டெல்லி :சர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசினார். அது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.கடந்த 12ம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் ,அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.இதனால் பாஜக தனது கண்டனத்தை தெரிவித்தது. பாஜக-வின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடை செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராததால் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தனது புகார் மனுவை விசாரித்த தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.…
Read Moreஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம்
டெல்லி:சுசன் எம் குப்தா அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேட்டில் இடைதரகராக செயல்பட்டார்.அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.மேலும் அவரை நீதிமன்ற காவலில் வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
Read Moreதனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு சீல்:சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :ஷெனாய் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது.அதில் பல நோயாளிகள் சிகிச்சை வருகின்றனர்.அரும்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அதில் ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விதிகளை மீறி அடுக்குமாடி கட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க உத்தவிட்டனர்.மேலும் கட்டடத்திற்கு சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பாதிப்பு வராமல் இருக்க வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Read Moreஅயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: அயோத்தி நிலச் சர்ச்சை வழக்கு அலகாபாத் உயநீதிமன்றத்தில் நடைபெற்றது.அந்த வழக்கில் சர்ச்சைக்குறிய நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ளும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்காக 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது. வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு பற்றி கேட்டனர்.மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு தொடர்பாக தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். மத்தியஸ்த குழுவுக்கு ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.
Read Moreமதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பொறியியல் படித்து வந்தார்.அவர் படிக்கும் போது வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த வந்தார் .இவர் 2015ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுதாக்கல் செய்தார் .அந்த மனுவில் வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவு விட குறிப்பிட்டுள்ளது.அதுமட்டும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி விட்டதாகவும், நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த மனுவை விசாரித்த…
Read Moreமுன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சசிகலா புஷ்பா மற்றும் அவரின் முதல் கணவர் லிங்கேஸ்வர திலகன் மற்றும் மகன் ஆகியோர் மீது தூத்துக்குடியை சேர்ந்த பணிப்பெண் பாலியல் புகார்களை தெரிவித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.விசாரணைக்கு தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.மேலும் சசிகலா புஷ்பாவை பணிப்பெண்களின் வழக்கறிஞர் சுகந்தி வீட்டை தாக்கியதாக கூறிய வழக்கில் இருந்தும் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்திவிட்டது.சசிகலா புஷ்பாவை நீதிமன்ற விசாரணை முடியும் வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Read Moreசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை
டெல்லி : கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 3 அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். மூன்று எம்எல்ஏக்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மூன்று அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்தது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
Read Moreவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணை:உச்சநீதிமன்றம்
டெல்லி :நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது.இந்திய தேர்தல் ஆணையம் இந்த தடவை (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL) என்ற இயந்திரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் நடைமுறைப்படுத்தியது. காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் , 50% ஒப்புகைச் சிட்டையும் எண்ண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது . இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதில் வாக்கு எண்ணிக்கையுடன் , ஒப்புகைச்சீட்டையும் எண்ணினால் வாக்கு இறுதி முடிவுகள் தாமதம் ஆகும். எனவே ஒப்புகை சீட்டை எண்ணுவது கடினம் என தேர்தல் ஆணையம்…
Read Moreகிரன் பேடி புதுவை அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிடக் கூடாது:சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை:புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி,புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக கேட்டுப் பெறும் வகையில் மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுனர் கிரன் பேடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த உத்தரவை எதிர்த்து புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை பெஞ்சில் வழக்கு தொடர்ந்தார்.எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜர் ஆனார்.இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.இதனால் புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி அறிக்கை பெற…
Read Moreஜோதிமணி,செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை:கரூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜியுடன் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது இரவு 12 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாக புகார் அளித்தார் .அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி கைது செய்யப்படாமல் இருக்க வழக்கறிஞர் செந்தில்குமார் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ,வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன் ஜாமீன் வழக்கினார்.
Read More



