இந்திய கபடி வீராங்கனை ஜார்கண்டில் வேலை கேட்டு போராட்டம்

Kabaddi champ sits on dharna கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றிப்பெற்று இந்தியா திரும்பிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை விந்தியாவாசினியும் இடம் பெற்றிருந்தார். பின்னர் தனது சொந்த மாநிலத்திற்கு வந்த விந்தியாவாசினிக்கு அப்போது முதல்வராக இருந்த அர்ஜூன் முண்டாவின் அரசு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால் அந்த ஆட்சி முடிவுபெற்றது. அதையடுத்து ஆட்சிக்கு வந்த ஹேமந்த் சோரனும் இரண்டு முறை வேலை கொடுப்பதாக விந்தியாவாசினிக்கு உறுதியளித்தார். ஆனால், அவர்களின் வாக்குறுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த விந்தியாவாசினி ஏமாற்றம் அடைந்தார்.   நான்கு சகோதரிகளுடன் வாழ்ந்த அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகிறது. இதையடுத்து இந்தியாவிற்கு பெருமை அந்த…

Read More இந்திய கபடி வீராங்கனை ஜார்கண்டில் வேலை கேட்டு போராட்டம்

உயிரற்றவரின் கண் செல்கள் மூலம் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு கண் பார்வை

Eyes of the Dead Can Make the Living Blind See கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை ரெடினல் ஸ்டெம் செல்களைக் கொண்டும், இருதய கோளாறுகளை போக்க இருதய ஸ்டெம் செல்களைக் கொண்டும், அல்ஷிமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றை குணப் படுத்த நரம்பு ஸ்டெம்செல்களும், தசை திசுக்களின் குறைபாடுகளை களைய மஸ்கோஸ்கெலிடல் ஸ்டெம் செல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சோதனைகளின் பல்வேறு நிலை களைக் கடந்து வெற்றிகரமாக மனிதர்களில் சிகிச்சை யளித்து வரும் நிலையில் தற்போது இறந்தவரின் கண் செல்கள் மூலம் பார்வையற்றோர்க்கு பார்க்கும் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அதிலும் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு உயிரற்றவரின் கண்களின் செல்கள் மூலம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் பொருட்களை அடையாளம் கண்டறியும் அளவுக்குத் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   உயிரிழந்தோரின் கண்களின் பின் உள்ள…

Read More உயிரற்றவரின் கண் செல்கள் மூலம் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு கண் பார்வை

19வது நூற்றாண்டு வரை இல்லாத – தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி

millets cooking classes and benefits சத்து உள்ள சிறுதன்யத்தை வைத்து சுவையான உணவு தயாரிப்பது எப்படி??. சென்னை மொகப்பேரில் சிறுதன்யத்தின் மகத்துவம் பற்றியும் அதனை வைத்து ஆரோக்கிய சமையல் செய்வது எப்படி எனவும் உரை நிகழ்த்த பட இருக்கிறது. உரை நிகழ்த்துபவர் அரிமா.செல்வராணி சரவணன். சிறுதன்யங்கள் : சாமை, திணை, வரகு, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, மற்றும் சோளம் மறந்துபோன நமது பாரம்பரிய உணவான சிறுதான்யத்தை வைத்து வகை வகையான சுவை மிகுந்த உணவு தயாரித்து நம்மிடையே 19வது நூற்றாண்டு வரை இல்லாத தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி என விளக்க உரை நடைபெற இருக்கிறது. நேரம் : காலை 11 முதல் மதியம் 12 வரை. தேதி : 7 பிப்ரவரி 2014 அணுகவேண்டிய முகவரி :…

Read More 19வது நூற்றாண்டு வரை இல்லாத – தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி

எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர பட்டறை தொழிலாளர்கள் ஸ்டிரைக்.

Stainless steel and brass vessels Workshop Workers on Strike 5வது நாளாக திருப்பூரில் எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர பட்டறை  தொழிலாளர்கள் ஸ்டிரைக். திருப்பூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் இரண்டு ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் . ஊதிய உயர்வு தொடர்பான  பேச்சு வார்த்தையில் தோல்வி அடைந்ததால் தொழிலாளர்கள் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது . வேலை நிறுத்தம் காரணமாக  பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, 28ம் தேதியிலிருந்து தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. இதைதொடர்ந்து கடந்த 4 நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இருதரப்பினரிடையே நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை…

Read More எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர பட்டறை தொழிலாளர்கள் ஸ்டிரைக்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்

This school teacher had a house full of 400 pythons, living and dead   அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைபாம்புகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம் புச்மன் என்னும் ஆசிரியர் வசித்து வந்தார். இவருக்கு வயது 53. பாம்புகள் வளர்ப்பதில் அதீத ஆர்வமுடைய இவர், தனது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்துவந்தார். இவற்றிற்கு உணவாக அவர் அடிக்கடி வீட்டிற்கு அதிக அளவில் எலிகளை கொண்டுவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து அவரது வீட்டை காவல்துறையினர் சோதனையிடச் சென்றனர். அப்போது, ஐந்து அறைகள் கொண்ட புச்மனின் வீட்டை பார்த்த காவல்துறையினர்…

Read More அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உலகிலேயே உயரமான பெண்ணிற்கு வளர்ச்சியை கட்டுபடுத்த அறுவை சிகிச்சை

AIIMS frees tallest woman from curse உலகின் மிக உயரமான பெண்ணுக்கு வளர்ச்சியின் வேகத்தையும் அளவையும் கட்டுப்படுத்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ளபட்டது.  7.8 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான பெண்ணுக்கு, மிக உயரமாக இருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிறரை போல இல்லாமல் அளவில் மிக பெரிய கை, கால்களை கொண்டிருந்த இவர் சுமார் 15 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார்.  தற்போது 25 வயதாகும் கின்னஸ் சாதனையாளரான அப்பெண் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இவருடைய நிலையை பார்த்து அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஒருவர் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்தார்.  பரிசோதனையின் போது அப்பெண்ணிற்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அக்கட்டி அதீத வளர்ச்சி ஏற்படும்படி ஹார்மோன்களை வெளியேற்றியதாக தெரிந்தது. தற்போது அவரின் மூலையில் இருந்த கட்டியை அகற்றிய…

Read More டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உலகிலேயே உயரமான பெண்ணிற்கு வளர்ச்சியை கட்டுபடுத்த அறுவை சிகிச்சை

3 1/2 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்ட ஜெர்மனியை சேர்ந்த 63 வயதுபெண்

Woman Tears up the Cash Into Pieces and Flushed it Down the Toilet ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் லாட்டரி டிக்கெட் மூலம் 3 1/2 கோடி ரூபாய் வரை வெற்றிபெற்றார். ஆனால், இவர் வெற்றிபெற்ற பணத்தை கிழித்து கழிவறையில் வீசியதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் எஸ்ஸென் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண்மணி ஏஞ்சலா மேயர். இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 3 1/2 கோடி) பரிசு விழுந்தது. ஆனால் இவர் குடிபோதையில் அந்த பணத்தை துண்டு துண்டாக கிழித்து கழிப்பறையில் போட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஞசலாவின் கணவர் சில மாதங்களுக்கு முன் எஸ்ஸென் அருகிலுள்ள ஒரு பாராமரிப்பு இல்லத்தில் நோய் வாய்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.…

Read More 3 1/2 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்ட ஜெர்மனியை சேர்ந்த 63 வயதுபெண்

படுத்த படுக்கையில் இருக்கும் 60 வயது மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிற 98 வயது தாய்

உலகத்தில் உள்ள அன்புகளில் ஈடு இணை இல்லாதது தாயன்பு மட்டும் தான். தள்ளாத வயதிலும், படுத்தப் படுக்கையாய் கிடக்கும் மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார் சீனாவை சேர்ந்த மூதாட்டி.கிழக்கு சீனாவின் அன்ஹீய் மாகாணத்தில் வசிப்பவர் 98 வயது மூதாட்டி ஸ்ழாங். இவரது 60 வயது மகன், கடந்த 20 ஆண்டுகளாக பெரலைஸிஸ் என்ற பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக உள்ளார்.  இத்தனை ஆண்டுகளாகவும் தாயன்பு என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ வைத்து வருகிறது. மகனுக்கு உணவு ஊட்டுவது, அவரது இயற்கை உபாதைகளைத் துடைத்து சுத்தம் செய்வது என இந்த தள்ளாத வயதிலும் பணிவிடை செய்து வரும் இந்த மூதாட்டியை ‘தாய்மையின் அடையாளம்’ என்று சீன மக்கள் புகழ்கின்றனர்.  இவரைப்பற்றி கேள்விப்பட்ட சில சமூக ஆர்வலர்கள், தாங்களாகவே முன்வந்து நிதி திரட்டி…

Read More படுத்த படுக்கையில் இருக்கும் 60 வயது மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிற 98 வயது தாய்

நடுவானில் தீடிரென மயங்கிய விமானி, விமானத்தை ஒட்டிய 19 வயது உடைய பயனி

Teen takes control after pilot faints ஆஸ்திரேலியாவில் விமானத்தை செலுத்திக்கொண்டிருந்த விமானி ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால், விமானத்தில் இருந்த இளைஞர் ஒருவர் விமானத்தை ஓட்டும் நிலை ஏற்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் டெரக் நெவிலி. விமானியான இவருக்கு வயது 61.  சம்பவத்தன்று இவர் ஒரு என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்ட எடை குறைந்த விமானமான செஸ்னா 150 ரக விமானத்தை ஓட்டினார் அவருடன் டிராய் ஜென்கின்ஸ் என்ற 19 வயது இளைஞர் உள்ளிட்ட சிலர் பயணம் செய்தனர். இவர்களது விமானம் விண்ணில் பறந்துக் கொண்டிருந்தபோது போர்ப்ஸ் விமானி நெவிலிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் விமானி அறையில் இருந்து ‘மைக்’கில் தெரிவித்தார். உடனே ஜென்கின்ஸ் அங்கு விரைந்து சென்றார். அப்போதுதான் விமானி நெவிலி மயங்கி கொண்டிருந்தார்.  முதலில் விமானி மயக்கமடைவதை பார்த்து பதறிய ஜென்கின்ஸ் உடனே…

Read More நடுவானில் தீடிரென மயங்கிய விமானி, விமானத்தை ஒட்டிய 19 வயது உடைய பயனி

அந்தமானில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகு கடலில் மூழ்கி 31 பேர் பலி

Andaman boat tragedy: Survivors narrate their ordeal at sea அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த துயர சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 31 என்று தெரிகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இதில் பலியாகியுள்ளனர்.   தலைநகர் போர்ட்ப்ளேர் அருகே நடுக்கடலில் இந்தப் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று படகு தள்ளாடியது. கண் இமைக்கும் நேரத்தில் படகு கடலில் கவிழ்ந்த போது மரண ஓலங்கள் எழுந்தன. கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டதால் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.கடலில் படகு முழ்கியதில் 31 பேர் பலியாகினர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. படகில் 46 சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. படகில் இருந்தவர்கள் தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்து…

Read More அந்தமானில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகு கடலில் மூழ்கி 31 பேர் பலி