெகுதூரத்தில்…
Read Moreபீகாரில் பள்ளியில் மதிய உணவு: 16 குழந்தைகள் பலி
16 children dead after mid-day meal in Bihar பாட்னா – பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவுண்ட 16 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சரண் மாவட்டத்தினைச் சார்ந்த ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறையினைச் சார்ந்த ஒரு அதிகாரி இது பற்றி விசாரணைச் செய்வதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான குழந்தைகள் எட்டு முதல் பனிரெண்டு வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மரணம் அடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவினையும் அவர் நியமித்துள்ளார். இந்தியாவில் ஏறத்தாழ 13 கோடி மாணவர்கள் ஆரம்ப பள்ளியில் பயின்று வருகின்றனர். இதற்கு முன்பாக கோவாவில் 23 குழந்தைகளும், ஒரிஸாவில் 30 குழந்தைகளும், டெல்லியில் 40…
Read Moreஅமெரிக்க உளவுதுறையின்(NSA) போக்கு: அமெரிக்காவிற்கு அவமானம்
Information to Cause us Government Worst Damage in History. வரலாற்றில் அமெரிக்காவை இதைவிட வேறு யாராலும் அவமானப்படுத்த முடியாது என்ற நிலையில், அந்த அரசுக்கு எதிராக ஸ்னோடென் கைவசம் அவ்வளவு தகவல்கள் உள்ளதாக, ஸ்னோடெனின் ரகசியங்களை அம்பலப்படுத்திவரும் The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரி ஸ்னோடென், ”இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்கா உளவு வேலை பார்க்கிறது” என்று அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கமாக தகவலை வெளியிட்டார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவர் மாஸ்கோ விமானநிலையத்தில் பதுங்கியுள்ளார். உலக நாடுகள் அவருக்கு தஞ்சம் அளிக்க கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தபின்னும் அவருக்கு க்யூபா, நிகராகுவே, வெனிசுலா போன்ற அழைப்பு விடுத்தன. இந்த நிலையில் ஸ்னோடென் பிரிட்டனில் தற்போது தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கார்டியன் பத்திரிக்கையின் கட்டுரையாளர் க்லீன்…
Read Moreசென்னையில் அதிகரித்து வரும் பெண் பிக் பாக்கெட்டுகள்
increasing women pick pockets in chennai சென்னை மாநகர பேருந்துகளில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்கள் அதிகரித்துள்ளனர். ஆண்களாக இருந்தால் கவர்ச்சி காட்டியும், பெண்களாக இருந்தால் அன்பாக பேசியும் பிக் பாக்கெட் அடிக்கிறார்களாம். இந்த பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு கும்பலாக செயல்படுகின்றனர். ஆளுக்கு ஒரு ஏரியாவாக பிரித்து பஸ்களில் ஏறி காலை முதல் மாலை வரை பிக்பாக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். குறிப்பாக இவர்கள் யாருக்குமே சென்னை சொந்த ஊர் கிடையாதாம். மாறாக வெளியூர்களில் இருந்து இங்கு வந்து திருடி செல்கின்றனர். பஸ்களில் ஏறிய பின், ஆண்களாக பார்த்து அருகே சென்று உரசுவது, இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களாம். அப்போது ஆண்களின் கவனம் திசைமாறிய பின், இன்னொரு பெண் குறித்த ஆணின் பர்ஸை திருடிவிட்டு சென்று விடுவாராம். இதுவே பெண்ணாக இருந்தால் அன்பாக பேசி நடித்து திருடுவார்களாம். இவர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால், பிடிக்க முடியாமல்…
Read More160 ஆண்டு கால தந்தி சேவை முடிவுக்கு வந்தது
The 163-year old telegram service in the country is end ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ளவர்களுக்கும் அவசர செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க உதவிய 160 ஆண்டு கால பழைமையான தந்தி சேவை இந்தியாவில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தியாவில் பரீட்சார்த்த(சோதனை) முறையில் 1850ம் ஆண்டு கொல்கத்தாவில் முதன் முதலாக தந்தி சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியார் மட்டுமே பயன்படுத்தி வந்த தந்தி சேவை 1854ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட அவசர செய்திகளை பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு தந்தி மூலமாகவே பரிமாறி வந்தனர். செல்போன், இ.மெயில் போன்ற நவீன வசதிகள் பெருகிவிட்டதால் தந்தி சேவையின் முக்கியத்துவம் மக்களிடையே சிறுகச்சிறுக குறையத் துவங்கியது. இதன் விளைவாக,…
Read Moreஇலங்கை தமிழர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்
LETTER TO PRIME MINISTER MANMOHAN SINGH REGARDING SRILANKAN ISSUE CHIEF MINISTER JAYALALITHA சென்னை, 15 – இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் 13 வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்து விடாமல் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே அவர்கள் சிங்கள அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போதும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். பல தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். அவரது மகனான பச்சிளம் பாலகனும் சிங்கள வெறித்தனமான அரசால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டான். இத்தனையும்…
Read Moreதமிழக அரசு நிறுவனங்களுக்கு என்.எல்.சி பங்குகள்: முதல்வர் கடிதம்
Tamil Nadu Government team to meet SEBI பிரதமர் மன்மோகன் சிங், என் எல் சி பங்குகள் விற்பனை குறித்து அனுப்பிய கடிதத்திருக்கு பதில் அளிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, என் எல் சி போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண தமிழக அரசு நிறுவனங்களுக்கு என்.எல்.சி பங்குகளை விற்பனை செய்வது குறித்து யோசிப்பது முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும் என்று பதில் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் உயரதிகாரிகள் அடங்கிய குழு நாளை மறுநாள் மும்பை செல்லும். அங்கு மத்திய அரசு மற்றும் செபி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என அதில் குறிப்பிட்டுள்ளார். என் எல் சி பங்குகள் விற்பனையை வடிவமைப்பது, செயல்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும். என் எல் சி தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண இந்த நடவடிக்கை முன்னேற்றமான சூழ்நிலையாக அமையும், என் எல் சியின் 5…
Read More