சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருவதை அடுத்து, சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சந்தையில் இன்று தகுதி ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மே மாதம் சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக திருமழிசை, மாதவரம், வானகரம் பகுதியில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்ட்டது. இந்த சந்தைகளில் பெரும்பாலும் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாற்றப்பட்ட பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததாலும், புறநகர் பகுதியில் இருப்பதால் விற்பனை மந்தமாகவே உள்ளது எனவும் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு, கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை வணிகர் சங்க மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, சி.எம்.டி.ஏ செயலர் கார்த்திகேயன், அங்காடி நிர்வாகக் குழு அதிகாரி கோவிந்தராஜன் ஒன்று அடங்கிய குழு ஒன்று இன்று கோயம்பேடு சந்தைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. மேலும் இதனையடுத்து சந்தையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
- தீவிரவாதத்தின் தலைநகராக சென்னையை மாற்ற முயற்சியா?. அதிர்ச்சி ரிப்போர்ட்
- கொரோனாவில் கொள்ளையடிக்கும் தில்லாலங்கடி திருட்டு அதிகாரிகள்!
- லண்டனைச் சேர்ந்த சென்னை சிறுமியைக் கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்தது தொடர்பாக என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்தது: ஆய்வில் ஜாகிர் நாயக்கின் தொடர்பு அம்பலம்
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
← முந்தைய செய்தி: லண்டனைச் சேர்ந்த சென்னை சிறுமியைக் கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்தது தொடர்பாக என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்தது: ஆய்வில் ஜாகிர் நாயக்கின் தொடர்பு அம்பலம்
அடுத்த செய்தி →: இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) சென்னை வட்டம் இரண்டாகப் பிரிந்து விரிவாக்கம் நிறைவேற்றப்பட்டது

