இணையதள பயன்பாட்டாளர்களின் இடையே பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய தேவையில்லை, வரிசை இல்லை, ஆப் – இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை வந்து சேரும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி. எனினும் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்பட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. இந்நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு கிடையாது. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா பொது நல…
Read MoreMonth: April 2019
மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை:திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.மு.க. ஸ்டாலின் விதிக்கவேண்டுமென என் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு முன்வைப்பதாக அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவது வாடிக்கைதான் என்றும் ,மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Read Moreரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான…
Read Moreவெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.
Read Moreசிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
டெல்லி:கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள மாங்காடு அருகே தஷ்வந்த் என்பவன் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து , பிறகு அந்த சிறுமியை எரித்துக் கொலை செய்தான். பிறகு கொலை செய்த தஷ்வந்த்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு ,பிறகு மும்பை தப்பி சென்றான்.இதை அறிந்த காவல்துறை தனிப்படை அமைத்து 6-ம் தேதி மும்பையில் தஷ்வந்தை செய்தனர்.செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்திருந்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி…
Read More8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி
சென்னை: சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் தொடா்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு விவசாய நிலங்களை கைப்பற்றினார்கள் .இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள், நில உரிமையாளா்கள் என சுமாா் 50 போ் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது , இந்த தீர்ப்பில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய உடைமையாளா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரங்களில் சரி செய்து நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு விடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read Moreசென்னை – சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு!
சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம்…
Read Moreகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி :கடந்த 2013-ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஐபிஎல் போட்டில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ,அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் போட்டியிட்டனர். அவர்கள் ஸ்பாட் பிக்ஸிங்முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது . இதனால் மூன்று வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்து ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இதை எதிர்த்து பிசிசிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது, இதனால் ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்து கேரள உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை நாங்கள் பரிசீலித்தோம். இந்த வழக்கை…
Read Moreஓய்வூதியம் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
டெல்லி:கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கேரள உயர் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு ,வருங்கால வைப்பு நிதியாக (EPF) 12% அவரின் சம்பளத்தில் இருந்தும் , 12% நிறுவனத்தின் சார்பில் இருந்தும் சேர்த்து வைக்கப்படும். நிறுவனத்தின் சார்பில் இருந்தும் 3.67% மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) பங்களிப்பாக வைப்பு வைக்கப்படும் . 1.9.2014-ம் தேதிக்குப் பிறகு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் , புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கும் வருங்கால வைப்புநிதி ஆணையம் 2018-ல் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை…
Read Moreசீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது உயர்நீதிமன்றம் வழக்கு!
சென்னை:சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் நீதிமன்றத்திற்கு போலி அறிக்கை அளித்ததால் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.2018ம் ஆண்டு கை ரேகை பிரிவில் எஸ்.ஐ பணிக்காக தேர்வு குறித்த வழக்கு நடைபெற்றது வருகிறது.அந்த வழக்கில் சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் போலி அறிக்கைகளை சமர்பித்ததாக கூறப்படுகிறது.அதனால் உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More