4 accused arrested in auditor ramesh murder case
நெல்லை,ஜூலை28:ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், சேலத்தில் பாஜக மாநில பொது செயலர் ஆடிட்டர் கடந்த 19ம் தேதி மரவேனரி கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் கொலை குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய சிபிசிஐடி டிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதில், கொலை வழக்கு குற்றவாளியாக மதுரையை சேர்ந்த போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக், மேலபாளையத்தை சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரை சேர்ந்த அபுபக்கர் ஆகிய நால்வரை போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரை சேர்ந்த பீர் மொய்தீன், மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி, பசீர் ஆகியோர் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு முகாமிட்ட போலீசார் கிச்சான் புகாரியின் கூட்டாளிகளான கட்ட சாகுல், பஷீர், குட்டி, பாசில் ஆகியோரின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 145 டெட்டனேட்டர், 145 ஜெலட்டின் குச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து இவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 accused arrested in auditor ramesh murder case
இதையும் படியுங்கள்
- குடி போதையில் வாகனம் ஓட்டிய மயிலாப்பூர் காவல் ஆய்வாளர்
- நான் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி: நடிகை கனகா பேட்டி
- சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம்
- சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"
- ஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்
- பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு.,
- தஞ்சை பா.ஜ.க வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன், வை.கோ, அன்புமணி கடும் கண்டனம்
← முந்தைய செய்தி: சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம்
அடுத்த செய்தி →: குடி போதையில் வாகனம் ஓட்டிய மயிலாப்பூர் காவல் ஆய்வாளர்
