திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்களிடம் பாலியல் உறவு வைத்தவருக்கு 7 ஆண்டு சிறை உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் , மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் 2013ம் ஆண்டு தன்னை மருத்துவர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் என்னிடம் பாலியல் உறவு வைத்த பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார் . அதுமட்டும் இல்லாமல் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் . அந்த பெண்ணிடமும் பாலியல் உறவு வைத்துள்ளார்.அதனால் அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் போட உத்தரவிட்டது. மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம் .இந்த தண்டனையை எதிர்த்து…

Read More

கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம் புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.இறுதியாக தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும் 22ம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடதக்கது.

புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர் . இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும்…

Read More

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்! நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது.சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக அந்த பெண்ணின் தாய் தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய…

Read More

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது புதுடெல்லி:தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றது . போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள் . பலியானதை தொடர்ந்து, ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ,சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்தது.இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது .அதில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளதால் , பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது .இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் வரை இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

புதுடெல்லி:தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றது . போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள் . பலியானதை தொடர்ந்து, ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ,சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்தது.இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது .இந்த மனுவில் “தாக்கல் செய்த மனுவை விசாரிக்க போதிய நேரம்…

Read More

மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.மு.க. ஸ்டாலின் விதிக்கவேண்டுமென என் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு முன்வைப்பதாக அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவது வாடிக்கைதான் என்றும் ,மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை:திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.மு.க. ஸ்டாலின் விதிக்கவேண்டுமென என் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு முன்வைப்பதாக அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவது வாடிக்கைதான் என்றும் ,மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Read More

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்று மத்திய அரசு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. அந்த மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.ரஃபேல் முறைகேடு விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது . இந்த வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான…

Read More

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்ட வழக்கில் அவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

Read More

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள மாங்காடு அருகே தஷ்வந்த் என்பவன் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து , பிறகு அந்த சிறுமியை எரித்துக் கொலை செய்தான். பிறகு கொலை செய்த தஷ்வந்த்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு ,பிறகு மும்பை தப்பி சென்றான்.இதை அறிந்த காவல்துறை தனிப்படை அமைத்து 6-ம் தேதி மும்பையில் தஷ்வந்தை செய்தனர்.செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்திருந்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்திருந்தது.உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு தூக்குத்தண்டனை என்பதால் மனுவை ஏற்று கொண்டோம் என்றனர் .அரசியல் சாசன பிரிவு 302-ன் படி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது சரியா என்று கேட்டு , தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.இந்த தூக்கு தஷ்வந்திக்கு தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

டெல்லி:கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள மாங்காடு அருகே தஷ்வந்த் என்பவன் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து , பிறகு அந்த சிறுமியை எரித்துக் கொலை செய்தான். பிறகு கொலை செய்த தஷ்வந்த்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு ,பிறகு மும்பை தப்பி சென்றான்.இதை அறிந்த காவல்துறை தனிப்படை அமைத்து 6-ம் தேதி மும்பையில் தஷ்வந்தை செய்தனர்.செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்திருந்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி…

Read More

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி சென்னை: சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு விவசாய நிலங்களை கைப்பற்றினார்கள் .இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள், நில உரிமையாளா்கள் என சுமாா் 50 போ் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது , இந்த தீர்ப்பில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய உடைமையாளா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரங்களில் சரி செய்து நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு விடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் தொடா்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு விவசாய நிலங்களை கைப்பற்றினார்கள் .இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள், நில உரிமையாளா்கள் என சுமாா் 50 போ் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது , இந்த தீர்ப்பில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய உடைமையாளா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரங்களில் சரி செய்து நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு விடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

சென்னை – சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு!

சென்னை - சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு! சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடரமாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி - எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு 8-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.

சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம்…

Read More