இ-சிகரெட்டுகளை தடை செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

டெல்லி: இ-சிகரெட் தடை (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிமுகப்படுத்திய மசோதாவில்,முதன்முறையாக சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்ட நபர்கள் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும். அடுத்தடுத்த குற்றங்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ .5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.இ-சிகரெட்டுகளை சேமித்து வைப்பதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .50,000 வரை அபராதம் அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும்.

Related posts