சென்னை:சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் நீதிமன்றத்திற்கு போலி அறிக்கை அளித்ததால் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.2018ம் ஆண்டு கை ரேகை பிரிவில் எஸ்.ஐ பணிக்காக தேர்வு குறித்த வழக்கு நடைபெற்றது வருகிறது.அந்த வழக்கில் சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் போலி அறிக்கைகளை சமர்பித்ததாக கூறப்படுகிறது.அதனால் உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது உயர்நீதிமன்றம் வழக்கு!
