kerala govt dismiss 1300 tamil teachers from schools கேரளாவில் பணிபுரிந்து வந்த, தமிழகத்தை சேர்ந்த தமிழாசிரியர்கள் 1300 பேரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கேரளாவின் தேக்கடி உள்ளிட்ட தமிழர்கள் அதிமாக வாழும் பகுதிகளில், தமிழ் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க அம்மாநில அரசு 1300 தமிழாசிரியர்களை நியமித்தது. இப்போது இவர்கள் அத்தனை பேரையும் உடனடி பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கேரள அரசின் இந்த திடீர் உத்தரவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களும் தங்களின் குழந்தைகளின் நிலையை எண்ணி அதிர்ச்சியில் உள்ளனர். Kerala Government dismisses around 1300 Tamil…
Read MoreYear: 2014
பஞ்சாப் மாநிலத்தில் இறந்துபோன சாமியாரின் உடலை 6 மாதமாக அவர் உறங்குகிறார் என்று கூறி வைத்திருக்கும் சீடர்கள்
Millionaire guru’s body kept in freezer as followers argue over whether he’s dead or asleep இறந்த சாமியாரின் உடலை, தூங்குவதாகக் கூறி கடந்த 6 மாதமாக ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாக்கின்றனர் அவரது சீடர்கள். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் திவ்ய ஜோதி ஜக்ரதி சான்ஸ்தன் என்ற அமைப்பின் மூலம் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் 70 வயதுடைய ஸ்ரீ அஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள். இவருக்கு கோடிக்கணக்கான சொத்து உள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சீடர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். பரிசோதனையில் ஸ்ரீஅஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது சீடர்கள் அவர் இறக்கவில்லை அவர் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார் என கூறி, அவரது உடலை கடந்த 6…
Read Moreபிரான்ஸ்சில் 1982ஆம் ஆண்டு பனிமலையில் காணாமல் போன 23 வயது நபரின் சடலம் 32 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது
Missing climber’s body found in Alps after 32 years பிரான்ஸ் நாட்டில் மொண்ட் பிளான்க் பனிமலையின் மீது கடந்த 1982 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி, தனியாக ஏறத்துவங்கிய 23 வயது பாட்ரிஸ் ஹைவேர்ட் என்பவர் திடீரென வானிலை மாறியதால் காணாமல் போனார். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, பாட்ரிஸ் இறந்ததை உறுதி செய்த மீட்பு படையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் நடைபெற்று 32 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது தலேப்ரே பனிமலைக்கு சென்ற இரு மலையேற்ற வீரர்கள் 2600மீட்டர் உயரத்தில் ஒரு சடலம் இருப்பதாக தகவல் கொடுத்தனர். மலையேற்ற வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பார்த்தபோது, அது 23 வயதில் காணாமல் போன பாட்ரிஸ் ஹைவேர்ட்டின் சடலமென தெரியவந்தது. சுமார் 32 ஆண்டுகள் கழித்து மீட்க்கப்பட்ட…
Read Moreதாமதமாக விமானம் புறப்பட்டதால் பயணிகளுக்கு சொந்த செலவில் பீட்ஸா வாங்கிக் கோடுத்த விமானி
Frontier Airlines pilot buys pizza for stranded passengers on flight அமெரிக்க விமானம் ஒன்று வானிலை காரணமாக வழியில் இறங்கி தாமதமாக புறப்பட்டதால் அதன் விமானி தன்னுடைய சொந்த செலவில் பயணிகள் அனைவருக்கும் உணவளித்து அசத்தியுள்ளார். அமெரிக்காவில் மலிவு விலை விமான சேவையை “பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ்” என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த திங்கட்கிழமை 160 பயணிகளுடன் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட்டு டென்வர் நகரை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது. அன்று டென்வர் பகுதியில் மோசமான வானிலை நிலவியதால் வழியில் உள்ள செயென்னே விமான நிலையத்தில் தரையிறங்கி நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும்படி விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே போய் சேர வேண்டிய நேரத்தை விட தாமதமாகி விட்டதால் சிறிய விமான நிலையமான செயென்னேவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் அமர்ந்திருந்த…
Read Moreதிருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் பலி
Five killed as cars ram each other in Tiruchi-Madurai NH திருச்சி அருகே நள்ளிரவில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த கோர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:– தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பத்திரம் கருப்பூர் வானுவதெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 58). இவரது உறவினர் கும்பகோணம் பழனிச்சாமி நகரை சேர்ந்த கண்ணன் (50). இவரது மனைவி விஜய லெட்சுமி (42). இந்த தம்பதியின் மகன் ராஜ்குமார் (15). கும்பகோணம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாரிசாமி (47). இவர்கள் 5 பேரும் வெங்கடசாமியின் உறவினர் குழந்தைக்கு அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த காதணி விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு 10 மணிக்கு ஒரு சொகுசு காரில் வீட்டில் இருந்து புறப்பட்டனர். காரை…
Read Moreஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்ட யானை விடுவிப்பு
Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India ஐம்பது ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்ட யானை பாகனிடமிருந்து விலங்குகள் அறக்கட்டளை ஊழியர்களால் மீட்கப்பட்டது. இதை தனது அறிவால் உணர்ந்த அந்த யானை கண்ணீர் வடித்து தனது நன்றியை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச தெருக்களில் பணம் வசூலிக்க பயன்படுத்தப்பட்ட யானைகள் பலவும் பழக்கப்படுத்தப்படுகின்றன. அதுபோன்ற ஒரு ஆண் யானைதான் 50 வயதான ராஜு. வெயில், மழை என்று பார்க்காமல் அந்த யானை யாசகம் கேட்க பயன்படுத்தப்பட்டது. அதன் கால்களில் இரும்பு சங்கிலி பிணைக்கப்பட்டிருந்தது, இதுகுறித்து அறிந்த லண்டனை தலைமையிடமாக கொண்ட பால்மர் கிரீன் என்ற விலங்குகள் அறக்கட்டளை அமைப்பினர் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த யானையை மீட்க கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ராஜுவை மீட்க விலங்கு…
Read Moreதிருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் பீரோக்களை உடைத்து 369 பவுன் நகைகள் கொள்ளை
369 sovereign gold jewels stolen from business man house செய்யாறில், தொழில் அதிபரின் வீட்டில் புகுந்து 369 சவரன் நகை, ஒன்றைரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து திங்கள்கிழமை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. செய்யாறு பெரிய தெருவில் வசிப்பவர் வி.ஜி.பாபு (52). இவர் ரைஸ் மில், திருமண மண்டபம் ஆகியவற்றை வைத்து தொழில் செய்து வரும் தொழில் அதிபர் ஆவார். இவரின் மூத்த மகள் பரணிப்ரியாவின் திருமணம் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த உறவினர்களை அழைத்துக் கொண்டு தொழிலபதிபர் பாபு ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்கு சென்றாராம். வீட்டின் காவலுக்காக சம்பத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தததாகத் தெரிகிறது. அவரும் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து திருமணத்திற்கு சென்றுவிட்டதாகத் தெரிகிகிறது. திங்கள்கிழமை காலை திருமணம்…
Read Moreதிருவள்ளுவர் மாவட்டத்தில் சுற்றுச்சுவர் விழுந்த விபத்தில் தனது உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய கொத்தனார்
tiruvallur wall collapse my father sacrificed his life to save me son interview திருவள்ளூர் மாவட்டம் உப்பரப்பாளையம் என்ற இடத்தில் நடந்த குடோன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரு கொத்தனார் தனது மகன் மீது விழுந்து அவரது உயிரைக் காத்து தான் இறந்துள்ள உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. அலாமதி அருகேயுள்ள உப்பரபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 2 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கிடங்குகளின் அருகே புதிதாக மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணியில் ஆந்திரா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவரையொட்டி குடிசை வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இதில் குடும்பம், குடும்பமாக தொழிலாளர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சுற்றுச்சுவர் இடிந்து குடிசை வீடுகளில்…
Read Moreசென்னையில் இடிந்து விழுந்த11 மாடிகட்டிட உரிமையாளர் மனோகரன்அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயம்
Documents related to Manoharan, owner of collapsed 11 storey building in Moulivakkam was disappeared. சென்னையில் இடிந்து விழுந்த, ‘பிரைம் சிருஷ்டி’ நிறுவனத்தின்11 மாடி கட்டிட உரிமையாளர் மனோகரன் அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் தேடுகின்றானர். இரு நபர் குழு: 11 மாடி கட்டிடம் கடந்த மாதம், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், 61 பேர் பலியாயினர். இது தொடர்பாக, கட்டிட உரிமையாளர் மனோகரன் மற்றும்அவர் மகன் முத்து ஆகியோரை கைது செய்துள்ளனர். மனோகரன் மதுரையைச் சேர்ந்தவர் மற்றும் அவரது நிறுவனம் துவங்கியதும் மதுரையென்பதால், அவரின் விவரங்களை சேகரிக்கும் பணி மதுரை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் தலைமையில், இருவர்குழு நியமிக்கப்பட்டு, பிரைம் சிருஷ்டி நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை, ஆய்வு செய்தனர். அங்கு வீடு வாங்கியவர்கள்…
Read Moreஅமெரிக்கா வானியல் ஆராயச்சியாளர்கள் புதிய கண்டுபிடித்துள்ளனர்
Earth-like planet raises hope of life in space மெரிக்கா வானியல் ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையில் புவியில் இருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிடித்துள்ள புதிய கிரகமானது வாழ்வாதாரத்தைக் கொண்டு விளங்குவதாக தெரிய வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலமாக புவியைப் போலவே அமைப்புடைய வேறு சில கிரகங்களும் அண்டத்தில் இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. மேலும், அவை புவிக்கு மிக அருகிலேயே இருக்கவும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புவியை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட இந்தக் கிரகமானது இரட்டை நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரத்தினை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றது. மேலும், அந்த நட்சத்திரத்திற்கும், புதிய கிரகத்திற்கும் உள்ள தொலைவானது கிட்டதட்ட சூரியன் மற்றும் புவிக்கு இடையிலான தொலைவு போன்றே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய கிரகம் சுற்றிவரும்…
Read More