குடி போதையில் வாகனம் ஓட்டிய மயிலாப்பூர் காவல் ஆய்வாளர்

mylapore police inspector was booked for drunken driving

சென்னை: மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம். இவர் சனிகிழமை (27 ஜூலை 2013) இரவு 12 மணியளவில் ராஜா அண்ணாமலை புரம் டி.வி.எஸ். தினகரன் சாலை யில் போலீஸ் வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது போலீஸ் வாகனம் நிலை தடுமாறி ஓடி பிளாட்பாரத்தில் மோதியது. இதில் வண்டியின் டயர் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அடையாறு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தார்.

அவர்கள் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் குடிபோதையில் உள்ளாரா என்பதை கருவி மூலம் சோதித்தனர். இதில் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வேகமாக வாகனத்தை ஓட்டுதல், குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல் ஆகிய 2 பிரிவின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்குகள் ஜாமீனில் வெளிவரக்கூடியது என்பதால் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னையில் குடிபோதையில் போலீஸ்காரர்கள் சிக்குவது தொடர்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூரில் உள்ள மதுபான பாரில் தகராறில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் ஒருவர் மண்டை உடைந்தது. 2 நாட்களுக்கு முன் குடிபோதையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டை வாலிபர் ஒருவர் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து பிடித்து கொடுத்தார். தற்போது இன்ஸ்பெக்டர் குடிபோதையில் சிக்கி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நகரில் சனி கிழமை  போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 264 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேகமாக வாகனம் ஓட்டியதாக 26 பேர், தாறுமாறாக வாகனம் ஓட்டியதாக 8 பேர், இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றதற்காக 23 பேர் மொத்தம் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

mylapore police inspector was booked for drunken driving

English Summary:  CHENNAI: A police inspector was booked for drunken driving and ramming a median on Saturday night . He was later released on bail. Police said Sivalingam, inspector (crime) attached to Mylapore police station was driving home to Shastri Nagar when he lost control of the vehicle. The vehicle rammed a median on DGS Dinakaran Salai and the front wheel was damaged. No one was injured. Sivalingam had earlier entered into an argument with a policeman who had stopped him for drunk driving and advised him against it. Based on the information of the police control room, Adyar traffic investigation team reached the spot and booked him under IPC Section 279 (rash driving or riding on a public way) and 185 Motor Vehicles Act (MV) (drunk driving). When police subjected him to a test, he was found to be intoxicated. Sivalingam who was arrested, was later released on bail. A report on accident was prepared and sent to all senior police officials. “We are likely to initiate a departmental probe into the issue,” said a senior police official. The Chennai traffic police on Saturday booked 0264 people for drunk driving, 26 for speeding and 8 of them for rash driving. Police have also booked 23 motorists for triple riding.

Thanks: News Courtesy: Times of India

Related posts