பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு

India refusal to negotiate with Pakistan இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் இதனை தெரிவித்தார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்று கூறிய அவர், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தனது வாக்குறுதியை அந்த நாடு காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில்தான் இந்தியாவின் கவனம் உள்ளது என்றும் அக்பருதீன் தெரிவித்தார். முன்னதாக, அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொது அவை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்…

Read More பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு

ராயல்டி வேண்டி பாடகர்கள் திடீர் போர்க்கொடி

Popular singers struggle to royalty தற்போது பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் ராயல்டி பெற்று வருகிறார்கள். அதாவது ரேடியோ, தொலைக்காட்சி உள்பட எந்த இடத்திலும் கமர்ஷியல் நோக்கத்துக்காக பாடல் ஒலிபரப்பப்பட்டால் அந்த பாடலை எழுதிய பாடலாசியரிருக்கும், இசை அமைத்த இசை அமைப்பாளருக்கும் ராயல்டி வழங்கப்படுகிறது. ஒரு பாடலுக்கு பத்து பைசா, ஐந்து பைசாதான் ஆனால் அதுவே ஒரு மாத்தில் பல்பெருகி நிற்கும். வைரமுத்து, நா.முத்து-குமார் போன்ற பாடலாசிரியர்கள் லட்சகணக்கில் ராயல்டி பெற்று வருகிறார்கள். இசை அமைப்பாளர்களும் லட்சக் கணக்கில் பெற்று வருகிறார்கள். பாடகர்களுக்கு இல்லாமல் இருந்தது. எங்களுக்கும் ராயல்டி வேண்டும் என்று பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் சோனி நிகாம், ஜாவீத் அக்பர் போன்றவர்கள் தொடர்ந்து போராடி வந்தார்கள். அதன் பலனாக 2012ம் ஆண்டு ஜுன் மாதம் பார்லிமென்ட்டில் பாடகர்களுக்கும் ராயல்டி வழங்க வேண்டும் என்று சட்டம்…

Read More ராயல்டி வேண்டி பாடகர்கள் திடீர் போர்க்கொடி

மலேசியாவில் மலையில் பஸ் கவிழ்ந்து 33 பேர் பலி

Malaysia crash: Toll rises to 37 after bus plunges into ravine கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் 33 பேர் பலியானார்கள். இவர்களில் இந்தியர்கள் இருவர் என்று கூறப்படுகிறது. ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் பகுதியில், இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தானது, 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததால் விபத்து நேரிட்டது. விபத்தில் சிக்கிய பேருந்தில் 53 பேர் இருந்தனர். இவர்களில் 27 ஆண்களும், 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மலேசியர்கள் தவிர வங்கதேசம், தாய்லாந்து, சீன நாட்டவரும் அடக்கம். பலத்த காயமடைந்தவர்கள் செலயாங் மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்காய் புலோ மருத்துவமனை, பென்டாங் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டிலிருந்து திரும்பும் வழியில் பஸ் விபத்துக்குள்ளானது. இறந்தவர்களில் 30…

Read More மலேசியாவில் மலையில் பஸ் கவிழ்ந்து 33 பேர் பலி

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

India, US bank on Manmohan visit to boost ties அடுத்த மாதம் ஐ.நா. அவைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். வாஷிங்டன்னில் பிரதமரின் பயண ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசுடன், ஆலோசனை நடத்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு, வர்த்தகம், பருவநிலை மாற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார். பின்னர் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் கலந்து கொள்கிறார்.  India, US…

Read More பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் மீண்டும் 20 கி.மீட்டர் ஊடுருவல்

Chinese troops intrude into Arunachal இந்திய எல்லைக்குள் கடந்த மே மாதம் சீனா மீண்டும் ஊடுருவியது. வாபஸ் பெற்றுச்சென்ற இடத்துக்கு மீண்டும் தனது படைகளுடன் அத்துமீறி நுழைந்து உள்ளது. சீனப்படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தன. சுமார் 19 கி.மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் ஊடுருவி இருந்தன. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின. அவ்வேளையில், சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண சீன-இந்திய ராணுவ அதிகாரிகள் கூட்டாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டு, சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்தது. அதன்படி,…

Read More இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் மீண்டும் 20 கி.மீட்டர் ஊடுருவல்

மதுரையை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை

terrorist attack suspected in tamilnadu தீவிரவாதிகள் மதுரையை தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து நாச வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதிகள் இது தொடர்பாக அளித்த வாக்கு மூலத்தில் பாகிஸ்தானின் சதிச் செயல் அம்பலமானது. அதன் பிறகும் பாகிஸ்தானின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கும்பலுக்கும் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் அளித்து வருகிறது. தற்போது தீவிரவாதிகளின் பார்வை தென் இந்தியா மீது விழுந்துள்ளதாக உளவுத்துறைக்கு நம்ப தகுந்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதற்கு முன் காஷ்மீர், குஜராத், மும்பை வழியாகவும் வங்காளதேசம், நோபளம் வழியாகவும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவச் செய்தது. இந்த முறை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள்…

Read More மதுரையை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை

அமெரிக்காவில், 4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் ‘கடல் நத்தை’

நியூயார்க்: விளையாடும் போது தவறுதலாக சிறுவனின் முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர். விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும் வேளைகளில் உடலில் வீக்கம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அத்தகைய வீக்கங்களில் சில முள் போன்றவைக் கிடைப்பதுண்டு. ஆனால், அமெரிக்கச்சிறுவனின் கால் வீக்கத்தில் இருந்து வெளிவந்த சிறிய நத்தையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர். During a family trip to the beach last month, 4-year-old Paul Franklin fell and scraped his right knee. That’s not unusual; little boys do all the time. It’s what emerged from his swollen knee that makes this a tale worth telling: a snail. Paul…

Read More அமெரிக்காவில், 4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் ‘கடல் நத்தை’

பெங்களூரில் 5 மாதங்களாக கைவிடப்பட்ட பெண்ணின் பிணம்

Bangalore woman lay dead for four months in her sprawling bungalow பெங்களூரின் இதயம் போன்ற இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பிணவாடை அடிப்பதாக சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். ‘ஏதாவது நாய் செத்துக் கிடக்கும்’ என்று பொறுப்புடன் பதில் கூறிய பெங்களூர் போலீசார் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்துவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. வெளியூரில் வசிக்கும் ஒருவர் பெங்களூர் இந்திரா நகரில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு வந்தார். வீடு உள்புறம் தாழிடப்பட்டிருந்ததால், வெகுநேரம் காலிங் பெல்லை அடித்து ஓய்ந்துப்போன அவர், வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே, அவரது சகோதரியான ஷீலா ரெட்டி (53) உடலின் பெரும்…

Read More பெங்களூரில் 5 மாதங்களாக கைவிடப்பட்ட பெண்ணின் பிணம்

சீன எல்லையில் இந்தியாவின் இராணுவ விமானம் தயார் நிலை!

Indian Air Force lands Super Hercules transport plane on airstrip near LAC சீன எல்லையில் இந்திய விமானப் படை தனது சூப்பர் ஹெர்குலிஸ் போர் விமானத்தை தயார் நிலையில் வைத்துள்ளது. சீன இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவதும், அவர்களை இந்திய இராணுவம் திருப்பி அனுப்புவதும் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இந்த பகுதியில் சீனப்படையினர் அத்துமீறி நுழைந்து 21 நாட்கள் கூடாரங்கள் அமைத்து தங்கி விட்டனர். பின்னர் இரு தரப்பிலும் பல சுற்று கொடி அணிவகுப்பு கூட்டங்கள் நடத்திய பின்னரே சீன வீரர்கள் திரும்பச்சென்றனர். இந்த நிலையில், அந்த பகுதியில் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகில் தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளத்தில், இந்திய விமானப்படை சூப்பர் ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானத்தை…

Read More சீன எல்லையில் இந்தியாவின் இராணுவ விமானம் தயார் நிலை!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை 3-வது நாளாக முடக்கம்

IOB core banking system caught in technical glitch இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் முடங்கி உள்ளது. கம்யூட்டர் சர்வரில் ஏற்பட்டுள்ள கோளாறால் நாடு முழுவதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சர்வர் கோளாறால் ஏடி.எம்-மிலும் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். IOB core banking system caught in technical glitch customers were not able to withdraw money from its ATMs since updation of transaction was not working The Core Banking System (CBS) of Indian Overseas Bank (IOB) was affected on Monday due to “complex technological malfunction,” restraining the banking services to its customers. While the…

Read More இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை 3-வது நாளாக முடக்கம்