சென்னையில் வழக்கறிஞர் வெட்டி கொலை : தப்பி சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

சென்னையில் வழக்கறிஞர் வெட்டி கொலை : தப்பி சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர் File name: rajesh-adv.jpg

சென்னை: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ்(45) என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் ராஜேஷ் மக்கள் ஆளும் அரசியல் கட்சியின் மாநில தலைவர் ஆவார். நேற்று வழக்கறிஞர் ராஜேஷ் வில்லிவாக்கம் மோகன் ரெட்டி மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை 8 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பிறகு உடனே வில்லிவாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த அண்ணா நகர் துணை ஆணையர் ஜவகர் மற்றும் காவல்துறையினர் பலத்த காயத்துடன் கிழே கிடந்த வழக்கறிஞர் ராஜேஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் முன்பே இறந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முதல் கட்ட விசாரணையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் ரஜினி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. மேலும் தப்பிச்சென்ற கும்பலை பிடிக்க அண்ணா நகர் துணை ஆணையர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts