திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று காவல்துறையில் கணவர் புகார் அளித்தார்.பிறகு சில நாள்கள் கழித்து உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறி மனைவி குழந்தையுடன் வீடு திரும்பினார்.குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது .அதனால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது பாலியல் வன்கொடுமை பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதை தம்பதியிடம் தெரிவித்தார்.இதை கேட்டு தந்தையும் அதிர்ச்சி அடைந்தார் .தாயிடம் மருத்துவர் என்ன நடந்தது என்று கேட்டபோது உண்மையை மறைத்து பிறகு ஒப்புக்கொண்டார் . சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் குழந்தையின் அம்மாவுக்கும் இளைஞர்கள் சிவா மற்றும் மணியிடம் நட்பு இருந்துவந்துள்ளது. ஆந்திராவில் இளைஞர்களுடன் தங்கியிருந்த போது அந்தப் தாயின் அனுமதியோடு 3 வயது குழந்தையை சிவா மற்றும் மணி பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மூன்று பேரையும் காவல்துறை கைது செய்து பிறகு சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்கள்
- திருமாவளவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
- கொடநாடு விவகாரம்: ஸ்டாலின் பேச தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
- மாணவர்கள் பாதுகாப்பு உறுதி கோரி வழக்கு: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள்: ₹1,439 கோடி குடிநீர்த் திட்டம் உட்பட முழுப் பட்டியல்
← முந்தைய செய்தி: மாணவர்கள் பாதுகாப்பு உறுதி கோரி வழக்கு: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி →: திருமாவளவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

