சென்னை: அரியலூர் மாவட்டம் செந்துநை அருகே 17 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக மணிகண்டன் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்தனர். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினால் நீதி கிடைக்கும் என்று இளம்பெண்ணின் தாய் கருதினார்.இதை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி இளம்பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Read MoreMonth: April 2019
கொடநாடு விவகாரம்: ஸ்டாலின் பேச தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடநாடு விவகாரம் பற்றி மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறி மு.க.ஸ்டாலின் பேசினார்.இதனால் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது .இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் . ஸ்டாலினை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு,இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் அதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் என…
Read Moreதிருமாவளவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை:திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.அந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று திருமாவளவன் தரப்பில் கூறப்பட்டது.இதனையடுத்து, திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து காவல்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதி உத்திரவிட்டார் .பிறகு அந்த வழக்கு விசாரணையை வருகிற 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Read Moreகுழந்தைக்கு பாலியல் வன்கொடுமை அதற்கு உடந்தையாக இருந்த தாய்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று காவல்துறையில் கணவர் புகார் அளித்தார்.பிறகு சில நாள்கள் கழித்து உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறி மனைவி குழந்தையுடன் வீடு திரும்பினார்.குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது .அதனால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது பாலியல் வன்கொடுமை பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதை தம்பதியிடம் தெரிவித்தார்.இதை கேட்டு தந்தையும் அதிர்ச்சி அடைந்தார் .தாயிடம் மருத்துவர் என்ன நடந்தது என்று கேட்டபோது உண்மையை மறைத்து பிறகு ஒப்புக்கொண்டார் . சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் குழந்தையின்…
Read More